Sunday, August 23, 2015
கீழக்கரை முஹைதீனியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி!!
கீழக்கரை முஹைதீனியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி!!மாணவர்கள் தங்கள் படைப்புகளை சிறப்பாக செய்து காட்சிப்படுத்தினர்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
ராமநாதபுரத்தில் ஆக. 24 ஆம் தேதிசமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை கேட்பு கூட்டம்!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்
அதிகாரி தலைமையில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான தங்கள் குறைகள் மற்றும்
புகார்களை தெரிவிக்கும் கூட்டம் ஆக. 24 ஆம் தேதி நடைபெறுவதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் நடைபெறவுள்ள குறை தீர்க்கும்
கூட்டத்தில் எரிவாயு பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலிஅக்பர் தலைமை வகிக்கிறார்.
சம்பந்தப்பட்டோர் தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறுமாறு ஆட்சியர் அலுவலகம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.