Saturday, October 17, 2015
அரசாங்க டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சென்னை, கோவை, திருச்சி,
மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர்.
அதேபோல், சென்னை தொழிலாளர் கமிஷனர்
அலுவலக வாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை
கமிஷனர் அலுவலகம்,
கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர்.
இப்பதவிக்கு ஓட்டுனர் உரிமத்துடன், இரண்டு ஆண்டு அனுபவம்
உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியானவர்களிடம்
இருந்து,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, தேனாம்பேட்டை;
கோவை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் பின்புறம்;
திருச்சி மான்னார்புரம், காஜா மியான் தெரு;
மதுரை, எல்லீஸ் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடம் ஆகியவற்றில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திலும், விண்ணப்பம் பெற்றுக்
கொள்ளலாம்.
அல்லது
“பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவ.,6ம் தேதிக்குள்,
சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்,” என, தொழிலாளர் ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
அமெரிக்காவில் விருது பெற்று பாம்பன் திரும்பிய மீனவப் பெண் திருமதி. லட்சுமியை பொதுமக்கள் வரவேற்றனர்!!
கடல் வளங்களை பாதுகாத்தலுக்காக அமெரிக்காவில் விருது பெற்று பாம்பன் திரும்பிய மீனவப் பெண்ணை பொதுமக்கள் வரவேற்றனர்.
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் சின்னப் பாலம் பகுதியில் வசித்து வருபவர் மீனவப் பெண் லட்சுமி. இவர் மன்னார் வளைகுடா பாசி சேகரிப்பு பெண்கள் கூட்டமைப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு குழுவாக வைத்து அதன் பொறுப்பாளராக உள்ளார்.
இவர், பாம்பன் முதல் மண்டபம் வரை தீவு அருகே உள்ள கடல் பகுதியில் பாசி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். பாசி சேகரிப்பில் மீனவப் பெண்களை ஒரு கட்டுப்பாடுடனும், பாசிகள் முழுமையாக அழியாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பாசி சேகரிப்பில் ஈடுபடுத்தி வந்தார். இந்தநிலையில் கடல் வளங்களை பாதுகாத்தலுக்கான விருதுக்கு அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி என்ற தொண்டு நிறுவனத்திடம் பாம்பன் லட்சுமி பெயரை பேடு தொண்டு நிறுவனமும், மீன் பிடி தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பும் பரிந்துரை செய்தன. அதன்பேரில் கடல்வளங்களை பாதுகாத்தலுக்கான விருது மற்றும் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பு ரூ.6 ½ லட்சம் ) மீனவப் பெண் லெட்சுமிக்கு அமெரிக்காவில் சீக்காலஜி தொண்டு நிறுவனம் வழங்கியது.
இந்த விருதை அமெரிக்கா சென்று பெற்ற அவர், பாம்பன் திரும்பினார். அவரை மேளதாளம் முழங்க பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பேடு தொண்டு நிறுவன நிர்வாகிகள், மீன் பிடிதொழிலாளர் யூனியன் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், பள்ளி மாணவ-மாணவிகள், ஜமாத் நிர்வாகிகள் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்து லட்சுமி கூறியதாவது:-
கடல் வளங்களை பாது காத்தலுக்கான விருதுக்கு எனது பெயரை பரிந்துரை செய்து விருது பெற பரிந்துரை செய்த மன்னார் வளைகுடா பாசிசேகரிப்பு மீனவப் பெண்கள் கூட்டமைப்பிற்கும், தொண்டு நிறுவனம் மற்றும் மீன் பிடி தொழிலாளர் யூனியனுக்கும், விருதை வழங்கி கவுரவித்த அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி தொண்டு நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காசென்று இந்த விருது வாங்கி வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விருதுடன் கிடைத்த பரிசுத் தொகையை பாம்பன் சின்னப்பாலத்தில் உள்ள அரசு பள்ளியின் கட்டமைப்பிற்கும், சின்னப்பாலம் கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கும் பயன்படுத்துவேன்.
செய்தி; தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ராமேசுவரத்தில் பொதுக்கூட்டம், 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை அனைவரும் ஆதரிக்கவேண்டும் - விஜயகாந்த்!!
தமிழகத்தில் தே.மு.தி.க. இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கமுடியாது என்று விஜயகாந்த் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் “மக்களுக்காக மக்கள் பணி” திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும்விழா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாணவர் தினவிழா, பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் ராமேசுவரத்தில் நேற்றிரவு நடந்தன. விழாவுக்கு மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா தலைமை தாங்கினார். நகர் செயலாளர் முத்துக்காமாட்சி வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், மீனவரணி செயலாளர் முருகநாதன், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், பொருளாளர் திலீப்காந்த் உள்பட பலர் பேசினர்.
விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
அப்துல்கலாம் பிறந்தநாள் தே.மு.தி.க. சார்பில் மாணவர்கள் தினமாக தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் இதை கொண்டாட முடிவு செய்யப்பட்டு அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேப்டன் மட்டுமே அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்துள்ளார். இங்கு கூடிஉள்ள கூட்டத்தை காணும்போது ஆட்சிமாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
இறுதிவரை அப்துல்கலாம் மாணவர்களுடன் இருந்ததால் அவரது பிறந்த நாளை மாணவர் தினம் என்று அறிவிப்பதே சரியானது. விவேகானந்தர் பிறந்தநாள் இளைஞர்கள் தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் கனவு ஊழல் இல்லாத ஆட்சி அமைவது, கேப்டன் ஒருவரால் தான் ஊழல் இல்லாத ஆட்சியை தரமுடியும்.
கடிதம் எழுதினால் போதுமா?
