முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 19, 2015

ஒரு கிலோ சீலாமீன் ரூ.300-க்கு விற்பனை, அலைமோதும் மக்கள் கூட்டம்!!

No comments :
பனைக்குளம் மீன்மார்க்கெட்டில் சீலா மீன்களின் விலைவீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ சீலாமீன் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளத்தில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு ராமேசுவரம்பாம்பன்மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் அதிக அளவில் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மீன்களின் விலை அதிகமாக இருந்துவந்தது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல இறால்நண்டுபாறைவாளைசூடைநெத்திலிநகரை உள்ளிட்ட மீன்வகைகளும் மற்ற மீன் மார்க்கெட்டுகளை விட இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. 



இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சீலா மீன்கள் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த 2 வாரமாக சீலா மீன் சீசன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீன் பிரியர்கள் பனைக்குளத்துக்கு வந்து சீலா மீன்களை வாங்கிச்செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் மிகவும் பிரபலமான கரைவலை மீன்பிடிப்பு மூலம் பிடிபடும் மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

கடலில் இருந்து பிடித்தவுடன் ஐஸ்கட்டிகள் எதுவும் வைக்காமல் உடனடியாக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் இங்கு வந்து மீன்களை விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். இதேபோல ஆற்றங்கரை, அழகன்குளம், சத்திரம் புதுகுடியிருப்பு, கிருஷ்ணாபுரம், சோகையன்தோப்பு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் கரைவலை மீன்களை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கிச்செல்கிறார்கள். மொத்தத்தில் பனைக்குளம் மீன்மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் மீன்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)