முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 5, 2015

துபாய் டிக்கெட் ரூ.4,999/- மட்டுமே, ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு!!

No comments :
நாட்டின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து துபாய்ச் செல்லும் பயணிகளுக்குக் குறுகிய கால அடிப்படையில் 4,999 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் அமிர்தசரஸ்-துபாய் மற்றும் கோழிக்கோடு-துபாய் ஆகிய புதிய வழித்தடங்களின் அறிமுகத்தைக் கொண்டாடும் வகையிலும்புதிய பயணிகளைக் கவரும் வகையிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இத்தகையைச் சலுகையை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் இச்சலுகையில் விமான டிக்கெடுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்ஆனால் விமானப் பயணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் துவங்கப்படுகிறது.




இப்புதிய வழித்தடங்களின் அறிமுகத்திற்குப் பின் ஸ்பைஸ்ஜெட், டெல்லி, மும்பை, அகமதாபாத், புனே, கொச்சி, மதுரை, அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து நேரடியாகத் துபாய்க்கு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்பின் இப்பட்டியலில் கொல்கத்தா, சென்னை, ஹதெரபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இச்சேவையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இப்பயணத்திற்கு அனைத்து வகையான வரி மற்றும் கட்டணங்களுடன் ஸ்பைஸ்ஜெட் 4,999 ரூபாய் மட்டுமே வசூல் செய்கிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போதைய நிலையில் துபாய் உட்பட 6 வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை அளித்து வருகிறது. இதில் துபாய், பாங்காங், கொழும்பு, காபூல், மாலத்தீவு. மேலும் காத்மாண்டு-விற்கு இந்நிறுவன சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முடங்கப்பட்ட இச்சேவையும் கூடிய விரைவில் செயல்படுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.

செய்தி: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பரமக்குடி ரயில் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டிங் மெஷின், நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

No comments :
பரமக்குடி ரயில் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டிங்  மெஷின் உள்ளதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பரமக்குடியை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ளன. ரயில் கட்டணம்பஸ் கட்டணத்தை விட குறைவாக இருப்பதால்மதுரை-ராமேஸ்வரம்திருச்சி-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில்களில் செல்கின்றனர். இதற்காக ஏராளமான பயணிகள் தினந்தோறும் ரயில் நிலையம் வருகின்றனர். 



ரயில் நிலையத்தில் ஏற்கனவே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது கூட்டமான நேரங்களில் தானியங்கி முறையில் இயங்கும் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டரிங் மெஷினும் பயனில்லாமல் வெறும் காட்சி பொருளாக பிளாட்பாரத்தில் உள்ளது.  இந்த இயந்திரத்தை இயக்க ஏடிஎம் கார்டு போல ஸ்மார்ட்கார்டு வேண்டும்.  அதை தனியாக ரயில்வேயில்  விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.  அதன் பின்பு தேவைக்கேற்ப அதில் பணத்தை செலுத்தி அந்த கார்டை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். ரயிலில் நாம் செல்லும் இடத்தை மானிட்டரில் தேர்வு செய்தால் தனியாக டிக்கெட் வந்து விடும்.  

இந்த இயந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு விளக்கம் அளித்து டிக்கெட் எடுத்து கொடுப்பதற்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ரயில்வே பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  பரமக்குடியில் இதுவரை அதுபோன்று யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. இந்த இயந்திரம் குறித்த விழிப்புணர்வும் யாருக்கும் கிடையாது.  இதனால் கூட்ட நேரங்களிலும் பயணிகள் வழக்கம்போல் டிக்கெட்டை எடுக்க வரிசையிலேயே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் வரும் காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த இயந்திரத்தின் பயனை பயணிகளிடம் தெரிவித்து அதை இயக்க பணியாளரை அமர்த்தினால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று பயணிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். 

பயணி சகுபர்சாதிக் கூறுகையில், “முக்கிய ரயில் நிலையங்களில் விரைவாக டிக்கெட் எடுக்க இந்த இயந்திரம் பயன்படுகிறது.  சிலமுறை இயக்க பழகிவிட்டால் ஏடிஎம் இயந்திரம் போல எளிதாக பயன்படுத்தலாம்.  அதற்கு அதிகாரிகள் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இயந்திரம் பற்றி தெரியாதவர்களுக்கு இதுபற்றி முதலில் தெரிவிக்க வேண்டும்.  இதனால் பயணிகள் கூட்ட நேரங்களில் எளிதாக டிக்கெட் எடுத்து செல்லாம்என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரத்தில் புதுடில்லி யாத்ரிகள் தாக்கப்பட்டனர், போலீஸ் விசாரணை!!

No comments :
ராமேஸ்வரத்தில் வாடகை குறைத்து கொடுத்த தகராறில் புதுடில்லி சுற்றுலா பயணிகளை வேன், ஆட்டோ டிரைவர்கள் தாக்கினர்.

புதுடில்லி ரயில் நிலைய ஊழியர் ரிஷிபால்,54. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார்.

வேனில் 12 இடங்களை சுற்றி பார்க்க வாடகையாக ரூ. 1200 பேசினார். வேன் டிரைவர் 9 இடங்களை மட்டும் சுற்று காண்பித்துள்ளார். இதனால் வாடகையில் ரூ.200யை குறைத்து கொடுத்தார். இதனை வாங்க மறுத்த டிரைவர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.


ஆத்திரமடைந்த வேன் டிரைவர், ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து ரிஷிபால் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினர். இதில் கவுசல்யா,40, ரோகித்,16, காயம் அடைந்தனர். இதுகுறித்து ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரிஷிபால் கூறுகையில், ""வேன் டிரைவர் கூறியபடி எங்களை அழைத்து செல்லவில்லை. இதனால் வாடகையில் ரூ.200 குறைத்து கொடுத்தோம். இதனால் எங்களை தாக்கி விட்டனர்,'' என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)