Wednesday, July 1, 2015
இன்று நேற்று நாளை - தமிழ் திரை விமர்சனம்!!
கால இயந்திரம்
வழியாக ஒரு பெண், தான் பிறந்த அந்த நாளுக்குப் போகிறாள்.
பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்து, அங்கு பிறக்கும் தன்னையே செவிலியரிடம் இருந்து வாங்கி உச்சிமுகர்கிறாள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் இப்படியொரு காட்சி.
இந்த வியப்பை
படம் முழுவதும் தருகிறார் அறிமுக இயக்குநர் ரவிகுமார். கால இயந்திரத்தின் வழியே
கடந்த காலத்திலும் எதிர்காலத் திலும் பயணம் என்னும் சிக்கலான களத்தில் சரளமாக
விளையாடுகிறார்.
யாரிடமும் வேலை
பார்க்காமல் சொந்தத் தொழில் செய்து முன்னுக்கு வர நினைப்பவர் விஷ்ணு விஷால்.
அதற்காகப் புதிய புதிய திட்டங்களுடன் கடனுக்காக வங்கிகளின் படியேறி ‘பல்பு’ வாங்கிக்கொண்டிருப்பவர். அவரது நண்பர்
கருணா, ராசியில்லாத ஜோசியர்.
விஷ்ணுவின்
பணக்காரக் காதலி மியா ஜார்ஜ். ‘‘அப்பாவிடம் காதலைச் சொல்லவேண்டும்
என்றால், முதலில் ஒரு வேலையைப் பார்’’ என விஷ்ணு விடம் சொல்கிறார் மியா. அவரோ, சொந்தத் தொழிலில் பிடிவாதமாக
இருக்கிறார். பொய் சொல்லி அப்பாவைச் சம்மதிக்க வைக்க மியா முயல்கிறார். மியாவின்
தந்தை தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் அந்தப் பொய்யை அம்பலப்படுத்தி இருவரையும் தலைகுனிய
வைக்கிறார்.
இதற்கிடையில்
குழந்தைவேலு என் னும் ரவுடியால் ஜெயப்பிரகாஷ் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்.
பார்த்தசாரதி
என்னும் ‘கிறுக்கு’
விஞ்ஞானி
பலவிதமான பரிசோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவரது புதுமையான தானியங்கி காரும், விஷ்ணு-கருணாவின் காரும் இரவு நேரத்தில் மோதிக்கொள்ள, மூவரும் சாலையில் கிடக்கிறார்கள். அப்போது தான் அந்த இயந்திரம் அவர்கள் கையில்
கிடைக்கிறது. அந்த இயந்திரம் பற்றிய தகவல்களை விஞ்ஞானி கண்டுபிடித்துச் சொல்ல, அவரை ஏமாற்றிவிட்டு இயந்திரத்தைக் கைப்பற்றுகிறார்கள் நண்பர்கள். அதை
வைத்துக்கொண்டு சம்பாதிக்கும் வழியைக் கண்டு பிடிக்கிறார்கள்.
கால இயந்திரம்
மூலம் இறந்த காலத் துக்குப் போகும்போது அங்கு எதையும் தொந்தரவு செய்யக் கூடாது.
அப்படிச் செய்தால் அது நிகழ்காலத்திலும் பாதிப்பை விளைவிக்கும். உதாரண மாக இறந்த
காலத்துக்குச் சென்று ஒருவரைக் கொன்றுவிட்டால் அவர் நிகழ்காலத்திலும் இல்லாமல்
போய் விடுவார்.
கால இயந்திரம்
மூலம் கடந்தகால விஷயங்களைத் தெரிந்துகொண்டு பணம் சம்பாதிக்கும் விஷ்ணுவும் கருணாவும் தங்களை அறியாமல் செய்யும் ஒரு காரியத்தால் கடந்தகால நிகழ்வில் அபஸ்வரம்
தட்டிவிடுகிறது. அதன் விளைவாக அவர்களது நிகழ்காலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
மீண்டும் கடந்த காலத்துக்குச் சென்று அதைச் சரிசெய்ய முனையும்போது மேலும் மேலும்
சிக்கல்கள், இயந்திரத் தில் கோளாறு என்று வசமாக
மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி நிகழ்காலத் திலும் கடந்த காலத்திலும் மாறிமாறிப்
பயணிக்கும் கதை சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது.
