முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 22, 2015

செவிலியர் வேலை வாங்கித்தருவதாக ரூ.8.45 லட்சம் மோசடி!!

No comments :
கிராமப்புற செவிலியர் வேலை வாங்கித்தருவதாக ரூ.8.45 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

ராமநாதபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற தமிழ் முருகன். இவருக்கும் பார்த்திபனூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த வீரன் மகன் பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புற செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; எனக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் நெருக்கம் உள்ளது; அவர்கள் மூலம் வேலைவாங்கித் தருகிறேன், ஆட்களை தயார் செய்து பணம் வசூலித்துக் கொடுங்கள் என பிரகாஷ், தமிழ்முருகனிடம் கூறியுள்ளார். 

அதன்படி தமிழ் முருகன் தனது நண்பர்கள் 3 பேர் மூலம் பலரிடம் ரூ. 8.45 லட்சம் வசூலித்து கடந்த 27.3.15ல் பிரகாஷிடம் வழங்கியுள்ளார். பல மாதங்கள் ஆகியும் வேலைவாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டதற்கும் கொடுக்கவில்லை. பிரகாஷ், அவரது மனைவி காளியம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் தன்னை மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் தமிழ் முருகன் புகார் அளித்தார். 

எஸ்.பி., மயில்வாகனன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து, பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

செய்தி: தினகரன்


கீழக்கரை அருகே கோவில் உண்டியலை திருடி கிணற்றுக்குள் வீசிச்சென்ற மர்ம நபர்கள், போலீஸ் விசாரணை!!

No comments :
கீழக்கரை அருகே உள்ளது புல்லந்தை கிராமம். இந்த ஊர் நாடார் ஊருணியில் நேற்று காலை வாலிபர்கள் பிரசாந்த், சுரேஷ், கணேஷ்குமார், சந்திரசேகர் ஆகியோர் குளிக்கச்சென்றனர். 
ஊருணியில் தண்ணீர் இல்லாததால் அங்குள்ள சமுதாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் வாலிபர்களின் காலில் பொருள் ஒன்று தட்டுப்பட்டது.



இதையடுத்து அனைவரும் அதனை வெளியில் எடுத்து பார்த்தனர். அப்போது அது கோவில் உண்டியலாக இருந்ததால் அதனை திருடர்கள் யாராவது திருடிவந்து கிணற்றுக்குள் வீசிச்சென்றிருக்கலாம் என்று கருதினர். இதைத்தொடர்ந்து உண்டிலை மேலே கொண்டு வந்து பார்த்தபோது அதில் கொம்பூதி கோகுலகண்ணன் கோவிலுக்கு சொந்தமான உண்டியல் என்று எழுதப்பட்டு இருந்தது.

கடந்த 13–ந்தேதி அந்த கோவிலில் உண்டியல் திருடப்பட்டு உள்ளது. இந்த உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடிக்கொண்ட மர்ம நபர்கள் ஊருணியில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த உண்டியல்தான் தற்போது வாலிபர்கள் குளிக்கும்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார் அங்கு சென்று உண்டியலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினத்தந்தி

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

ராமநாதபுரம் கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை தலைமையில் கேணிக்கரை எஸ்ஐ கணேசலிங்க பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த அருண் (25), சதீஸ்குமார் (34), உருளை என்ற துரைப்பாண்டி (30), ராமநாதபுரம் தமீம் அன்சாரி (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  தப்பியோடிய கார்த்தி, வினோத், வீரபாண்டி என்ற கமால், கொக்கு என்ற மகேந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தி: தினமணி

ராமேசுவரம் திருக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியை தாண்டியது!!

No comments :
ராமேசுவரம் திருக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியை தாண்டியது.     


ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல்கள் நிரம்பியதை அடுத்து, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக வெளிநாட்டு பணம் உள்பட 1 கோடியே 9 லட்சத்து 78 ஆயிரத்து 349 ரூபாயும், 226 கிராம் தங்கமும், 11கிலோ 920 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தன.

உண்டியல் எண்ணும் பணியில் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும்,ஆசிரியைகளும், இந்தியன் வங்கி பணியாளர்களும், திருக்கோயில் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்