முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 14, 2015

TNPSC குரூப்-2 தேர்வுக்கு நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 தேர்வை நடத்தவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

இந்தத் தேர்வுக்கு நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவர்(பொறுப்பு) சி. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மொத்தம் 1,863 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வாகும் இது. மொத்தம் 33 துறைகளில் இந்த இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மூலம் தேர்வு செய்ய உள்ளது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வை மட்டும் மட்டும் நடத்தி அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படை மற்றும் ஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் ஆன் லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


இந்தப் பணியிடங்களுக்கு.விண்ணப்பிக்க நவம்பர் 11-ந்தேதி கடைசி நாள். அன்று இரவு 11.59 மணிவரை விண்ணப்பம் செய்ய முடியும். 33 துறைகள் பள்ளிக்கல்வித்துறை, பதிவுத்துறை, சிவில் துறை, பொதுசுகாதாரம், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட 33 வகையான துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது என்றார் அவர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு இளைஞர் ஜோதி தொடர் ஓட்டம் நாளை அக்டோபர் 15ம் தேதி தொடங்குகிறது!!

No comments :

நாளை அப்துல்கலாம் பிறந்த நாள் விழா: ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு இளைஞர் ஜோதி தொடர் ஓட்டம்
அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்திலிருந்து சென்னைக்கு இளைஞர் ஜோதி தொடர் ஓட்டத்தினை ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் தொடக்கி வைக்கிறார்.

இதுகுறித்து தொடர் ஓட்டத்தின் அமைப்பாளர் நந்தகுமார் கூறியது..
அப்துல் கலாமின் லட்சிய இந்தியா இயக்கம், ராமநாதபுரம் கோல்டன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தடகள கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து அப்துல் கலாமின் கனவுகளை இளைஞர்கள் நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொள்ளும் வகையில் இளைஞர் ஜோதி தொடர் ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டத்தை ராமேசுவரத்தில் அப்துல்கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் கலாமின் பேரன் ஷேக்சலீம் ஆகியோர் ஜோதியை ஏற்றி வைத்து அதை இளைஞர்களிடம் கொடுக்கின்றனர்.

பின்னர் ஜோதியானது கலாம் பயின்ற பள்ளி, ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் ரதவீதிகள் வழியாக கலாம் நினைவிடத்திற்கு வருகிறது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கலாமின் உறுதிமொழியை வாசிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தொடர் ஓட்டத்தை ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். பின்னர் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னையில் ஓட்டம் நிறைவு பெறும். இந்த ஓட்டமானது தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள 70க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கலாமின் கனவுகளை நிறைவேற்ற மாணவர்கள் எவ்வாறு பாடுபட வேண்டும் என்ற லட்சிய விதைகளை விதைத்துக் கொண்டே போவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது ரோட்டரி சங்க ஆளுநர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா, தடகள சங்க மாவட்ட செயலர் சாதிக்அலி, கோல்டன் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
  

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அக்.15 ம் தேதி அன்று ராமேசுவரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் விஜயகாந்த்!!

No comments :
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை (அக்.15) நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார்.


இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட செயலர் சிங்கை சின்னா கூறியது: ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் மக்களுக்காக மக்கள் பணித்திட்ட பொதுக்கூட்டம் வியாழக்கிழமை(அக்.15) நடைபெற உள்ளது. 

இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று, 10 மற்றும் பிளஸ் 2  தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார் என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)