Saturday, October 24, 2015
ராமநாதபுரத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு!!
ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சரத்குமார்(24).
இவரது நண்பர் சத்யாநகர் ராஜ்கபூர்(30).
இவர்கள் இவரும் நேற்று மாலை சின்னக்கடை
தெருவில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த ராஜ்கபூர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த ராஜ்கபூர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
மாநில அளவிலான தப்பாட்ட போட்டிக்கு ராமேசுவரம் மாணவிகள் தேர்வு!!
மாநில அளவிலான தப்பாட்ட போட்டிக்கு ராமேசுவரம் மாணவிகள்
தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பயிற்சி
மத்திய அரசு அழிந்துவரும் பாரம்பரிய விளையாட்டு, கலைகளை மீண்டும் உயிர்ப்பித்து கொண்டுவரும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவ– மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின்
உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு தப்பாட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் மத்திய
அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் மூலம் வருகிற 30–ந்தேதி,31–ந்தேதி மாநில அளவிலான தப்பாட்ட போட்டி கலா உற்சவ் என்ற தலைப்பில் நாமக்கல்லில்
நடக்கிறது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தநிலையில் மாநில அளவிலான தப்பாட்ட போட்டியில்
கலந்துகொள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த போட்டியில் ராமேசுவரத்தில் உள்ள தமிழக
அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல் பட்டு வரும்
எஸ்.பி.ஏ.அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 10 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் வெற்றிபெற்று தேர்வாகி உள்ளனர். பள்ளி தாளாளர்
செல்வராஜ்,
உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், தலைமை ஆசிரியர் சந்திரா ஆகியோர் ஏற்பாட்டில் ராமேசுவரம் பள்ளி மாணவிகள் உடற்
கல்வி ஆசிரியை கோபிலட்சுமி தலைமையில் நாமக்கல் சென்று மாநில அளவிலான போட்டியில்
கலந்துகொள்கிறார்கள்.
பரிசுகள்
இதையொட்டி மாணவிகள் பள்ளியில் தப்பாட்ட பயிற்சியில்
தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மாணவிகளுக்கு ஓலைக்குடாவை சேர்ந்த தப்பாட்ட
பயிற்சியாளர் ஜெரோன்குமார்,
ஜோஸ்கஸ் ஆகியோர் தப்பாட்ட பயிற்சி அளித்து வருகின்றனர்.
மாநிலஅளவிலான போட்டியில் வெற்றி வெறும் பள்ளி டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான
போட்டிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். தேசிய அளவிலான தப்பாட்ட போட்டியில்
வெற்றிபெறும் பள்ளிக்கு மத்திய அரசு மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
செய்தி: தினத்தந்தி
ராமநாதபுரத்தில் கலாம் புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நவம்பர்-1ம் தேதி வரை நடக்கிறது!!
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் பெயரை நினைவு கூறும் வகையில்
கலாம் புத்தகத் திருவிழா என்ற பெயரில் இந்த புத்தக திருவிழா நடைபெற்றது. கலை
இலக்கிய ஆர்வலர் கழகமும்,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்
சங்கமும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர்.
புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் வந்துள்ளனர்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில்,
ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். மக்களவை
உறுப்பினர் அ.அன்வர்ராஜா,பதிப்பாளர் சங்க தலைவர் மெ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கலை இலக்கிய ஆர்வலர் சங்கத் தலைவர் டாக்டர்.அ.சின்னத்துரை அப்துல்லா வரவேற்றார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ்
விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் மாலை 6 மணியளவில் கவிஞர். நந்தலாலா, தேசம் போகும் பாதை என்ற
தலைப்பிலும்,
முனைவர் செ.சுந்தரவள்ளி, வேர்களைத் தேடி என்ற தலைப்பிலும்
பேசினர். ராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மயில்வாகனன் மாலையில்
நடைபெறும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.
இந்த விழா தொடர்பாக கலை இலக்கிய ஆர்வலர் சங்கச் செயலர் டாக்டர். வான்தமிழ்
இளம்பரிதி கூறியது: இந்த ஆண்டு புத்தகங்கள் அதிகமாக விற்பதற்காக புத்தக வாசிப்பு
இயக்கத்தை நடத்தியுள்ளோம். சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்குப் புத்தகம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து
வைக்க கடந்த 3
மாதத்துக்கு முன்பாகவே உண்டியல்கள் வழங்கியுள்ளோம். புத்தக
அரங்கின் இடது புறத்தில் சிறுதானியத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உணவுத்
திருவிழாவும்,
மூலிகை கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. வலது புறத்தில்
அறிவியல் கோளரங்கமும்,
அறிவியல் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது என்றார்.
செய்தி: தினசரிகள்