Tuesday, July 28, 2015
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவு, சொந்த ஊர் ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய கோரிக்கை!!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாரடைப்பால் நேற்றிரவு காலமான
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல் ராணுவ ஹெலிகாப்டரில்
ஷில்லாங்கிலிருந்து,
அசாம் மாநிலம் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து
விமானம் மூலமாக டெல்லி வந்து கொண்டிருக்கின்றது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவு செய்தியை
அறிந்த ராமேஸ்வரம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கலாமின் இறுதி முகத்தைக் கூட
காண முடியாதா என்ற ஏக்கத்தில் ராமேஸ்வரம் மக்கள் தவித்து வருகின்றனர்.
இளைஞர்கள், மாணவர்களின் உயிர் துடிப்பாக இருந்து, ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற எங்கள் மண்ணின் மைந்தர் இறந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள், மாணவர்களின் உயிர் துடிப்பாக இருந்து, ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற எங்கள் மண்ணின் மைந்தர் இறந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களுக்கு சேவை செய்த மாபெரும் விஞ்ஞானியை இழந்தது
ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது உடலை
ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவரது கடைசி முகத்தை காண இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது
ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் காத்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
முகவை முரசு சர்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.
முகவை முரசு சர்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.