முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 14, 2015

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , கொட்டியக்காரன் வலசை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்கு ரூ. மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

No comments :
கொதக்குட்டை ஊராட்சி, கொட்டியக்காரன் வலசை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்கு ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , கொதக்குட்டை ஊராட்சி, கொட்டியக்காரன் வலசை கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை புதிய கட்டடம் கட்டுதல் பணிகளுக்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2015 - 2016 ம் ஆண்டின் கீழ் மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/3453/2015.
நாள் : - 07.07.2015

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. மருத்துவ துணை இயக்குனர் பவானி உமாதேவி வரவேற்று பேசினார். அன்வர்ராஜா எம்.பி., முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவுக்கு அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு பெட்டகம் வழங்கப்படும். இந்த பெட்டகத்தில் குழந்தையை பராமரிப்பதற்கான துண்டு, குழந்தை பாதுகாப்பு வலை, நாப்கின், கைகழுவும் திரவம், குழந்தை உடை, படுக்கை, பராமரிப்பு எண்ணெய் மற்றும் சாம்பு, நகவெட்டி, பொம்மை மற்றும் கிலுகிலுப்பை, சோப்புகள், சோப்பு பெட்டி, தாய்மார்களுக்கான சவுபாக்கிய சுண்டி லேகியம் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் உள்ளன. 


இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 57 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள். இந்தியாவிலேயே பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் மிகவும் குறைவான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 42 ஆக உள்ளது. இது தமிழகத்தை பொறுத்தவரை 1000-க்கு 21ஆக உள்ளது. குழந்தை கருவுற்றது முதல் பிறப்பு வரை தமிழக அரசு ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12,000 வழங்கி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.5 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகள் மூலம் ரூ.11 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 108 அவசர சிகிச்சை ஊர்திகளின் எண்ணிக்கை 406-ல் இருந்து 756 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் 50 வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. சென்னையில் தொடங் கப்பட்டுள்ள அம்மா உடல் பரிசோதனை திட்டம் விரைவில் அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார். 

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், நகரசபை தலைவர் சந்தானலட்சுமி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தர்மர், ராமநாதபுரம் யூனியன் தலைவர் சாந்தி சாத்தையா, நகரசபை துணை தலைவர் கவிதா சசிக்குமார், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகர் அ.தி.மு.க. பிரமுகர் செல்வராஜ், ராம்கோ துணை தலைவர் சுரேஷ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், உதவி அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

உச்சிப்புளி அருகே பெட்ரோல் குண்டுவீச்சு!!

No comments :
உச்சிப்புளி அருகே நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீசி தாக்கியதில் 3 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ளது சேர்வைக்காரன் ஊரணி (மேற்கு) கிராமம். கடந்த 10-ந்தேதி இதே ஊரைச்சேர்ந்த அமர் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஒரு பெண்ணின் மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் தாய்மாமன் கனகராஜ், அமரை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர். 

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளுடன் கிராமத்திற்குள் புகுந்து நபர்கள் சிலர், அமுதாவுக்கு சொந்தமான குடிசை வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். 


இதனால் குடிசையில் தீப்பிடித்து அருகில் இருந்த கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் 3 வீடுகளும் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். 

முத்துலட்சுமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை, ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 

நள்ளிரவில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 


வீடு தீப்பிடித்ததில் கார்மேகம் தனது மகள் திருமணத்துக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த ரூ.லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அவர் அளித்த புகாரின் பேரில் 25 பேர் மீது உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அமர் தரப்பைச் சேர்ந்த முத்துச்சாமி, பூமிநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)