Saturday, August 1, 2015
சகலகலா வல்லவன் - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா, விவேக், சூரி, பிரபு, ராதாரவி ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார்
இசை: எஸ்எஸ் தமன்
தயாரிப்பு: லட்சுமி மூவி மேக்கர்ஸ்
இயக்கம்: சுராஜ்
தென்காசியில் சேர்மன் பதவிக்கான மோதலில்
ஜெயம் ரவி குடும்பத்துக்கும், சூரி குடும்பத்துக்கும் பெரும் பகை. ஆனால் அந்தப் பகையை, சூரியின் அக்கா மகள் அஞ்சலியைக் கண்டதும் மறந்து
நட்பாகிறார் ஜெயம் ரவி. இருவரும் ரொம்ப சீக்கிரமே காதலிக்க
ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியின் சொந்த மாமாவான
ராதாரவி, தன் மகள் த்ரிஷாவின்
திருமணத்துக்காக ஊரையே சென்னைக்கு அழைக்கிறார். திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஜான்
விஜய்யை போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்ய, வேறு வழியின்றி த்ரிஷாவை மணக்கிறார் ஜெயம் ரவி.
ஆனால் ரவிக்கும் த்ரிஷாவுக்கும் ஒத்துப் போகவில்லை. இருவரும் எலியும் பூனையுமா தினசரி மோதிக் கொள்ள, விவாகரத்து கோருகிறார் த்ரிஷா. ஊருக்கு வந்து தன்னுடன் 30 நாட்கள் தங்கினால் விவாகரத்து தருவதாக கூறுகிறார் ரவி. த்ரிஷாவும் வருகிறார். அதன் பிறகு நடந்தவற்றை திரையில் பாருங்கள். இயக்குநர் சுராஜின் பெரிய பலமே காமெடி. ஆனால் இந்தப் படத்தில் அந்தக் காமெடி விவேக் தயவால் ரசிக்கும்படி உள்ளது. சூரி வரும் காட்சிகளில் சில எரிச்சல் ரகம்.
ஜாலி இளைஞராக வரும் ஜெயம் ரவி ரசிக்கும்படி நடித்திருக்கிறார். அவருக்கும் அஞ்சலிக்கும்தான் பொருத்தம் பர்ஃபெக்டாக உள்ளது. நீச்சல் கற்றுக் கொள்ளும் காட்சி, அருணாச்சலம் படத்தில் வருவது போன்ற பச்சக் முத்தக் காட்சிகளும் கிளு கிளு ரகம். த்ரிஷாவுக்கு மேக்கப் சரியில்லையா.. முகமே அப்படித்தானா தெரியவில்லை.
கவர்ச்சி காட்டுவதில் புதிய எல்லையைத் தொட்டிருக்கும் அஞ்சலி எடைக்குறைப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பல காட்சிகள் ஏற்கெனவே பார்த்தது போலவும், எதிர்ப்பார்த்த மாதிரியே இருப்பதும் சுராஜ் திரைக்கதையின் பலவீனம். குறிப்பாக அந்த சண்டைக் காட்சி அநாவசியம்.
விவேக்கின் காமெடி சில இடங்களில் அடல்ட்ஸ் ஒன்லி ரகம் என்றாலும், அவரும் செல்முருகனும் அடிக்கும் லூட்டிதான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஜெயம் ரவி போடும் 'ஒரு மாதம் என்னோடு வந்து தங்கு' என்ற கண்டிஷனெல்லாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்தவைதானே!
யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் அதே ஓகேவை தமனின் இசைக்கு சொல்ல முடியாது. மூன்று பாடல்களை கண்ணை மூடிக் கொண்டு தூக்கிவிடலாம். வழக்கமான காமெடி மசாலாதான். ஆனால் ஆங்காங்கே சுவையயான சிரிப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் அப்பாடக்கராக நிற்கிறான் சகலகலா வல்லவன்!
விமர்சனம்: ஒன் இண்டியா
அமீரக Dar Al Handasah நிறுவனத்தில் Dar Al Handasah வேலை வாய்ப்பு!!
