முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 28, 2015

கலைகட்டும் ராமநாதபுர மாவட்ட புத்தகத்திருவிழா!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகதிருவிழாவில் ஏராளமான மாணவமாணவிகள் கலந்து கொண்டுபுத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 23–ஆம் தேதி முதல் கலாம் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 134 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனை மாணவமாணவிகள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த நாட்களாக ஏராளமான மாணவமாணவிகள்பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் மாணவமாணவிகள் தாமாக முன்வந்து உண்டியலில் பணம் சேமித்து புத்தகத்தை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு புத்தகம் வாங்கிட ஊக்குவிக்கப்பட்டனர். ரூ.10 முதல் ரூ. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் பார்வைக்கும்விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.


தினசரி மாலையில் அறிஞர்களுடனான கலந்துரையாடல்கள்சிந்தனையாளர்கள்கவிஞர்கள்எழுத்தாளர்களின் சிறப்புரைகள் நடைபெறுகிறது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம்!!

No comments :
     
ராமேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள்பெறும் முகாம் நடைபெற்றது.


ராமேசுவரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்டு மனுக்கள் பெறும் முகாம் நடை பெற்றது. இதையொட்டி ராமேசுவரத்திற்கு வந்த அன்வர்ராஜா எம்.பி.யை நகரசபை தலைவர் அர்ச்சுனன் வரவேற்றார். தொடர்ந்து ராமேசுவரம் காட்டுப் பிள்ளையார் கோவில் மற்றும் ராம தீர்த்தம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுவையும் பெற்றுக் கொண்டார். அப்போது எம்.பி.யிடம் ஏராளமான பெண்கள் முதியோர் உதவி தொகை,விதவை பெண்களுக்கான உதவி தொகை கேட்டும் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டும் மனு அளித்தனர்.



மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி. அனைத்து மனுவையும் பரிசீலித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி அதற்கான ஏற்பாடு களை செய்து தருவதாகவும் தெரிவித்தார். அப்போது உடன் ராமேசுவரம் நகரசபை தலைவர் அர்ச்சுனன்,துணை தலைவர் குணசேகரன்,கட்சியின் நகர் செயலாளர் பெருமாள்,அவை தலைவர் பிச்சை, துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், கவுன்சிலர்கள் நாகசாமி, ராதாகிருஷ்ணன்,வீட்டுவசதி சங்க துணைத்தலைவர் ஸ்ரீகாந்த், மின் வாரிய பிரிவு கோட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், மேலவை பிரதிநிதி முனியசாமி, நிர்வாகிகள் அன்னகர்ணன், மாங்குடி செந்தூரான், சுதாகர், ராஜேந்திரன், வஸ்தாவிவெற்றிவேல், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
இதேபோல் ஓலைக்குடா, மாங்காடு, சம்பை, ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், எம்.ஆர்.டி.நகர், தெற்கு கரையூர் போன்ற பகுதிக்கும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அன்வர்ராஜா எம்.பி. குறைகள் கேட்டு மனுவை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)