கால இயந்திரப்
பயணம் என்பது சிக்கலான கருத்து. அதை குழப்பமின்றி ரசிகர்களுக்குப் புரியும்படி
திரையில் சொன்னதற்காக ரவிகுமாரைப் பாராட்ட வேண்டும். காலப் பயணத் தின் விளைவுகளை
சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து கொடுத்ததற்காக வும் பாராட்டலாம். ஒருவர் கடந்த
காலத்துக்குச் சென்று தன்னையே பார்ப்பதைத் திரையில் பார்க்கும்போது ரசிகர்கள்
கொள்ளும் ஆவலும் வியப்பும் திரைக்கதையின் வெற்றி. கடந்தகால நிகழ்வுகளைக்
குழப்பிவிட்ட பிறகு அதைச் சரிசெய்வதற்காக நண்பர்கள் படும் பாடு விறுவிறுப்பாகப்
படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி கலகலப்பு என்றால் அடுத்த பாதியில் காலப்
பயணத்தின் குழப்பங்களால் ஏற்படும் விறுவிறுப்பு.
விஷ்ணு
யதார்த்தமாக நடிக்கிறார். கருணா உதிர்க்கும் வசனங்களில் திரை யரங்கில் சிரிப்பலை
எழுகிறது. காமெடி யன் என்பதைத் தாண்டி நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அவர்
நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மியா ஜார்ஜுக்குத் தமிழில் இது 2-வது படம். ஆனால் இந்தப் படமே அவருக்கு நல்ல அறிமுகமாக இருக்கும். வெகுளிப்
பெண்ணாக, அழகான காதலியாக வந்து ரசிகர்கள் மனதில்
இடம்பிடிக்கிறார். ரவுடியாக வரும் சாய் ரவி, பார்த்த சாரதியாக வரும்
டி.எம்.கார்த்திக்கின் நடிப்பு கச்சிதம்.
கால இயந்திர
வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஃபேன்டசி படம் என்றாலும் கிராபிக்ஸ் காட்சிகளை
அதிகம் காட்டி மிரட்டவில்லை. ஒளிப்பதிவாளர் ஏ.வசந் தின் கேமரா உறுத்தலே இல்லாமல்
கதையுடன் பயணிக்கிறது. காலப் பயணங்களுக்கு வித்தியாசமான வண் ணம் தந்து
வேறுபடுத்திக் காட்டுகிறார். ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை நன்று.
இரண்டாவது
பாதியில் பல காட்சி களுக்கு லாஜிக் இல்லை. கால இயந் திரத்தை மையமிட்ட காமெடி
காட்சிகள் ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்படுத்துகின் றன. ஒருவர் தன் பெண்ணுடைய காதலனை
ஏற்காமல் போனாலும் இருவரையும் சேர்த்துப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவாரா?
சுறுசுறுப்பாக
நகரும் திரைக்கதை இதுபோன்ற குறைகளை மறக்கடித்து நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த
திருப்தியை அளிக்கிறது.
விமர்சனம்:
தி ஹிந்து
துபாய் Al Bustan Centre ஹோட்டலில் Asst. Store Keeper வேலை வாய்ப்பு!!
Asst. Store Keeper
Al Bustan Centre & Residence - Dubai
Al Bustan Centre & Residence - Dubai
Al Bustan Centre & Residence, Dubai, UAE is inviting applications for the position of Asst. Store Keeper from suitably qualified & experienced candidates. The candidates must have experience in handling the tasks of General Stores / Food & Beverage Stores with ability to communicate in English well. Must be computer literate & experience in hospitality trade would be an advantage Attractive basic salary, accommodation, medical, meals, uniforms, 30 days paid annual leave, transportation, return ticket to home country every 24 months are available for selected candidates Other Information
|
பரமக்குடி மாணவி ஆசியஅளவில் சாதனை!!
பரமக்குடி மாணவி ஆசியஅளவில் சாதனை படைத்துள்ளார். அவர்
குண்டு எறிதலில் முந்திய சாதனையை முறியடித்தார்.
ஆசிய போட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகள் கவுரிசங்கரி. இவர் பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் குண்டு எறிதல் போட்டியில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவித்துள்ளார்.
