Friday, June 26, 2015
தேசிய அளவிலான தடகள போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவர்கள் தேர்வு!!
தேசிய அளவிலான தடகள போட்டிக்கு
பரமக்குடி பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில்
மாவட்ட அளவிலான தேசிய தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார்
200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி
11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மோகனாதேவி, யோகேஸ்வரன், மோகன், கருணாகரன், அருள்பெல்சியா,
சபரிநாதன், ரகுமான்கான், லீலாவதி, பாண்டீஸ்வரி, சத்யபிரியா, வெங்கடேசன் ஆகியோர்
400 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், வாள் சண்டை
ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றனர்.
இவர்கள் அடுத்த மாதம் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் இவர்கள் வரும் செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்குபெற உள்ளனர்.
தகுதிபெற்ற மாணவ, மாணவிகள், அவர்களுக்கு
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா ஆகியோரை
பள்ளி தாளாளர் முகமது உமர், தலைமையாசிரியர் அஜ்மல்கான் ஆகியோர் பாராட்டினர்.
செய்தி: தினகரன்