Wednesday, August 26, 2015
துபாய் Masons சுப்பர் மார்கெட்டில் Sales Executive வேலை வாய்ப்பு!!
Sales Executive
Masons Supermarket - Dubai
Masons Supermarket - Dubai
We are in urgent need of smart and honest sales executive to work with us in our super market, the work condition is very perfect, male or female not matter, age must be at least 21 years and must have a valid passport. please contact if interested with your CV
TO APPLY: CLICK HERE
|
சவூதி நண்பர்கள் கவனத்திற்கு, முறையான அரசாங்க அனுமதியின்றி ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்டால் அபராதமும், சிறைதண்டனையும்!!
சவுதியில் வேலை செய்து வருவோர் குறைந்த
செலவுதானே என்பதால் ஒவ்வொருவரும் நான்கு முறை ஐந்து முறை ஹஜ் செய்கிறார்கள். இதை
பெருமையாக வெளியில் சொல்லவும் செய்கிறார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறைதான்
அரசு அனுமதிக்கும் என்பதால் ஆர்வமிகுதியால் சிலர் அரசு அனுமதியின்றி ஹஜ் பயணத்தை
மேற்கொள்கின்றனர். கடன் இல்லாமல் வசதியுடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும். அதை
விடுத்து அரசுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக குறைந்த பணத்தைக் கொடுத்து
கள்ளத்தனமாக வண்டிகளில் ஏறி ஹஜ் பயணம் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு
உதவி செய்பவர்களுக்கும் ரூம் அமைத்து கூடாரம் அடித்துக் கொடுப்பவர்களுக்கும் சவுதி
அரசு 100000 ரியால்
அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையையும் கொடுக்கிறது. இந்த வருடம் இதனை கடுமையாக
அமுல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு கள்ளத்தனமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் பலருக்கு சிரமத்தை கொடுக்கிறோம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். வெளிநாட்டு ஹஜ் பயணிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல நாள் சிரமப்பட்டு வருகின்றனர். சவுதி அரசு பல நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையையே ஒதுக்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு. கழிவறைக்கு பிரச்னை, குடி தண்ணீருக்கு பிரச்னை, கஃபாவை வலம் வரும் போதும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் கூடும் போது எத்தகைய அசௌகரியங்கள்
ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் மேற்கொண்டும் கள்ளத் தனமாக
லட்சக் கணக்கில் மக்கள் கூடினால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே இறைவனும் விரும்பாத சவுதி அரசும் கண்டிப்புடன் கூறியுள்ள கள்ளத் தனமான ஹஜ் பயணத்தை இனியாவது தவிர்போம். தகுதிக்கு மீறி இறைவன் எவரையும் சிரமப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அரசு அனுமதியோடு ஹஜ் செய்வோம். அதுவரை பொறுத்திருப்போம்.
தகவல் பகிர்வு: சவுதிகெஜட்
எனவே இறைவனும் விரும்பாத சவுதி அரசும் கண்டிப்புடன் கூறியுள்ள கள்ளத் தனமான ஹஜ் பயணத்தை இனியாவது தவிர்போம். தகுதிக்கு மீறி இறைவன் எவரையும் சிரமப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அரசு அனுமதியோடு ஹஜ் செய்வோம். அதுவரை பொறுத்திருப்போம்.
தகவல் பகிர்வு: சவுதிகெஜட்
காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா விருதுகளுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக மக்களுக்கு சேவை செய்து வருபவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
இவ்விருதினைப் பெற விரும்புவோர், ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்
அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து
சமர்ப்பிக்குமாறு,
ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளார்