Wednesday, October 7, 2015
பரமக்குடியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் மீது வழக்கு!!
பரமக்குடியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக
எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மதுபாரூக் மகன்
முகமதுஇபுராஹிம் (56).
இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த
மாரிச்சாமி மகன் முத்தரசன் (25) மற்றும் அவரது நண்பர்
மார்க்கண்டயன் மகன் பாண்டி (25) ஆகிய இருவரும்
குடிபோதையில் தகராறு செய்தனராம்.
இதனைப் பார்த்த எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் அஸ்கர்அலி மற்றும் அலாவுதீன், அம்சத்கான் உள்பட பலர் சேர்ந்து முத்தரசன், பாண்டி ஆகிய இருவரையும்
வீடு புகுந்து தாக்கினராம். இதில் முத்தரசன் பலத்த காயமடைந்து பரமக்குடி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரமக்குடி நகர் காவல்
நிலையத்தில் முத்தரசனின் தாயார் சுசீலா அளித்த புகாரின் பேரில் போலீஸார் அஸ்கர்அலி, அலாவுதீன்,
அம்சத்கான் மற்றும் பலர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். அதே
போல் முகமதுஇபுராஹிம் அளித்த புகாரின் பேரில் முத்தரசன், பாண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து பாண்டியை கைது செய்தனர்.
செய்தி: தினமணி
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு, ராமநாதபுர அவைத்தலைவராக திரு.முருகேசன், கீழக்கரை அவைத்தலைவராக திரு.MMK. முகைதீன் இப்ராஹீம்.
தமிழகம் முழுவதும் 50 மாவட்டங்களுக்கான
புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா
வெளியிட்டார்.
தமிழகம் முழுவதும் அதிமுக உள்கட்சி தேர்தல் கடந்த சில
மாதங்களாக நடைபெற்றது. அதன்படி ஊராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் ஒன்றியம், நகரம், பகுதி,
மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் 14 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
அதிமுக அமைப்புத் தேர்தல்கள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் - பிற மாநில கழக நிர்வாகிகள் பட்டியலை, பொதுச் செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்
அதிமுக அமைப்புத் தேர்தல்கள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் - பிற மாநில கழக நிர்வாகிகள் பட்டியலை, பொதுச் செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்
ராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவர்- முருகேசன் மாவட்ட
செயலாளர்- ஆர்.தர்மர். இணைச் செயலாளர்- யமுனா நாகரத்தினம். துணைச் செயலா ளர்கள்-
பாலாமணி,
பாதுஷா, பொரு ளாளர்- அமைச்சர்
டாக்டர் சுந்தரராஜ்.
கீழக்கரை நகர் கழக
அவைத்தலைவராக கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் MMK.முகைதீன் இப்ராஹிம் அவர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளார்
(பழைய படம்: செல்வி. ஜெயலலிதாவுடன், MMK மற்றும் MMK முகைதீன் இப்ராஹீம்)
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
பரமக்குடி- தூத்துகுடி புதிய ரயில்வே பாதை பச்சைகொடி காட்டியது ரயில்வே நிர்வாகம், மக்கள் மகிழ்ச்சி!!
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, பரமக்குடியிலிருந்து துாத்துக்குடிக்கு முதுகுளத்துார், சாயல்குடி வழியாக புதிய ரயில்பாதை அமைக்க தென்னக ரயில்வே பச்சைக்கொடி
காட்டியுள்ளது.
ராமநாதபுராம் மாவட்டத்தில் முதுகுளத்துார், கமுதி,
கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட
பகுதிகளில் ரயில் போக்குவரத்து இல்லை. பரமக்குடியில் இருந்து துாத்துக்குடிக்கு
முதுகுளத்துார்,
கடலாடி, சாயல்குடி வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என, 1970 ல் தென்னக ரயில்வே
அறிவித்தது. அதன்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இப்பகுதிகளில் இருந்து பனை வெல்லம், மரக்கரி,
உப்பு, நிலக்கடலை போன்றவை வெளி
மாவட்டம்,
வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ரயில் போக்குவரத்து
இல்லாததால் சரக்கு வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்புகின்றனர். இதனால்
ரயில் பாதை கேட்டு அப்பகுதி மக்கள், வர்த்தகர்கள் தொடர்ந்து
போராடி வந்தனர். இதையடுத்து மாநில அரசு
தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பியது.
தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பியது.
இதை ஏற்று, பரமக்குடியில் இருந்து
துாத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்க பரிசீலனை செய்து வருவதாக மாநில அரசுக்கு
ரயில்வே நிர்வாகம் பதில் அனுப்பிஉள்ளது.மாநில வர்த்தக சங்க துணை தலைவர் கருப்பசாமி
கூறியதாவது:முகுதுளத்துார்,
கமுதி, கடலாடி பகுதிகளில் ரயில்
சேவை இல்லாததால் தொழில்,
வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
தற்போது கடலாடி அருகே ரூ.24 ஆயிரம் கோடியில் 4
ஆயிரம் மெகாவாட் அனல்மின் நிலையம், கமுதி அருகே ரூ.4,536
கோடியில் 636 மெகாட் 'சோலார்'
மின் நிலையம் அமைய உள்ளன. இதனால் ரயில்சேவை அவசியம் தேவை.
புதிய ரயில் பாதை அமைந்தால் துாத்துக்குடி, சென்னைக்கு இடையேயான
துாரம் குறையும். 45
ஆண்டுகளுக்கு பின் ரயில்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம்
முன்வந்ததை வரவேற்கிறோம்,
என்றார்.
செய்தி: தினசரிகள்
ONGC யில் வேலை வாய்ப்பு!!
ஓ.என்.ஜி.சி யில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக
அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி-யில் தொழில்நுட்பப் பிரிவு, தொழில்நுட்பம்
அல்லாத பிரிவுகளில் 110 பணியிடங்கள்
காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்,
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்,
அசிஸ்டெண்ட் ரிக்மேன்,
அசிஸ்டெண்ட் டெக்னீஷியன் என பல்வேறு பணியிடங்கள்
காலியாகவுள்ளன. வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30
வயதுக்குள் இருக்கலாம்.
ஓபிசி,
எஸ்சி, எஸ்டி
பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை உண்டு. எழுத்துத் தேர்வு, உயர் தகுதித்
தேர்வு, பார்வைச்
சோதனை, கனரக
வாகனங்கள் இயக்கும் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி நடைபெற
வாய்ப்புகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஓ.என்.ஜி.சி.யின் அதிகாரப்பூர்வ
இணையதளமான www.ongcindia.com-ல்
தொடர்புகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)