Sunday, October 25, 2015
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு - TNPSC அறிவிப்பு!!
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு
திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம்,
நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு
டிசம்பர் 13-ஆம் தேதி காலை,
மாலை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட
துறைகளில் முதல் அல்லது இரண்டாம் நிலையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
என்ற விகிதத்தில் ஊதியம் இருக்கும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
http://tnpscexams.net
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்தப் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 4 ஆகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஷார்ஜாவில் சர்வதேச புத்தககண்காட்சி நவ 4ம்தேதி தொடங்கி 14ந்தேதிவரை நடைபெறுகிறது!!
ஷார்ஜாவில் ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நவ 4ம்தேதி தொடங்கி 14ந்தேதிவரை சர்வதேச புத்தககண்காட்சி நடைபெறுகிறது.இந்த
கண்காட்சி 34வது ஆண்டாக
நடைபெறுகிறது.
இதில் 64 நாடுகளை சேர்ந்த 1502
புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த
கண்காட்சியில் 15லட்சம் புத்தகங்கள்
காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
மேலும் 210 மொழிகளில் இந்த புத்தகங்களை இடம் பெறும்.
சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிம் வழிகாட்டுதலில் நடைபெற உள்ளது.இதில் 890 உள்ளூர் மற்றும் அரபு புத்தக விற்பனையாளர்களும் 433 வெளிநாட்டு புத்தக நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இந்த புத்தக கண்காட்சியையோட்டி 900 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 110 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
மேலும் 210 மொழிகளில் இந்த புத்தகங்களை இடம் பெறும்.
சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிம் வழிகாட்டுதலில் நடைபெற உள்ளது.இதில் 890 உள்ளூர் மற்றும் அரபு புத்தக விற்பனையாளர்களும் 433 வெளிநாட்டு புத்தக நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இந்த புத்தக கண்காட்சியையோட்டி 900 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 110 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுர மாவட்டத்தில் பரவலாக நல்ல சாரல் மழை!!
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை முழுவதும் வானம்
மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி
இருப்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை
முழுவதும் வானம் மேக மூட்டத்துடனையே காணப்பட்டது. அதிகாலை மாலை முதல் இரவு வரை
தொடர்ந்து லேசான மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்தது.
ஆனால், பாம்பனில் 11.80 மி.மீ,மண்டபத்தில் 31
மி.மீ,ராமேசுவரத்தில் 13.20 மி.மீ,தங்கச்சி மடத்தில் 2.80
மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. மாவட்டத்தின் மொத்த
மழையளவு 58.மி.மீட்டராகும். சராசரி மழையளவு 3.68 மி.மீட்டராகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)