முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 21, 2015

பெரியபட்டினம் தர்காவில் 114ம் ஆண்டு சந்தனக்கூடு விழா தொடக்கம்!!

No comments :
பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 114ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது.

ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஜமாத் தலைவர் சீனி அப்துல் லத்தீப் கொடியேற்றம் செய்தார். செப்., 30 இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.


அக்.,9 கொடியிறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெறும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் செய்யது இபுராம்சா, துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, ஜலால் மீரா ஹமாம், முஜிபுர் ரகுமான், பொருளாளர் ஹபிபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், ஒன்றியக்கவுன்சிலர் ஹபிபுல்லா, சதக், ரம்லான், பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா கடற்கரையில் கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு!!

No comments :
கீழக்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பக்கீர்அப்பா தர்கா அடுத்துள்ள முத்தரையர் நகர் மீனவர்கள் நிறைந்த கிராமம் ஆகும். இப்பகுதி மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்குச் சென்ற போது ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. பெரிய கப்பல்களை நிறுத்தும் போது அடையாளங்களுக்காக மிதக்க விடப்படும் காற்றடைக்கப்பட்ட மிதவை இது என்பது தெரியவந்தது.


இதுகுறித்த தகவலின்பேரில் வனச்சரக அலுவலர்கள் மிதவையை பார்வையிட்டனர். இந்த மிதவை 15அடி நீளம் 7அடி அகலம் மற்றும் 200 கிலோ எடை உள்ளது. பின்னர் இதனை கைப்பற்றிய வனச்சரக அதிகாரிகள் எங்கிருந்து கரை ஒதுங்கியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)