முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 12, 2015

குளபதம் ஊராட்சி நத்தம் கிராமத்தில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் அமைக்க இரண்டு லட்சம் நிதி ஒதுக்கீடு!!

No comments :
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளபதம் ஊராட்சி நத்தம் கிராமத்தில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் அமைத்தல் பணிகளுக்கு ரூபாய்.2.00 இரண்டு லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , குளபதம் ஊராட்சி நத்தம் கிராமத்தில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் 90 மீட்டருக்கு அமைத்தல் பணிகளுக்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2015 - 2016 ம் ஆண்டின் கீழ் மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய்.2.00 இரண்டு லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/3453/2015.
நாள் : - 07.07.2015


செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

சர்வதேச தற்காப்புக்கலை போட்டியில் கீழக்கரை கல்லூரி மாணவர் சாதனை!!

No comments :
சர்வதேச தற்காப்புக்கலை போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார். கேரள மாநிலம் திருச்சூரில் பிளாக் டிராகன் தற்காப்புக் கலை மையத்தின் சார்பில் சர்வதேச அளவிலான தற்காப்புக் கலை போட்டி கடந்த மாதம் 29ம் தேதி முதல் 31 வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட 7 வீரர்களில் 3 பேர் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர்கள் ஷேக்பரீத், யாசர்அராபத், கணிதவியல் இரண்டாமாண்டு மாணவர் சேதுபதி ஆகியோர் ஆவர்.


இதில் ஷேக்பரீத், கிக்பாக்சிங் தற்காப்புக் கலை போட்டியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இம்மாணவரை முகமது சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப், இயக்குநர்கள் ஹாமீது இப்ராகீம், அஸ்லம்ஹூசைன், முதல்வர் ரஜபுதீன், உடற்பயிற்சி இயக்குநர் தவசிலிங்கம், நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, தமிழக தலைவர்கள் அஞ்சலி!!

No comments :
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே அமைந்துள்ள அவரது  நினைவிடத்தில் 58-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, அதிமுக சார்பில் மாநில அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, எஸ். சுந்தரராஜ், அ. அன்வர்ராஜா எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன், மாவட்ட செயலாளர் ஆர். தர்மர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம். சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


தி.மு.க. சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், நகர் செயலாளர்கள் சேதுகருணாநிதி, கார்மேகம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை, நகர் தலைவர் எம். அப்துல்அஜீஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட செயலாளர் குட்லக் ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மதுரை பூமிநாதன், ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை செவந்தியப்பன், சந்திரன், நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா, துணை செயலாளர்கள் பசீர்அகமது, பழ.சரவணன், பிச்சைமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க. சார்பில் சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ. சுபா, மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல்ராவணன், மாநில துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், நகர் செயலாளர் கோவிந்தன் ஆகியோரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அதன் பொறுப்பாளர் இ.சாமுவேல்ராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் கலையரசன், டாக்டர் வான்தமிழ் இளம்பருதி, சி.பி.எம். வி.காசிநாததுரை ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன், மாவட்ட செயலாளர் பீட்டர் வளவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்டத் தலைவர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  முருகவேல்ராஜன், கே.வி.ஆர். ராம்பிரபு, கே.எஸ்.கே. ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் ஜான்பாண்டியன், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.சேகர், டாக்டர் அம்பேத்கர் வழக்குரைஞர் அணி சார்பில் கே.வி.ஆர்.கந்தசாமி, முத்துக்கண்ணன், சி.பசுமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர். சரவணபெருமாள், மாநில துணைத் தலைவர்கள் சுப. நாகராஜன், து. குப்புராமு, மாநில இளைஞரணி செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் கே. சண்முகராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராம பொதுமக்கள் சார்பிலும், அவரது குடும்பத்தினர் சார்பில் மகள் பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமார், இளவரசன், கோமகன் ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விழா ஏற்பாடுகளை பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

BHEL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு, 2016 GATE தேர்வு அவசியம்!!

No comments :
BHEL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு, 2016 GATE தேர்வு அவசியம்!!




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மக்காவில் நடந்த கிரேன் விபத்தில் 107 பேர் இறப்பு, பாவமன்னிப்பிற்கும், சுவனத்திற்கும் பிராத்திப்போமாக!!

No comments :


மக்காவில் 107 பேரை பலி வாங்கிய கிரேன் விபத்துக்கு இயற்கை சீற்றமே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்காவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள் அங்குள்ள பெரிய மசூதியில் குழுமியிருந்தனர். அப்போது அருகில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் 2 துண்டாக முறிந்து மசூதி மீது விழுந்ததில் உள்ளே இருந்த 107 பேர் பரிதாபமாக பலியாகினர். 238 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கிரேன் விபத்துக்கு பலத்த காற்று வீசியதே காரணம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வேகத்துடன் காற்று வீசி வருகிறது. இந்த காற்றில் நிலை தடுமாறிய கிரேன், மசூதியின் மேற்கூரை மீது மோதி இரண்டு துண்டாக உடைந்தது. மேற்கூரை உடைந்து உள்ளே இருந்த ஹஜ் பயணிகள் மீது விழுந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சவுதி அரேபிய சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ரத்தக் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.


அன்னார்களின் பாவமன்னிப்பிற்கும், சுவனத்திற்கும் பிராத்திப்போமாக, அன்னார்களின் குடும்பங்களுக்கு இறைவன் பொறுமையை வழங்குவானாக!!

உதவிக்கு அழைக்க வேண்டிய சவூதி தொலைபேசி எண்: +966543891481

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)