Monday, October 26, 2015
தொண்டி அருகே கொக்கு வேட்டையாடிய இருவர் கைது!!
தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கிராமத்தில் வன பகுதிகளில்
பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன்
அடிப்படையில் மாவட்ட வன உயிரினகாப்பாளர் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் பாஸ்கரன் ,வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ் , விஜயபாஸ்கர், அய்யர்பிச்சை ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பறவைகளை வேட்டையாடியது தொடர்பாக
சோளியக்குடியை சேர்ந்த நாகராஜ் (வயது30), செய்யது (28) ஆகிய 2
பேரையும் பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 25கொக்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து அபராதம் வசூலித்தனர். பின்னர் கொக்குகள் சம்பை மாங்க்ரோவ் காடுக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன.

செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார பண்டங்கள் விற்பனையாளர்கள் முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும்!!
பொதுமக்களுக்கு தரமான சுவீட்ஸ், காரங்களை விற்பனை செய்ய வேண்டும் என கலெக்டர்
அறிவுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார
பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து உணவு பொருள் தயாரிப்பாளர்கள்
மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம்
பெற்றிருக்க வேண்டும்.
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூல பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக புகார்கள் இருப்பின், ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அலுவரிடம் 04567-231170 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்