முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 19, 2015

தீவிபத்தால் ஏர்வாடி மீன் மார்க்கெட் எரிந்து சாம்பலானது!!

No comments :
ஏர்வாடி பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் மீன் மார்க்கெட் எரிந்து சாம்பலானது.

தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவின் பின்பகுதியில் மீன்மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளும், மீன் பதப்படுத்தும் கிடங்கும் உள்ளது. இந்தநிலையில் நேற்று பிற்பகலில் இந்த பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. மளமளவென பரவிய இந்த தீ காற்றின் வேகத்தால் அனைத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மீன்பதப்படுத்தும் கிடங்கும் எரிந்து அதில் இருந்த பதப்படுத்தும் பெட்டிகள், ஐஸ்பெட்டிகள், மீன்கள் முதலியவை எரிந்து விட்டன. இந்த மார்க்கெட் பகுதியை ஒட்டி அமைந்துள்ள அப்துல்ரஷீத் என்பவரின் ஓட்டலுக்கும் பரவிய தீ அங்கிருந்த பொருட்களில் பற்றி எரிந்தது. 



இந்த தீவிபத்து குறித்து அறிந்த ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் முன்னணி தீயணைப்பு அலுவலர் தசரதன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ வேகமாக பரவியதால் மார்க்கெட் உள்ளிட்டவற்றில் இருந்த எந்த பொருளையும் பத்திரமாக மீட்க முடியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

அச்ச உணர்வு

இதுகுறித்து அந்த பகுதியினர் தெரிவித்ததாவது:- இந்த மார்க்கெட் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதாலும் அருகில் மதுக்கடை உள்ளதாலும் மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மதுகுடிப் பவர்கள் பல்வேறு அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மனநலம் பாதித்தவர்கள் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த பகுதியில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதோடு, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். பாதுகாப்பு இல்லாத இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாலும், தீ வைப்பு சம்பவங்கள் நடப்பதாலும் அச்ச உணர்வுடன் உள்ளோம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.
செய்தி: தினத்தந்தி



ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் தொழுகைகள்!!

No comments :
ரம்ஜான் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை:

புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் 30 நாட்களும் நோன்பு இருந்தனர். இதன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 127 பள்ளிவாசல்களில் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி கோலாகலமாக கொண்டாடினர். பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

சிறப்பு தொழுகை:

விழாவையொட்டி ராமநாதபுரம் ஈத்கா கோரித்தோப்பு மைதானத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் சிறப்பு தொழுகை நடத்தினர். ஹாஜியாரப்பா பள்ளி இமாம் அப்துல் அலி ஆலிம் சிறப்பு தொழுகை நடத்தி வைத்தார். 



ராமநாதபுரம் சென்ட்ரல் மஸ்ஜித் பள்ளி இமாம் முகமதுயாசின் குத்பா ஓதினார். இதில் ராமநாதபுரம் பெரிய முகல்லம், சிறிய முகல்லம் ஜமாத்துக்கள், பாசிப்பட்டறை ஜமாத், அம்பலகாரத்தெரு ஜமாத், காதர் பள்ளிவாசல் ஜமாத் ஆகிய 5 பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரைஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளியவர்களுக்கு அரிசி, புத்தாடை மற்றும் பித்ரா பணம் போன்றவற்றை தானமாக வழங்கினர்.

வெளிபட்டினம் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நடை பெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தி னர். இதுதவிர ஆங்காங்கே உள்ள மதரசாக்களில் பெண்கள் தொழுகை நடத்தினர். 

கீழக்கரை:

கீழக்கரையில் 8 முஸ்லிம் ஜமாத்துக்களை உள்ளடக்கிய பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நடுத்தெரு ஜும்மா பள்ளி, தெற்குத்தெரு இஸ்லாமியா பள்ளி, கிழக்கு தெரு ஈத்கா திடல் ஆகியவற்றிலும், மதரசாக்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. \


இதேபோல ஏர்வாடி, பெரியபட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். காரிக்கூட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் நூர்முகமது கலந்து கொண்டார். 

தொண்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை மலுங்கு சாகிப் தெரு திடலில் நடைபெற்றது. தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமையில் தொண்டி ஜமாத் தலைவர்கள் ஜலால், செய்யது அலி, பந்தேநவாஸ், வின்னத்துல்லா, இலியாஸ், கமலுதீன் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். பள்ளிவாசல் இமாம்கள் முகமது காசின் யூசுதி, அபுபக்கர், முகைதீன் ஆகியோர் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். நிகழ்ச்சியில் அமீர்சுல்தான் அகாடமி பள்ளி நிர்வாகி அப்துல் ரவூப், இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் பள்ளி நிர்வாகி சாதிக், தொண்டி பேரூராட்சி தலைவர் சேகுநயினா, துணை தலைவர் பவுசுல்ஹக், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதேபோல இந்தபகுதியில் உள்ள நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வீரசங்கிலிமடம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம், வட்டாணம், வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, திருவாடானை, கவலைவென்றான், சிறுகம்பையூர், மச்சூர், எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், புதுவயல் ஆகிய இடங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை அந்தந்த பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தொழுகை செய்தனர். 

செய்தி: தினத்தந்தி

ராமநாதபுரத்தில் வரும் 23 ஆம் தேதி குறை கேட்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் நடைபெறுகிறது.








இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்டோர் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து உரிய பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு, ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.





அபுதாபி Parsons International நிறுவனத்தில் HSE Coordinator வேலை வாய்ப்பு!!

No comments :

HSE Coordinator

Parsons International

Abu Dhabi, UAE

Posted 7 days ago
Ref: HP094-1781







The Role

Through Parsons’ engineering and construction management services, we deliver innovative, safe and sustainable infrastructure in Abu Dhabi, Dubai, Qatar, Oman, Bahrain and Kuwait. Our focus is on delivering air, rail, road and highway transportation; water conveyance and/or wastewater treatment; and land development and public infrastructure to our clients and your communities. Parsons creates interconnected communities and world class infrastructure.

The HSE Coordinator is responsible for ensuring adherence to the HSE standards of the Project and auditing of CMA and Contractors for proper implementation of safety controls.

- Ensure the effective implementation, monitoring and measurement of HSE policies within the program.
- Report on the project’s compliance with HSE policies to the HSE Manager
- Work with the HSE Managers to ensure all safety requirements are understood by the Contractors
- Provide guidance to Contractors in reporting Project incidents
- Review and evaluate adequacy of actions taken by Contractors to correct safety violations
- Ensure reporting of monthly safety statistics


Requirements

- Degree in Engineering from a recognized University.
- Minimum 10 years HSE experience involving the application of international HSE standards in the construction industry
- Appropriate professional qualifications and affiliations are preferred.
- Experience on large civil projects, with additional safety knowledge relating to electrical and mechanical work.
- Experience with pipeline, deep excavations and scaffolding are also preferred.
- Good oral and written communication skills.
- Ability to communicate logically and clearly with management and staff.
- Commitment to safe work practices.

About the Company

Parsons is a leader in many diverse markets such as infrastructure, transportation, water, telecommunications, aviation, commercial, environmental, planning, industrial manufacturing, education, healthcare, life sciences and homeland security.
Parsons provides technical and management solutions to federal, regional and local government agencies as well as private industries worldwide.

TO APPLY: CLICK HERE