முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 8, 2015

ME / M.Tech படித்தவர்களுக்கு விஞ்ஞானி வேலை வாய்ப்பு!!

No comments :



நாட்டின் மிக உயரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களி்ல ஒன்றான நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரியில்(என்ஏஎல்) விஞ்ஞானி பணியிடங்கள் காத்திருக்கின்றன.

பெங்களூரிலிருந்து செயல்பட்டு வரும் நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரியில் பல்வேறு துறைகளில் விஞ்ஞானி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மெக்கானிக், மானுபாக்ச்சரிங், டிசைன் என்ஜினீயரிங் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும். வயது 32க்குள் இருக்க வேண்டும்.


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 17 ஆகும். மேலும் இந்தப் பணியிடங்கள் தொடர்பான முழு விவரங்களை www.nal.res.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு அறியலாம்.

 

ராகிங் புகார் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவு!!

No comments :
ல்லுாரி மற்றும் பல்கலைகளில், ராகிங் புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின், ராகிங் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மாநில அறிவுரை குழு கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று நடந்தது. இதில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா மற்றும் உயர்கல்வி மன்றத்தினர் பங்கேற்றனர்.


ராகிங்கை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை, விழிப்புணர்வு பிரசாரம் போன்றவை குறித்து, துணைவேந்தர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ராகிங் தொடர்பாக எந்த கல்லுாரியிலிருந்து புகார் வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், உயர்கல்வித்துறை அதிகாரிகளின் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம், அமைச்சர் பழனியப்பன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில், கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை, பேராசிரியர் காலியிட விவரம், பணி மாறுதல், கல்லுாரி கல்வி இயக்கக பிரச்னை மற்றும் அரசு கல்லுாரி மாணவர்களின் மது விலக்கு போராட்டம் போன்றவை குறித்து விரிவாகவிவாதிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட சத்துணவுப் பிரிவில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட சத்துணவுப் பிரிவு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாளாகும்.

இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கை: ‘‘ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சத்துணவு திட்டப்பிரிவிற்கு கணினி இயக்குபவர் (டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) பணியிடம் ஒன்று நியமனம் செய்யப்பட உள்ளது.


இப்பணியிடம் தற்காலிகமானது. தகுதிகள்: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், எம்.எஸ்.ஆபிஸ் மற்றும் தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் கீழ்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெயர், தாய் அல்லது தந்தை பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், கல்வித்தகுதி, தொழில்நுட்பம் மற்றும் கணினி தகுதி, முன் அனுபவம், கையொப்பம் ஆகியவற்றினை வெள்ளைத்தாளில் பூர்த்தி செய்து சான்று நகல்களுடன் மாவட்ட ஆட்சியர், சத்துணவு திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் வரும் ஆக. 17 மாலை 5 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ராமேசுவரம் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஆக.15 தேரோட்டம்!!

No comments :
ராமேசுவரம் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஆக.15 தேரோட்டம்!!


ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இக்கோயிலில் தொடர்ந்து 17 நாள்கள் நடைபெறும்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேரோட்டமும், ஆகஸ்ட் 18 இல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் லெட்சுமிமாலா, கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ், ராஜாங்கம், ஆலய பேஷ்கார்கள், ராதா, அண்ணாத்துரை, கண்ணன், கலைச்செல்வம், நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி