Thursday, July 9, 2015
பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!
பொறியாளர் படிப்பு படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு
ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ரயில்வே.
புதிய
பணியிடங்களுக்காக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
ரயில்வேயி்ல் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் ஆட்களை அமர்த்தும் பணியில்
ரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.
தற்போது 2235 முதுநிலை மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கீழக்கரை நகராட்சி ஆணையர் இடமாற்றம்.!!
கீழக்கரை நகராட்சி ஆணையராக உள்ள செ. முருகேசன், சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியங்குடி நகராட்சிக்கு புதன்கிழமை இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஆணையராக, உசிலம்பட்டி நகர்மன்ற
ஆணையராகப் பணியாற்றிய எஸ். மருது விரைவில் கீழக்கரையில் பொறுப்பேற்க உள்ளார். இவர்
ஏற்கெனவே,
கீழக்கரை நகராட்சியில் தலைமைக் கணக்காளராகப் பணியாற்றியவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையரை மாற்றக்கூடாது என்று அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்து, பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை