Monday, August 3, 2015
துபாய் Al Shafar Group நிறுவனத்தில் HR Assistant வேலை வாய்ப்பு!!
HR Assistant
Al Shafar Group Of Companies - Jumeirah, Dubai
Al Shafar Group Of Companies - Jumeirah, Dubai
Salary: AED3,500.00 /month
Required experience:
Required education:
TO APPLY: CLICK HERE
|
ராமநாதபுரத்தில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி!!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ராமநாதபுரம்
சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் 14 வயதுக்கு
உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்று
வருகிறது. 2-வது நாள் போட்டியை ராமநாதபுரம் ஜே.எஸ்.கே. குழுமத்தின் தலைவர் லோகிதாசன்
தொடங்கி வைத்தார்.
முன்னதாக விளையாட்டு வீரர்களை மாவட்ட கிரிக்கெட் சங்க
தலைவர் பிரபாகரன்,
துணை தலைவர் அரு.சுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள்
வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.
அப்போது மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரபாகரன்
கூறியதாவது:- ராமநாதபுரத்தில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த
ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ராமநாதபுரத்தில் அடிக்கடி மாவட்ட அளவிலான போட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
செய்தி: தினத்தந்தி

இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கம், ஒரே நாளில் நடவடிக்கை!!
ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல்
ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
அதிகரிக்க ஆபாச வெப்சைட்டுகள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.
இந்நிலையில், ஆபாச வெப்சைட்டுகளை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன்
விசாரணை இன்னும் நடந்துவருகிறது.
இந்த மனு மீது சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, "நான்கு சுவற்றுக்குள் ஒரு தனிநபர் ஆபாச வெப்சைட்டுகளை பார்ப்பதை, சுப்ரீம் கோர்ட் தடுக்க முடியாது. இது எனது அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று அந்த நபர் கோர்ட்டில் முறையிட்டால் என்ன செய்வது" என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வேண்டுமானால் எடுக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இருப்பினும், கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வோடபோன், எம்டிஎன்எல், ஆக்ட், ஹாத்வே மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இணையதள சேவை வழங்கு நிறுவனங்கள், உடனடியாக 857 ஆபாச வெப்சைட்டுகளையும் தடை செய்துவிட்டன.
இதனிடையே, ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது தனி நபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களில் ஆதங்கம் தெரிவித்துவரும் நிலையில், அரசு சிறந்த முடிவை எடுத்துள்ளதாக மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
அரசியல் சாசனத்தின் ஆர்டிக்கிள் 21ன்கீழ் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கு பாஜக அரசு
முட்டுக்கட்டை போடுவதாகவும், ஆர்எஸ்எஸ்
அமைப்பின் வழிகாட்டுதலில் இவ்வாறு நடப்பதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்த்து பலர் சோஷியல் மீடியாக்களில்
கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: ஒன் இண்டியா
செய்தி: ஒன் இண்டியா