Thursday, November 12, 2015
தூங்காவனம் - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: கமல் ஹாஸன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ்,
கிஷோர், ஆஷா சரத்
ஒளிப்பதிவு: சானு வர்கீஸ்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல்
இயக்கம்: ராஜேஷ் எம் செல்வா
ப்ரெஞ்ச் மொழிப் படமான ஸ்லீப்லெஸ் நைட் -ன் (Nuit Blanche) அப்பட்டமான தழுவல் தூங்கா வனம். அப்பட்டமான என்றால் எந்த அளவுக்கு தெரியுமா...
சில காட்சிகளில் கேமரா கோணங்களைக் கூட மாற்றாத அளவுக்கு, என்பது ஒரிஜினல் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆனாலும் ஓரளவு திருந்தச்
செய்திருக்கிறார்கள். 'பிற நாட்டு கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற வகை தழுவல் இது.
பணத்துக்காக எதையும் செய்யும் போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரி கமல் ஹாஸன். ஒருமுறை பெரிய போதை மருந்து பார்சல் இவரிடம் சிக்க, அதை அப்படியே அமுக்கிவிடுகிறார். இதை இன்னொரு போலீஸ் அதிகாரியான த்ரிஷா பார்த்துவிடுகிறார். 'பொருளுக்கு' சொந்தக்காரரான தாதா பிரகாஷ் ராஜ், கமலின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு டீல் பேச, மறைத்து வைத்த போதைப் பொருளை எடுக்க கமல் போகிறார். ஆனால் அங்கு பொருள் இல்லை. மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும் கமல், மகனை எப்படி மீட்கிறார்? போதைப் பொருளைக் கடத்தியவர் யார்? அதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ரீமேக் என்றாலும் அதில் கமல் தன் பாணியில் எதையாவது சேர்ப்பார், உன்னைப் போல் ஒருவன் மாதிரி. ஆனால் இதில் அப்படி எதையும் செய்யவில்லை. இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராஜேஷ் எம் செல்வாவும் கமலும், 'எதற்கு பெரிய ரிஸ்க்' என நினைத்து இந்தக் கதையைத் தேர்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
ஆனால் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வரும் பார்வையாளர்களை இந்தப் படம் எந்த அளவு திருப்திப்படுத்தும் என்ற கேள்வி உள்ளது. காரணம் போதை மருந்து கடத்தல், போலீஸ் அதிகாரி டபுள் க்ராஸிங், மகனை பணயமாக வைப்பது என்பதெல்லாம் தமிழுக்கு புதிய களமல்லவே! நடிப்பைப் பொருத்தவரை வழக்கமான கமல் ஹாஸன். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆக்ஷன் காட்சிகளில் வயதைத் தாண்டி உழைத்திருக்கிறார். குறிப்பாக அந்த சமையலறை சண்டைக் காட்சியில் கமல் மற்றும் த்ரிஷா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு இது குறிப்பிடத்தக்க படம். பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர்.
சாம்ஸும் கமலும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சியில் ஏபிசி என்ற பாகுபாடு தாண்டி அரங்கம் அதிர்கிறது. படத்தின் முக்கிய பலம் ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் சனு வர்கீஸின் நுட்பமான ஒளிப்பதிவு. ஒரே ஒரு பாடல்தான். அதையும் வித்தியாசமாகப் படமாக்கியுள்ளனர். அட, அதுக்குள்ள முடிஞ்சிருச்சே எனும் அளவுக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருப்பது நல்ல டெக்னிக். இல்லாவிட்டால் இந்தப் படம் பெரிய கொட்டாவியை வரவழைத்திருக்கும். அந்த வகையில் தப்பித்தது!
விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஷார்ஜாவில் நாளை 13ம் தேதி கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் அறிமுக விழா!!
கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் அறிமுக விழா ஷார்ஜாவில் நாளை 13ம் தேதி நடைபெறுகிறது.
புத்தகம் குறித்த ஆய்வுரையை பிரபல சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா வழங்கினார். இந்நிலையில் வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தின் அறிமுக விழா வரும் 13ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற உள்ளது.
அமீரகத்திற்கான இந்திய தூதர் மேதகு சீதாராமன் நூலை அறிமுகம் செய்து வைக்கிறார். வைரமுத்து ஏற்புரை வழங்குகிறார்.
விழா ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள அறை எண் 5ல் மாலை 7. 45 மணி முதல் நடைபெறுகிறது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 18ம் தேதி வரை நீட்டிப்பு!!
இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை (403),
மருத்துவம், கிராம சுகாதாரப் பணிகள் (213),
பதிவுத் துறை (59),
வணிக வரித் துறை (191),
சுகாதாரத் துறை (136),
பள்ளிக் கல்வி இயக்ககம் (76),
தலைமைச் செயலக நிதித் துறை (26),
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62),
மீன்வளத் துறை (45),
போக்குவரத்துத் துறை (35)
உள்ளிட்ட துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை அக்டோபர் 12 இல் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் www.tnpsc.gov.in வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள் மூலமாக உரிய விண்ணப்ப மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திட கடைசி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு contacttnpssc@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.