Wednesday, September 30, 2015
திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் "நமக்கு நாமே” ராமநாதபுர மாவட்ட சுற்றுப்பயண அறிக்கை மற்றும் படங்கள்!!
"நமக்கு நாமே” ராமநாதபுர மாவட்ட சுற்றுப்பயணத்தினை பற்றி திரு.மு.க.
ஸ்டாலின் அவர்களின் அறிக்கை பின்வருமாரு:
மதிப்புக்கும், மேன்மைக்கும் உரிய பல பெரியோர்கள்
பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், "நமக்கு நாமே" பயணத்தின் 11வது நாளாக இன்று
கால்பதித்தேன். நமது அன்புக்குரிய மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.
அப்துல் கலாம் அவர்கள், தமிழக அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் அவர்கள் மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், சாதீய சீர்திருத்தவாதியுமான
இம்மானுவல் சேகரன் போன்ற பல சிந்தனாவாதிகள் பிறந்த மண் இது. மக்களின் நலனுக்காக போராடிய
இத்தகைய தலைவர்களை நினைவு கூர்வதிலும், மரியாதை செலுத்துவதிலும் நான் மிகுந்த உவகை
அடைகிறேன்.
தொடர்ந்து, நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன்
பரமக்குடியில் நடைபெற்ற சுவாரசியமானதொரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். பட்டு சந்தை
விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், பட்டு தொழிலின் உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ற வகையில்
சந்தை முறைபடுத்தப்படாதது போன்ற சில காரணங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்பதே
நெசவாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் முக்கிய குற்றச்சாட்டு.
சிவப்பு மிளகாய் விவசாயத்திற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற
இப்பகுதியை சேர்ந்த மிளகாய் விவசாயிகள், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பயிர்
காப்பீடு பெறுவதில் விவசாயிகளுக்கு இன்று உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களை பட்டியலிடுவதோடு,
கடந்த திமுக ஆட்சி காலங்களில் பயிர் காப்பீடு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையும்,
பூச்சி மருந்து மற்றும் உரங்களுக்கான மானியங்கள் முறையாக வழங்கப்பட்ட விவரங்களையும்
இன்றுவரை நினைவு கூர்கின்றனர்.
பொதுவாக அனைத்து தரப்பு விவசாயிகளும் நமது முன்
வைக்கும் கோரிக்கை என்னவென்றால் நீர் தேக்கங்கள் மற்றும் பாசன வாய்கால்கள் அனைத்தும்
அவ்வப்போது தூர் வார அரசுத்தரப்பு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே. அவர்களுடைய
கோரிக்கையின் அடிப்படையை புரிந்து கொண்ட நான், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற வகையிலான
தண்ணீர் மேலாண்மை கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் இனி வரும் காலங்களில்
தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாகாதவாறு உரிய நடவடிக்கைகளை
தி.மு.கழகம் மேற்கொள்ளும் என அவர்களுக்கு உறுதி அளித்தேன்.
இவ்வாறு தன் முகநூல் பக்கம் மூலம் தெரிவித்தார்
திரு.முக.ஸ்டாலின்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
எஸ் IAS அகடமி நடத்தும் IAS /IPS பயிற்சி முகாம், அக்டோபர் 15ம் தேதி துவங்குகிறது!!
எஸ் IAS அகடமி நடத்தும் IAS /IPS பயிற்சி முகாம், அக்டோபர் 15ம் தேதி துவங்குகிறது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
சென்னை பல்கலைகழகத்தில், வேலைவாய்ப்பு முகாம், அக்., 3ம் தேதி நடக்கிறது!!
சென்னை பல்கலையில், வேலைவாய்ப்பு
முகாம், அக்., 3ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, பல்கலை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த, 2013 முதல், 2015க்குள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான, வேலைவாய்ப்பு முகாம், வரும், 3ம் தேதி பல்கலை வளாகத்தில் நடக்கிறது. ‘டெக்ரூட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களில் உள்ள, 1,200 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முகாம் நடக்கும் இடத்தில், பெயர்,
முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
9551690630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பகிர்வு: திரு. தாஹீர், சென்னை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம், அக்டோபர் 10ம் தேதி நடக்கிறது!!
கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
அக்.10 இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ்
கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் அக். 10 ஆம் தேதி ராமநாதபுரம்
சுவார்ட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு
தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுபற்றி மேலும் தகவல் அறிய விரும்புவோர் திட்ட
இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பல்நோக்கு பயிற்சி மற்றும் உற்பத்தி
மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியிலோ அல்லது dpiurmd@yahoo.com
என்ற மின்னஞ்சல் மற்றும் 04567-231341 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.