சென்னையில் இருந்து கோவை சென்று கொடநாடு செல்லமுடிந்தவர்கள், ராமேசுவரத்துக்கு வராதது வேடிக்கையாக உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 படகுகளையும் 24 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதுகிறார். கருணாநிதியும் இதைத்தான் செய்தார்.
தேர்தல் காலத்தில் ஜெயலலிதா விலைவாசி உயர்வை பட்டியலிட்டு மேடையில் பேசினார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் மேலும் விலைவாசி உயர்ந்துள்ளது. நானும் கேப்டனும் உண்மையை மட்டுமே பேசுவோம். அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பிடவசதி, குடிநீர்வசதி இல்லை, மதிய உணவு தரமானதாக இல்லை. இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் தரமாக இல்லை. தமிழகத்தில் தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே மக்களே இல்லை என்ற நிலை உருவாகும். பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். அரசுபஸ்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை மக்கள் ஆதரிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பூரண மதுவிலக்கு
தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-
மறைந்த அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் உள்பட அனைவரும் வந்தனர். ஆனால் முதல்-அமைச்சர் வரவில்லை. இதில் இருந்து அவரது மனநிலை என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்துக்கு நன்மை ஏற்படாது. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இலங்கை கடற்படை தொல்லை கொடுத்து வருகிறது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தமிழகத்தில் தே.மு.தி.க. இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைக்க, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை அனைவரும் ஆதரிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள், மடிக்கணினி, உபகரணங்கள் மற்றும் 3 மீனவ குடும்பங்களுக்கு உதவி உள்பட ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார். முடிவில் நகர் அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் இபுராகிம், கதிர்வேலன், பெரியபட்டணம் தொழில் அதிபர் சிங்கம்பசீர், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னையா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நம்பி ஹரிராம்,நகர் செயலாளர்கள் முத்தீஸ்வரன், அன்பு தெட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் சண்முகசுந்தரம்,துணைசெயலாளர் நாராயணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்ஹக்கீம், வேல்மயில்முருகன், ராமநாதன், அசோக்குமார், முருகன், பேரூர் கழக செயலாளர் மாணிக்கவேல்,கேப்டன் மன்ற துணைச்செயலாளர் நியூட்டன், நகர் அவைத்தலைவர் செந்தில், பொருளாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில்
சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் விடுதிகளில் காலியாக உள்ள 17 ஆண் மற்றும் 10 பெண் சமையலர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில்
நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறன்றன.
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க
வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு சமைக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2015 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35
வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர்மரபினர் 32
வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ராமநாதபுரம் மாவட்ட
எல்கைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
இந்த தகுதியுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில்
முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், தகப்பனார் பெயர்,
பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி,
கல்வி தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும். விதவை, முன்னாள் ராணுவத்தினர்,
மாற்றுதிறனாளிகள், கலப்பு திருமணம்
புரிந்தோர் வேலைவாய்ப்பு பதிவு விவரம் இருப்பின் குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்–1 ஆகிய விவரங்கள் மற்றும்
ஆவணங்களுக்கு சான்று,
நகல்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30–ந்தேதி பிற்பகல் 5
மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்படமாட்டாது. கூர்ந்தாய்வுக்கு பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு
நேர்காணல் நடைபெறும்,
அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து
கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் நடைபெற்ற அம்மா சிமெண்டு விற்பனை தொடக்க விழா!!
கீழக்கரையில் அம்மா சிமெண்டு விற்பனை தொடக்க விழா
நடைபெற்றது.
கீழக்கரையில் அம்மா சிமெண்டு விற்பனை மையத்தில் சிமெண்டு
விற்பனை தொடக்க விழா அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அன்வர்ராஜா
எம்.பி.,
மாவட்ட செயலாளர் தர்மர், கீழக்கரை நகரசபை தலைவர்
ராபியத்துல் கதரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக
மண்டல மேலாளர் சங்கரலிங்கம் வரவேற்று பேசினார்.
விழாவில் அம்மா சிமெண்டு விற்பனையை அமைச்சர் சுந்தர்ராஜன்
தொடங்கி வைத்து பேசியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில்
கீழக்கரையில் அம்மா சிமெண்டு விற்பனை 8–வது மையம் தொடங்கப்பட்டு
உள்ளது. மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய
அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது. கீழக்கரையை தாலுகா தலைநகராக்கியவர் ஜெயலலிதா.
அப்துல் கலாம் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி தினமாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். 298 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. 1 கோடியே 84 லட்சம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 40
ஆயிரம் பேருக்கு பசுமைவீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 10,000–ம் நெசவாளர்களுக்கு வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள், கட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக வெளிமார்க்கெட்டில் ரூ.420–க்கு விற்கப்படும் சிமெண்டு ரூ.190–க்கு மலிவு
விலையில் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசும்போது,
ஜெயலலிதாவின் மக்கள் நல சிறப்பு திட்டங்கள் அனைத்தும் பெரிய
வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் அம்மா சிமெண்டு திட்டமும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிமெண்டு விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மேலும் சிமெண்டு விலை உயராமல் தடுக்கவும் இந்த திட்டம் உதவுகிறது என்று
தெரிவித்தார். விழாவில் நகரசபை துணைத்தலைவர் காஜாமைதீன், நகர் செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் முகைதீன்
இபுராகீம்,
நகரசபை ஆணையாளர் மருது, நகர் பிரமுகர் அமீர்
ரிஸ்வான்,
கவுன்சிலர் சுரேஷ், திருப்புல்லாணி ஒன்றிய
செயலாளர் முனியாண்டி,
நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணபாலாஜி உள்பட பலர்
கலந்துகொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)