Monday, August 31, 2015
தனி ஒருவன் - தமிழ் திரை விமர்சனம்!!
நடிப்பு: ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த்சாமி, தம்பி ராமய்யா, நாசர் ஒளிப்பதிவு: ராம்ஜி
இசை: ஹிப் ஹாப் தமிழா
தயாரிப்பு: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்
எழுத்து - இயக்கம்: மோகன்
ராஜா 'ரீமேக் படங்களின் ராஜா' என சற்று கிண்டலாகவே விளிக்கப்பட்ட மோகன் ராஜா, முதல் முறையாக தன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டோடு தனி ஒருவனாக
வந்திருக்கிறார். ரீமேக் படமாக இருந்தாலும், அதை நமக்கேற்ற சுவாரஸ்யங்களோடு தர ஒரு தனித் திறமை
வேண்டும். அதில் ராஜா நிஜமாகவே கில்லாடிதான். இந்த ஒரிஜினல் தனி ஒருவனிலும் தன்னை
ஒரு 'ராஜா'வாக நிரூபித்திருக்கும் அவருக்கு முதல் வாழ்த்து!
சமீபத்தில் வந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றால் அது தனி ஒருவன்தான் என்றால் அதில் மிகையில்லை. ஒரு ஹீரோ மிளிர வேண்டுமென்றால், அவனுக்கு சமமான வில்லன் வேண்டும் என்பதை உணர்ந்து வில்லனை விஸ்வரூபமெடுக்க வைத்திருக்கும் 'ராஜா பிரதர்ஸின்' தொழில் நேர்மை வியக்க வைக்கிறது.

சமூகத்தில் குற்றம் செய்யும் பலரை, ஐபிஎஸ் பயிற்சி முடித்த ஜெயம் ரவியும் அவர் சகாக்களும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள். ஆனால் மறுநாளே அவர்கள் பல்லைக் காட்டிக் கொண்டு அவர்கள் முன்னே சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆக இந்த கிரிமினல்களுக்குப் பின்னணியில் யாரோ ஒரு பெரிய கிரிமினல் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் தேடலைத் தொடங்க, அது அரவிந்த்சாமி என்ற பெரும்புள்ளியில் போய் நிற்கிறது. மருந்துலக மாபியாவாக, பெரும் தொழிலதிபராக, அசைக்க முடியாத அரசியல் செல்வாக்கு மிக்கவராக உள்ள அந்த பெரும் வில்லனோ, ஜெயம் ரவியின் ஒவ்வொரு அசைவையும் விரல் நுனியில் வைத்து விளையாடுகிறார். இந்த ஹீரோ - வில்லன் துரத்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது யாரும் எதிர்ப்பார்க்காத புத்திசாலித்தனமான க்ளைமாக்ஸ்!
ஹீரோ ஜெயம் ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோமியோவிலிருந்து ஆக்ஷன் ஹீரோவாக ஜிவ்வென உயர்ந்திருக்கிறார். ரசிகர்கள் நம்பும்படியான ஆக்ஷன், க்ளோசப்பிலும் உறுத்தாத ஆண்மைத்தனம் மிக்க அழகு, காதல் காட்சிகளில் அசட்டுத்தனமில்லாத நடிப்பு... மயங்க வைக்கிறார் மனிதர். தமிழ் சினிமாவில் இன்றைய ஹீரோக்களில் ஜெயம் ரவிக்கு இணையான அழகும், திறனும் மிக்கவர் யாருமில்லை எனும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்கிறார் இந்தப் படத்தில்.
ஜெயம் ரவிக்கு நிகரான.. சில இடங்களில் அவரையும் பின்னுக்குத் தள்ளும் வலுவான பாத்திரத்தில் அர்விந்த்சாமி. ஹீரோவாக நடித்த போது இவரைப் பிடிக்காதவர்களுக்கும் இப்போது பிடிக்கும் அளவுக்கு அலட்டலில்லாத, மிரட்டல் நடிப்பு. காதலியையும் தந்தையும் கொல்லச் சொல்லி அவர் உத்தரவிடும் விதம்.. புதுவகை வில்லத்தனம். க்ளைமாக்ஸில் ஹீரோவாகி திட்டிய வாய்களை வாழ்த்த வைக்கிறார்!
நயன்தாராவை மிக இயல்பாகக் காட்டியிருக்கிறார்கள். ஹீரோ - வில்லனுக்கு இணையாக கலக்கியிருக்கிறார். வில்லன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்... ஆனால் அவனுக்குத் தெரியாமல் காதலைச் சொல்ல வேண்டும் என்ற கட்டத்தில், 'கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாமே..’என பலகையில் எழுதும் நயன்தாராவைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்! தம்பி ராமய்யா மாதிரி ஒரு மந்திரி அப்பா தேடினாலும் கிடைக்காத மிகைதான். ஆனால் இந்தக் கதைக்கு அப்படி ஒரு பாத்திரம் தேவைதான். க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் 'பழனி.. அந்த புல்லட் புரூப் உடையைப் போட்டுக்கப்பா' என அவர் தழுதழுக்கும் காட்சி நெகிழ்ச்சி.
