Saturday, September 5, 2015
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் சிவில் இஞ்சினியர்கள் வேலை வாய்ப்பு!!
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் இந்த வேலைவாய்ப்புகள்
உள்ளன. 4
வருட ஒப்பந்த அடிப்படையில் டெல்லி மற்றும் அதன் புறநகர்
பகுதிகளில் பணிபுரிய உதவி மேலாளர், ஜூனியர் என்ஜினீயர்
பணியிடங்கள் காலியாகவுள்ளன.
மொத்தம் 31 உதவி மேலாளர்(சிவில்) பணியிடங்கள் காலியாகவுள்ளன.
மொத்தம் 31 உதவி மேலாளர்(சிவில்) பணியிடங்கள் காலியாகவுள்ளன.
சம்பளம்:
மாதம் ரூ.20,600 - 46,500 என்ற அடிப்படையில்
இருக்கும்.
01.07.2015
தேதியின்படி வயதுவரம்பு 28க்குள் இருக்க வேண்டும்.
60
சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் சிவில்
பிரிவில் பி.இ முடித்து 2014
ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கேட்(GATE) தேர்வில் போதிய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல ஜூனியர் என்ஜினீயர்(சிவில்) பணியிடங்கள் 100 காத்திருக்கின்றன.
சம்பளம்:
மாதம் ரூ.13,500 - 25,520 என்ற அடிப்படையில் இருக்கும். 01.07.2015 தேதியின்படி வயது 28க்குள் இருக்க வேண்டும். பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும்
தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும். எழுத்துத் தேர்வு, கலைந்துரையாடல்,
நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் மூலம்
தகுதியான நபர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150 மட்டுமே வசூலிக்கப்படும். இதற்கான "சலானை" பதிவிறக்கம் செய்து DMRC Account No:
33700092265- என்ற எண்ணில் செலுத்த வேண்டும்.
"சலான்” பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 20 ஆகும். www.delhimetrorail.com
என்ற இணையதளத்துக்குச் சென்றறு ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செப்டம்பர் 23 கடைசி தேதியாகும். செலான் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 23 ஆகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் நகர் காவல்துறை புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு!!
ராமநாதபுரம் நகர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக
பணியாற்றி வந்த அண்ணாமலை ஆழ்வார் ஆக.31-இல் ஓய்வு
பெற்றதைத் தொடர்ந்து புதிய ஏ.எஸ்.பி.யாக சர்வேஸ்ராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்
கொண்டார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இவர், திருவள்ளூரில் பயிற்சி ஐ.பி.எஸ்.அதிகாரியாக இருந்து பின்னர் திண்டுக்கல்
ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி,
தற்போது ராமநாதபுரம் நகர் ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேறுள்ளார்.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்கள் பகுதியில் உள்ள
பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்று புதிய ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேற்றதும் சர்வேஸ்ராஜ்
தெரிவித்தார்.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய
ஆய்வாளராக சிவகங்கை
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுருகன்
பணியிடமாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரத்தில் கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளராக
பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
இமானுவேல் சேகரன் நினைவு தினம், கலெக்டர் நந்தகுமார் தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம்!!
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்
அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரத்தில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில்
சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கூட்டத்தில் வருகிற 11-ந்தேதி
பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவுதினம் தொடர்பாக எடுக்கப்பட்ட
முடிவுகள் விவரம் வருமாறு:- அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில்
இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாடகை வாகனங்கள்
மற்றும் திறந்தவெளி வாகனங்களில் வரக்கூடாது. இதேபோல இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், மின்வேன், சைக்கிள் போன்ற வாகனங்களிலும் வரக் கூடாது.
சொந்த வாகனங்கள் மூலம் வருபவர்கள் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை வருகிற 8-ந்தேதிக்கு முன்பாக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்துச்செல்லவோ கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள், சாதி மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் போன்றவை கட்டக்கூடாது. மேலும் கோஷங்கள் எழுப்பக்கூடாது.
பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. வாகனங்களில் வரும்போது வரும்வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக்கூடாது.
அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களில் இருந்து பஸ்களில் வருபவர்கள் தங்கள் ஊரில் இருந்து காலை 11 மணிக்குள் புறப்பட வேண்டும். பஸ்களில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. பஸ் படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வர வேண்டும். 11-ந்தேதி ஒருநாள் மட்டும் கூடுதல் பஸ்கள் இயக்கப் படும்.
தலைவர்கள் வரும்போது அவர்களுடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் வர அனுமதிக்கப்படும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செல்ல வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணமாக செல்லலாம். ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. இவற்றை நினைவிடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந்தேதிக்கு முந்தைய தினமோ, அடுத்த தினமோ எந்தவித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந்தேதி மட்டும் அவரவர் சொந்த ஊரில் ஒலிபெருக்கி இல்லாமல் புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.
அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதி தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒலிபெருக்கி பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது. தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பாக குறைந்த பட்சம் 100 தன்னார்வ தொண்டர்களை ஏற்பாடு செய்து நினைவிடத்தில் கூடியிருக்கும் கூட்டத்தினரை அவ்வப்போது வெளியேற்றி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்படி செய்ய வேண்டும். பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை பரமக்குடி நகருக்குள் மட்டும் வருகிற 9,10,11-ந்தேதிகளில் மட்டும் வைத்துக்கொள்ளலாம். பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு முன்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். காவல் அனுமதி குறித்த விவரம் பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
நினைவிடத்தில் 11-ந்தேதி அன்று மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும். அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 8-ந்தேதிக்கு முன்பாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்ட முழுதும் நடபெறும் இலவச கண் சிகிச்சை முகாம்கள், தேதிகள் அறிவிப்பு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவசமாக நடைபெறும்
கண் சிகிச்சை முகாம்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, மதுரை மீனாட்சி மிஷன், கிருஷ்ணன் கோவில் சங்கரா, பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமேசுவரம் சங்கர நேத்ராலயா ஆகிய மருத்துவமனைகள் சார்பில்
மாவட்டம் முழுவதும் கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளது.
அதன்படி நேற்று (4–ந்தேதி) அரியாங்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், இன்று 5–ந்தேதி ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை சி.எஸ்.ஐ. தேவாலயம்,
நாளை 6–ந்தேதி கடலாடி அரசு
மேல்நிலைப்பள்ளி,
7–ந்தேதி பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனை,
8–ந்தேதி சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
10–ந்தேதி தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார
நிலையம்,
11–ந்தேதி அபிராமம் பள்ளிவாசல் பள்ளி
ஆகியவற்றிலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளன.
இதேபோல்,
12–ந்தேதி திருவாடானை அரசு தாலுகா ஆஸ்பத்திரியிலும்,
12–ந்தேதி திருவாடானை அரசு தாலுகா ஆஸ்பத்திரியிலும்,
14–ந்தேதி சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்திலும்,
15–ந்தேதி கமுதி அரசு தாலுகா ஆஸ்பத்திரியிலும்,
19–ந்தேதி வாலிநோக்கம் பஞ்சாயத்து யூனியன்
பள்ளியிலும்,
22–ந்தேதி உச்சிப்புளி பஞ்சாயத்து யூனியன்
பள்ளியிலும்,
23–ந்தேதி ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி, முதுகுளத்தூர் அரசு தாலுகா மருத்துவமனையிலும்,
26–ந்தேதி ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார
நிலையம், சாயல்குடி பஞ்சாயத்து யூனியன் பள்ளி
ஆகியவற்றிலும்,
27–ந்தேதி தேரிருவேலி பஞ்சாயத்து யூனியன்
பள்ளியிலும்,
29–ந்தேதி அரியாங்குண்டு பஞ்சாயத்து யூனியன்
பள்ளியிலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த
பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய
பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடையலாம் என்று கலெக்டர் நந்தகுமார்
தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)