ச்
Dar Al Handasah
Khalidiya, UAE
Posted 4 days ago
Ref: GP714-17
Ref: GP714-17
The Role
- Review the MEP coordination drawings submitted by the contractors at each stage of the Construction to ensure completeness, correctness, compliance with the scope of work and agreements requirements.
- Advise the Project Manager of circumstances that may or will affect delivery of long lead items related to his discipline and take remedial measures, subject to the approval of the Client.
- Manage and co-ordinate the discharge of MEP Contractors obligations as defined in the Construction Agreement and all external influences likely to affect Project delivery on a daily basis.
- Manage and co-ordinate the discharge of MEP Consultants obligations as defined in the consultancy agreements.
- Manage liaison by the project team with relevant statutory authorities and utility providers.
- Review the Request for Information (RFI), change requests / variations submitted by the contractors.
- Review the MEP material submittals submitted by the contractors making sure they are in accordance to specifications and agreements requirements.
- Carry out constructability review during the design and construction stages.
- Review in a timely manner the design consultant / contractor/s submittals and forward comments to the project / engineering manager
- Ensure the design consultant / contractor/s incorporate the comments raised from previous stages.
- Attend technical meetings with the design consultant and other sub-contractors, contractors, and company team.
- Review contractor / sub-contractor's proposed project organizations and related CV's and report to project / engineering manager on his findings.

Requirements
- An Engineering degree (Mechanical).
- At least 10 years of work experience in the UAE with consultancies involved in large scale construction projects.
- At least 1-2 hospital/medical/healthcare facility completed.
- At least 10 years of work experience in the UAE with consultancies involved in large scale construction projects.
- At least 1-2 hospital/medical/healthcare facility completed.
About the Company
Dar Al-Handasah (Shair and Partners) has been a pioneering force in the planning, design and implementation of development projects in the Middle East, Africa and Asia since its beginnings in 1956. Today we are a global consultancy with 43 offices throughout 29 countries, known for our problem identification, tailor made-designs, quality, on-time deliverables and multi-disciplinary expertise.
TO APPLY: CLICK HERE
கீழக்கரையில் ஜனாஸா தொழுகை, இராமேஸ்வரம் கோவிலில் மோட்ச தீபம், இரு காரியங்களும் ஒருவருக்காகவே, அவரே அப்துல் கலாம்!!
கீழக்கரை ஜும்ஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குபின் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல் கலாம் மறைவிற்காக காயிப் ஜனாஸா தொழுகை நடைபெற்றது.
தொழுகைக்கு முன் டவுன் காஜியும் ஜும்ஆ மஸ்ஜிதின் மஹல்லி - முதவல்லியுமான மவ்லவி காஜி A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் சித்தீகி அவர்கள் நிகழ்த்திய இரங்கல் உரையில் உங்களில் மரணித்தவர்களின் நல்லவற்றை நினைவு கூறுங்கள் என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைப் படி நாம் மறைந்த 11வது இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் பற்றி நினைவு கூற வேண்டும்.
அவர் நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக நாட்டின் பாதுகாப்பிற்காக இளைஞர்களின் நல்வாழ்விற்காக மாணவர்களின் நல்ல எதிர்காலத்திற்காக செய்த சேவைகள் காலமெல்லாம் நிலைத்து நிற்கும் அளவில் வரலாறாக அமைந்துவிட்டது.
இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அன்று மாலை ராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில், கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கண்ணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், அலுவலர் மாரியப்பன், கோயில் குருக்கள், பாஜக தேசியக் குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வண்ணாங்குண்டு கிராமத்தில் டாக்டர் அபுல்கலாம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி!!
வண்ணாங்குண்டு கிராமத்தில் லஜ்னதுல்
இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நடந்த டாக்டர் அபுல்கலாம்
அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த பட்டது.
இந்நிகழ்ச்க்கு மூன் நர்சரி பிரைமரி
பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி:
திரு. அஸ்கர் அலி, திமுக ஒன்றிய செயலாளர், வண்ணாங்குண்டு