Wednesday, July 29, 2015
கீழக்கரையில் குடும்பத் தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை?!!
கீழக்கரையில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர்
செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கீழக்கரை 500
பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முஹம்மது காசிம் (33). இவருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
எனவே, மனைவியை ஏமாற்றுவதற்காக
திங்கள்கிழமை இரவு விளையாட்டாக தூக்கு மாட்டியவர் அதில் சிக்கி உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி
இறந்துகிடந்தார். இது குறித்து,
காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகிறார்.
செய்தி: தினமணி
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் காலம் மறைவிற்கு மஹாராஜா சில்க்ஸ் புகழஞ்சலி!!
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் காலம் மறைவிற்கு மஹாராஜா சில்க்ஸ் புக்ழஞ்சலி!!
கீழக்கரை வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார், இருவரி கைது செய்யப்பட்டனர்!!
கீழக்கரையைச் சேர்ந்த திப்பு சுல்தான் (வயது-25) என்பவர் கத்தியால்
குத்தப்பட்டார். முன்விரோதம் காரணமகா கை(எ) முஹம்மது கான்(வயது-26), முஹம்மது ஆதம் ஆகிய இருவர்
குத்தியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
சேர்ந்த திப்பு சுல்தான் (வயது-25)
கை(எ) முஹம்மது கான்(வயது-26
இதில் கை(எ) முஹம்மது கான் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதானவர்
என்று தெரியவந்துள்ளது.
2 மணி நேரத்துக்குள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள், திரு. மினியாண்டி மறறும் திரு, சிவ சுப்ர்மணியன் ஆகிய இருவரையும் டி.எஸ்.பி. திருமதி.மகேஸ்வரி பாராட்டிட்னார்.
2 மணி நேரத்துக்குள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள், திரு. மினியாண்டி மறறும் திரு, சிவ சுப்ர்மணியன் ஆகிய இருவரையும் டி.எஸ்.பி. திருமதி.மகேஸ்வரி பாராட்டிட்னார்.
செய்தி: திரு.முஹம்மது சுஐபு, திமுக, கீழக்கரை
பி.இ கவுன்சிலிங் நிறைவுற்றது, 91 ஆயிரம் இடங்கள் காலி!!
சென்னையில் நடைபெற்று வந்த பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இதைத்
தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 91 ஆயிரம் அரசு இடங்களே
காலியாக இருக்கும் நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கவுன்சிலிங் மையத்தில் இதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வந்தது.
2015-16 கல்வியாண்டு கவுன்சிலிங் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க 1,48,794 பேர் அழைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கவுன்சிலிங் மையத்தில் இதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வந்தது.
2015-16 கல்வியாண்டு கவுன்சிலிங் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க 1,48,794 பேர் அழைக்கப்பட்டனர்.
இவர்களில் 1,01,620 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இதில் 62,970 பேர் மாணவர்கள், 38,650 பேர் மாணவிகள்.
அழைக்கப்பட்டவர்களில் 46,571 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டனர். 603 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
அதே நேரத்தில் சுமார் 91 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. அரசு என்ஜினீயரி்ங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களாகும் இவை. இவை அனைத்துமே அரசு ஒதுக்கீட்டின் கீழே கொடுக்கப்பட்ட இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அதிக மவுசு இருந்தது. என்ஜினீயரிங் படித்தாலே போதும். நல்ல வேலை கிடைத்துவிடும் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால் உலகப் பொருளாதார அளவில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக என்ஜீனியரிங் படிப்புகளுக்கு தற்போது மவுசு குறைந்துள்ளது. அதனால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
சில கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பாத நிலை உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை, தரவரிசையில் பின்தங்கிய நிலை போன்றவற்றால் இந்தக் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை என்றார் அவர்.
நன்றி: ஒன் இண்டியா
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை இராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது, நாளை நல்லடக்கம்!!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல்
இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு,
அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
84
வயதான அப்துல் கலாம் நேற்று முன்தினம் காலமானார். மேகாலயா தலைநகர்
ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கலாம் மறைவுச்
செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கலாம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அம்மாநில துணை நிலை
ஆளுநர் நஜீப் ஜங்க்,
கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை
செலுத்தினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, கலாம் உடலுக்கு மலர்
வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர்
ஹமீது அன்சாரி,
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மரியாதை
செலுத்தினர்.
கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ
மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கலாமின் உடலை சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும்
என அவரது உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது
தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில்,
ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம்
செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட
நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து
ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை
தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மதியம் 1 மணிக்கு கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம்
ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது. அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உடல் அஞ்சலிக்காக
வைக்கப்படுகிறது. மதியம் 2
மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல்
கட்சியினர்,
பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள
கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே
உடல் வைக்கப்படுகிறது.
நாளை காலை 11 மணிக்கு முகைதீன்
ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்
தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக
எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா,
மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள்,
அமைச்சர்கள், முக்கிய அரசியல்
தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதால் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணிகள்
முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும்
இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் உடலை எதிர்பார்த்து
ராமேஸ்வரம் தீவு கண்ணீர்க் கடலில் ஆழ்ந்துள்ளது.