முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 16, 2015

ராமநாதபுரத்தில் சுதந்திர விழா நிகழ்ச்சி, ஆட்சியர் திரு. நந்தகுமார் கொடியேற்றினார், கீழக்கரை டி.எஸ்.பி திருமதி மகேஸ்வரிக்கு பாராட்டு பத்திரம்!!

No comments :
ராமநாதபுரத்தில் சுதந்திர விழா நிகழ்ச்சி, ஆட்சியர் திரு. நந்தகுமார் கொடியேற்றினார், கீழக்கரை டி.எஸ்.பி திருமதி மகேஸ்வரிக்கு பாராட்டு பத்திரம்!!




ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரி இவரது தலைமையிலான போலீசார் சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் கீழக்கரையை சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி சிறுமி கடத்தப்பட்டு சில மணி நேரங்களிலேயே சிறுமியை மீட்டனர். அதோடு அச்சிறுமியின் பெயரோ புகைப்படமோ வெளிவரதவாறு சத்தமில்லாமல் இப்பணியை மேற்கொண்டார்.



மேலும் அப்பகுதியில் நடைபெற்று வந்த மணல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிஎஸ்பி மஹேஸ்வரி. சீட்டாட்ட கிளப்கள் மற்றும் கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அதோடு கஞ்சா கடத்தல்களில் ஈடுபட்ட‌ கும்பல்களை கைது செய்துள்ளார் .சமீபத்தில ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பெரும் கும்பலை இவர் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இரவு நேரங்களில் மப்டியில் த‌ன்னந்தனியே ரோந்து மேற்கொண்டு சட்ட விரோத கும்பல்களை மடக்கி பிடிப்பதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் செயல்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவரது மெச்சதகுந்த செயல்களை பாராட்டி இவருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற சுந்ததிர தின விழாவில் பாராட்டு பத்திரம் வழங்கினார்.

இவரது தந்தை தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை, அழகர்சாமிபுரத்தை சேர்ந்த காளியப்பன். இவர் தியேட்டரில் ஆப்ரேட்டராக பணி புரிந்தார் இவரது மகளான மஹேஸ்வரி இவர் 2012ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தேர்வானவர் என்பது குறிப்பிடதக்கது

செய்தி: தினகரன் மற்றும் பாலாஜி கனேஷ், கீழக்கரை


இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு மூன் நர்சரி பிரைமரி பள்ளியில் 69 வது சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சி!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு மூன் நர்சரி பிரைமரி பள்ளியில் 69 வது சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




இவ்விழாவில் ஜமாத் தலைவர் ஜனாப். க.அப்துல்ஹக் அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆ.வேலாயுதம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

மழலை மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




செய்தி: திரு. அஸ்கர் அலி, தாளாளர், மூன் பள்ளி, வண்ணாங்குண்டு