Thursday, July 23, 2015
இந்திய அலுவலர் சங்கம் வழங்கும் கல்வி உதவித் தொகை, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!!
இந்திய அலுவலர் சங்கம் வழங்கும் கல்வி உதவித் தொகை பெற
தகுதியான ஏழை மாணவ,
மாணவியர் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை
கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு: இந்திய அலுவலர் சங்கம் வழங்கும் கல்வி
உதவித் தொகையினைப் பெற தகுதியான ஏழை மாணவ, மாணவியர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்து அரசுப்பள்ளிகள், மாநகராட்சிகள் மற்றும்
நகராட்சிகள் நடத்தும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து பிளஸ் 2 வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி
பயிலுவோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை இந்திய அலுவலர் சங்கத்திலிருந்து நேரடியாகவோ அல்லது அஞ்சல்
மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் www.ioachennai.com வலைதளத்திலிருந்து இலவசமாகப்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பொதுச் செயலர், இந்திய அலுவலர் சங்கம்,
நூற்றாண்டு விழா வளாகம், 69,திரு.வி.க.நெடுஞ்சாலை, ராயப்பேட்டை,
சென்னை-600014 என்ற முகவரிக்கு அனுப்பி
வைக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.