முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 6, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் இன்று நல்லாசிரியர் விருது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் இன்று நல்லாசிரியர் விருது பெறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் என 11 ஆசிரியர்கள், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். 


அதன் விபரம்:

திருப்புல்லாணி ஒன்றியம் பஞ்சந்தாங்கி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் வி.கலைச்செல்வி,
திருவாடானை ஒன்றியம் கொடிப்பங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ச.சகாயராஜ்,
மண்டபம் ஒன்றியம் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மு.உமாதேவி,
கமுதி ஒன்றியம் பெருநாழி ஷத்திரிய இந்து நாடார் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சி.தங்கப்பாண்டியன்,
கமுதி ஒன்றியம் கமுதி கே.என்.தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பா.சோமசுந்தரம்,
கடலாடி ஒன்றியம் டி.மாரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் க.சுந்தரபாண்டியன்,
சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சி.ஷாஜகான் சலீம்,
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கா.ஜெய்நபி,
காட்டுப்பரமக்குடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் க.ஆறுமுகம்,
கமுதி கவுரவா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ.கோவிந்தம்மாள்,
ராமநாதபுரம் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் டபிள்யூ.வில்சன்


ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார். இவர்கள் அனைவரும் இன்று சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி.,மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில் கல்வி அமைச்சர் வீரமணியிடம் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)