Tuesday, October 27, 2015
B.S. அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் Ph.D. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2015!!
சென்னையிலுள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில்
பிஎச்.டி. படிப்புகள் படிக்க அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சென்னையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னணியில் உள்ள
பல்கலை.களில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகமும் ஒன்று.
இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்.டி படிப்புகள் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்.டி படிப்புகள் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் பிஎச்.டி
படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்த பல்கலைக்கழகம். ஜனவரியில்
சேரலாம்... தற்போது ஜனவரியில் பிஎச்.டி. படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க
பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகைளிலும் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும்
மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு
செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ரூ.1,000-த்துக்கு கேட்புக் காசோலை(டி.டி) எடுத்து
Director
(Admissions),
B.S.
Abdur Rahman University,
Seethakathi
Estate,
Vandalur,
Chennai-600048
என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு
+91-44-22751347,48,50,75
Extn:274,275 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
admissions@bsauniv.ac.in
என்ற இ-மெயில் மூலம் பிஎச்.டி. சேர்க்கை குறித்து விவரங்களை
அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.bsauniv.ac.in/admission-for-research-scholars
என்ற லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
சார்ஜாவில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்டுத் தருமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் கோரிக்கை!!
துபை நாட்டில் சார்ஜாவில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்டுத்
தருமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திருப்புல்லாணி அருகே வடக்கு கும்பரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்.
இவரது மனைவி ஆனந்த வள்ளி (33).
முனீஸ்வரன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துபை நாட்டில் உள்ள
சார்ஜாவுக்கு பெயிண்டர் வேலைக்காக அழைத்து செல்லப்பட்டாராம். அங்கு சம்பளமும், உணவும் தராமல் துன்புறுத்துவதாகவும், அவரை விடுவிக்கவும்
மறுப்பதாகவும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு தெரிவிக்கிறாராம். மேலும் விசா தேதி
முடிந்தும் தன்னை அனுப்பி வைக்க வில்லை என்றும் கூறுகிறாராம்.
அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவரை மீட்டுத் தருமாறு
ஆனந்தவள்ளி ஆட்சியர் க.நந்தகுமாரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
மகனை மீட்டுத்தர பெற்றோர் மனு: முதுகுளத்தூர் தாலுகா
சாம்பக்குளம் அருகேயுள்ளது அப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.அர்ச்சுனனும், இவரது மனைவி முனியம்மாளும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை
சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது: குவைத் நாட்டில் உள்ள
கம்பெனிக்கு ஓட்டுநர் வேலைக்கு எங்கள் மகன் சண்முகவேலை, பரமக்குடியைச் சேர்ந்த முகவர் மூலம் அனுப்பி வைத்தோம். அங்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளமாகத் தருகிறார்களாம். பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்குமாறு
துன்புறுத்துகிறார்களாம். தான் கொத்தடிமையாக நடத்தப்படுவதாக தொலைபேசியில் எங்கள்
மகன் தெரிவித்தார். எனவே அவரை மீட்டு எங்களிடம் சேர்க்க வேண்டும். மேலும் அந்த
முகவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் புகார்!!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பொய்
வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் அதன் நிர்வாகிகள்
திங்கள்கிழமை புகார் செய்துள்ளனர்.
அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் இ.அப்துல்நாசர் தலைமையில் 100 பெண்கள் உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு
வந்திருந்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து
அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
அக்.15 ஆம் தேதி பெரியபட்டினத்தில் முகம்மது ரைசுதீன் என்பவரை மர்ம நபர்கள்
தாக்கியதாக கூறி,
அக்கிராம பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத்
தலைவர் உள்ளிட்ட 11
நிர்வாகிகள் திருப்புல்லாணி காவல் நிலையத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். அதில் 3
பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 10 பேர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் காவல்துறை தீர
விசாரிக்காமல் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. எனவே நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என
அதில் தெரிவித்துள்ளனர்.
செய்தி: தினசரிகள்