நாசர், ஜெயம் ரவியின் சகாக்களாக வரும் ஹரீஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம், ராகுல் மாதவ், ஸ்ரீசரன், அர்விந்த்சாமியின் அடியாளாக வரும் வம்சி என அனைவரையும் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பைக் காப்பாற்ற உதவுகிறது. ஆனால் பாடல்கள் உதவவில்லை. குறிப்பாக அந்த கடைசி டூயட் ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்.
ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடுகிறது. புதியவராக இருந்தாலும், கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங் 'பக்கா'!
எந்தக் குறையையும் ரசிகன் உணர முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையை எழுதி, அதில் சிறு சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கும் ராஜா, வசனத்திலும் தனித்துவம் காட்டியிருக்கிறார் (சுபாவுடன் இணைந்து). சில படங்களைப் பற்றி எழுதும்போது தொழில்நுட்ப நேர்த்தி என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் உண்மையிலேயே அதற்கு தகுதியான படம் இதுதான் என்பதை, கிராபிக்ஸ் துணை அவ்வளவாக இல்லாமலேயே நிரூபித்திருக்கிறார் ராஜா. தனி ஒருவன்... தனித்துவம் மிக்க படம்!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
துபாய் Al Mulla நிறுவனத்தில் Time Keeper வேலை வாய்ப்பு!!
a Contracting Company is looking for Time Keeper knowledgeable in said position with 5 -10 years experience
Salary 2,200 + accommodation + visa.
Local candidates only:
Required experience:
TO APPLY: CLICK HERE
|
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் ரோட்டராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!!
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில்
ரோட்டராக்ட் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
புதிய தலைவராக ரூபன்
பொறுப்பேற்றார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் பாபு,
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம்
செய்து வைத்தனர்.
முன்னாள் தலைவர் செய்யது மிப்தாவுதீன் வரவேற்றார்.
முன்னாள் தலைவர் செய்யது மிப்தாவுதீன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் தேர்வு டாக்டர் சின்னத்துரை அப்துல்லா பேசும்போது,
‘‘மாணவர்கள் படிக்கும்போதே தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டு சமூக சேவை செய்ய
ரோட்ராக்டர் சங்கம் பெரும் உதவியாக இருக்கும்’’ என்றார். ரோட்டரி
சங்க பட்டயத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, துணை ஆளுநர் ரமேஷ்பாபு, வக்கீல்கள் அதிசயபாபு,
சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை
முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்
மாரிமுத்து,
ரோட்ராக்டர் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.
ரோட்ராக்ட் சங்க செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
செய்தி: தினசரிகள்
கீழக்கரையில் சமூக நல நுகர்வோர் சேவை இயக்க கூட்டம், சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்’ என பெயரிட கோரிக்கை!!
சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘அப்துல்கலாம்
எக்ஸ்பிரஸ்’ என பெயரிட வேண்டும் என்று கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையில் சமூக நல நுகர்வோர் சேவை இயக்க கூட்டம்
நடைபெற்றது. இயக்க தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில், பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்;
ராமேஸ்வரம்-சென்னைக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தினசரி
ரயில் இயக்க வேண்டும்; மீனவர்கள் நலன் கருதி மீன்
பாதுகாப்பாக ரயில்களில் கொண்டு செல்ல குளிர்பதன பிரத்யேக ரயில் பெட்டி அனைத்து
ரயில்களிலும் இணைக்க வேண்டும்; பாம்பன் ரயில் நிலையத்தில்
அடிப்படை வசதி செய்து தர வேண்டும்;
சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரிட வேண்டும்; கீழக்கரை முதல் கேணிக்கரை வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் தற்போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரையே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். இந்த பஸ்களை மீண்டும் பழைய வழித்தடப்படி இயக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இபுராகீம், செய்யது சர்புதீன், கலைச்செல்வம், முகம்மது யூசுப், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சங்கச் செயலாளர் தங்கம் அப்துர்ரஹ்மான் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலை அகலப்படுத்தப்படுகிறது!!
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே சாலையை அகலப்படுத்தும் பணிகள்
தீவிரமாக நடந்து வருகின்றன.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் வரை உள்ள 55 கிலோ மீட்டர் தூர தேசியநெடுஞ்சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இந்தநிலையில் இந்த சாலை மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த தேசியநெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சாலையை அலப்படுத்துவதற்கான பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ராமநாதபுரம் புறநகர் பகுதி முதல் வழுதூர், பிரப்பன்வலசை, வேதாளை வரையிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராமநாதபுரத்தில்
இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் வரையிலும் தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ள சாலை 10 மீட்டர் அகல
சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையாக இன்னும் 6 மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ராமேசுவரம் நகரில் ஏற்பட்டு வரும்போக்கு வரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வுகாண ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில்வே நிலையம் பின்புறம் வழியாக தனுஷ்கோடி நம்புநாயகி அம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ரூ.34 கோடி மதிப்பில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இந்த புறவழிச்சாலையிலேயே மேம்பாலம் அமைத்து ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் ஒரு சாலையும் மற்றொரு பகுதியில் பஸ் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி சாலையை இணைக்கும் வகையில் ஒரு சாலையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ராமேசுவரம் பகுதியில் புறவழிச்சாலை பணிகள் முடியும் பட்சத்தில் பல வருடங்களாக ராமேசுவரம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)