ஆசிய போட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகள் கவுரிசங்கரி. இவர் பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் குண்டு எறிதல் போட்டியில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவித்துள்ளார்.
இந்தநிலையில் சீனாவில் நடந்துவரும் ஆசிய தடகள போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் கவுரிசங்கரி கலந்து கொண்டார். இந்த போட்டியில் இவர் 13.82 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் குண்டு எறிதலில் ஏற்கனவே மும்பையை சேர்ந்த மேகனா என்பவரது 12.91 மீட்டர் தூர சாதனையை முறியடித்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவி கவுரிசங்கரிக்கு வருகிற 2-ந்தேதி தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
வாழ்த்து:
இந்த சாதனை குறித்து மாணவி கவுரிசங்கரி சீனாவில் இருந்து செல்போன் மூலம் பரமக்குடியில் உள்ள அவருடைய பெற்றோர் குருமூர்த்தி- தனலெட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாதனை மாணவி கவுரி சங்கரிக்கும், அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சரவண சுதர்ச னுக்கும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டுத் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி: தினத்தந்தி
இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி, இராமநாதபுர மாவட்டத்தில் கொண்டாட்டம்!!
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி
பெற்றதை அடுத்து,
சிவகங்கை, ராமநாதபுரம்
மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினர்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில், அக்கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், அவ்வழியே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு
இனிப்புகள் வழங்கினர். இந் நிகழ்ச்சியில், சிவகங்கை நகரச் செயலர் ஆனந்தன், மாணவரணி ராஜா
ஜாக்குலின் அலெக்ஸ்,
சிவாஜி, வழக்குரைஞர் பிரிவு
சுந்தரபாண்டியன்,
தொகுதிச் செயலர் சொர்ணலிங்கம், நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
ராமநாதபுரத்தில் கொண்டாட்டம்:
ராமநாதபுரம்
அரண்மனை முன்பாக,
அதிமுக மாவட்டச் செயலர் ஆர். தர்மர் தலைமையில்
அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், கட்சியின் அவைத்தலைவர் செ. முருகேசன், நகர் செயலர் அங்குச்சாமி, மாவட்ட மாணவரணிச்
செயலர் செந்தில்குமார்,
மாவட்ட மாணவரணி ஒன்றிய இணைச் செயலர் சபரி. தயாமதி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் கே.சி. வரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரபாண்டி, தனசேகரன், குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
முதுகுளத்தூர், கடலாடியில்
அதிமுகவினர் கொண்டாட்டம்: முதுகுளத்தூர்,கடலாடி,
சாயல்குடி பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு
வெடித்தும்,
இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
முதுகுளத்தூரில், கவுன்சிலர்
உடை. எம். சிவக்குமார் தலைமையிலும், ஒன்றிய
இளைஞரணிச் செயலர் தூரி மாடசாமி, நகர் பேரவை இணைச்
செயலர் அர்ச்சுனன்,விவசாய அணி இணைச் செயலர் வி. கருப்புசாமி ஆகியோர் முன்னிலையிலும், அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில், கவுன்சிலர்கள் சீனி, சரவணன்,
முருகன், அண்ணா தொழிற்சங்க
நிர்வாகிகள்,
மாணவரணிச் செயலர் சி. தமிழ், வழக்குரைஞர் பிரிவு செயலர் அழகுமுத்து, நகர் மகளிர் அணி செயலர் மணிமேகலை, ஊராட்சித்
தலைவர்கள் மாயக்கண்ணன்,
ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலாடியில், ஒன்றியக் கழகச்
செயலர் கே. முனியசாமி பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பத்மநாதன், ஒன்றிய அவைத் தலைவர் வேலுச்சாமி, நகரச் செயலர்
முருகன்,
கவுன்சிலர்கள், ஊராட்சித்
தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாயல்குடியில், ஒன்றியக் குழுத்
தலைவர் வீ. மூக்கையா தலைமையில், அக்கட்சியினர்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு
வெடித்தும் கொண்டாடினர். இதில், ஒன்றியச்
செயலர் அந்தோணிராஜ்,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் எம். செய்யது காதர், நகரச் செயலர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி:
தினமணி