Thursday, June 25, 2015
கீழக்கரையில் அமைதி பேச்சுவார்த்தையையடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தி வைப்பு!!
கீழக்கரையில் அமைதி பேச்சுவார்த்தையையடுத்து
அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தி வைப்பு!!
கீழக்கரையில் நகராட்சியில் சேர்மனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும்
அவருடைய கணவரை கண்டித்தும் இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தி
வைத்தனர் அனைத்து கட்சியினர்.
இன்று நடந்த இந்த அமைதி பேச்சு
வார்த்தையில்,
கீழக்கரை தாலுகா வாட்டாச்சியர் திருமதி. கமலா
அவர்களும்
தாசில்தார் திரு. தமீம் அவர்களும் மற்றும் கீ
ழக்கரை காவல் துறை துணை ஆய்வாளர் திரு.சிவ சுப்புரமணி
அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
அப்போது சர்வ கட்சியின் கோரிக்கைகளை கனிவுடன் ஏற்று அவர் எழுத்துப் பூர்வமாக எழுதியும் தந்ததால் அனைத்து கட்சியினர் சமாதானம்
அடைந்தனர்.
தீர்மானங்கள்:
1)ஊழல்லுக்கு துணைப் போகாத நகராட்சி ஆணையர் அவர்களை பணி இடம் தற்ப்போது மாற்றக் கூடாது.
2)சேர்மன் அவர்களின் காணவர் அவர்கள் நகராட்சியின் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் நகராட்சி அலுவகத்திற்க்குள் அதிகாரம் செய்யக் கூடாது.
3)நகராட்சிக்கு நலத் திட்டத்திற்காக வந்த சுமார் 16 கோடி ரூபாய் முறையாக எந்த நலத் திட்டங்களும் நிறை வேற இல்லை இதனால் பல கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள் இதற்க்கு தனியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு விசாரனை குழு அமைத்து விசாரனைகள் தொடங்க வேண்டும்.
4)நகராட்சியில் உள்ள கலியாக இருக்கும் பெறியாளர் பதவி மற்றும் அலுவலக பணிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்ட வேண்டும்.
கோரிக்கைகள் தவறும் பட்சத்தில் மக்களைத்திரட்டி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெரும் என்று அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
செய்தி: திரு.முஜீபுர்ரஹ்மான், SDPI கீழக்கரை
ஜூலை முதல் வாரம் சென்னை மெட்ரோ ரயில் - கட்டண விபரம் !!
சென்னை மெட்ரோ ரயில் ஜூலை முதல் வாரம் தன் பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மெட்ரோ ரயில் கட்டணம் பற்றிய தகவலை விகடன் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழ் வருமாறு:
சென்னையில் 2
கிலோ மீட்டர் முதல் 24 கிலோ மீட்டருக்கு மேலும் பயணம் செய்யும் கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், 4 முதல் 6 கிலோ மீட்டருக்கு 13 ரூபாயும், 6 முதல் 9 கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும், 9 முதல் 12 கிலோ மீட்டருக்கு 17 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 15 கிலோ மீட்டருக்கு 19 ரூபாயும், 15 முதல் 18 கிலோ மீட்டருக்கு 20 ரூபாயும், 18 முதல் 21 கிலோ மீட்டருக்கு ரூ.21, 21 முதல் 24 கிலோ மீட்டருக்கு ரூ.22, 24 கிலோ மீட்டருக்கு மேல் 24 ரூபாயும், 27 கிலோ மீட்டருக்கு 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கட்டணத்தை அமல்படுத்துவதா? அல்லது மாற்றியமைப்பதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், 4 முதல் 6 கிலோ மீட்டருக்கு 13 ரூபாயும், 6 முதல் 9 கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும், 9 முதல் 12 கிலோ மீட்டருக்கு 17 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 15 கிலோ மீட்டருக்கு 19 ரூபாயும், 15 முதல் 18 கிலோ மீட்டருக்கு 20 ரூபாயும், 18 முதல் 21 கிலோ மீட்டருக்கு ரூ.21, 21 முதல் 24 கிலோ மீட்டருக்கு ரூ.22, 24 கிலோ மீட்டருக்கு மேல் 24 ரூபாயும், 27 கிலோ மீட்டருக்கு 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கட்டணத்தை அமல்படுத்துவதா? அல்லது மாற்றியமைப்பதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி: விகடன்
வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப கோரிக்கை!!
வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் நுழைவுப் பகுதியில்
எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சிநிதியில் சுற்றுச்சுவர்
கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் வடக்கு, மேற்கு பகுதிகள் சுற்றுச்சுவர்கள் இன்றி
திறந்த வெளியாக உள்ளது. இதனால், ஆடு, மாடுகள் பள்ளிக்குள் தஞ்சமடைகின்றன.
இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த அஸ்கரி
அலி கூறுகையில்,""பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால்
தளவாடச்சாமான்கள், கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை
பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. சுற்றுச்சுவர் எழுப்ப மாவட்ட நிர்வாகம் முன்வர
வேண்டும்,'' என்றார்.
செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு
திருப்புல்லாணி ஒன்றியம், களிமண்குண்டு கிராமத்தில் புதிய அங்கன்வாடி மற்றும் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா!!
ராமநாதபுரம்
மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம், களிமண்குண்டு கிராமத்தில் புதிய அங்கன்வாடி மற்றும் பயணிகள் நிழற்குடை
கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சி ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
திருப்புல்லாணி ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சி, களிமண்குண்டு கிராமத்தில் சிறு குழந்தைகள் அடிப்படை கல்விகற்க ஏதுவாக புதிய
அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பேருந்து நிறுத்தம் பயணிகள் வசதிக்காக நிழற்குடை
அமைத்தல் பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.6.28 + 3.10 = 9.38 (ஒன்பது லட்சத்து முப்பத்தி எட்டாயிரம்)
நிதியை ஒதுக்கீடு செய்த ராமநாதபுரம்
சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் திறந்து வைத்து நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் உரையாடினார்கள்.
இங்கு புதிதாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள
கட்டிடங்களை இந்தஊர் மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் பயன்படுத்துவீர்கள்
என்ற நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும், ஒவ்வொரு ஆண்டும் அவரவர் தொகுதியிலே மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக இரண்டுகோடி ரூபாய் அரசு அளிக்கின்றது.
அந்தபணம் என்னுடைய பணம்அல்ல அல்லது
முதலமைச்சருடைய பணம்அல்ல மாறாக நம் அனைவருடைய பணமாக இருக்கிறது. நாம்
செலுத்தக்கூடிய வரியில் இருந்துதான் அந்த பணம் வருகின்றது.
அந்த பணத்தில் இருந்து செலவிடப்பட்டு
கட்டப்படக்கூடிய பேருந்து நிழற்குடையாக இருந்தாலும் சரி, அங்கன்வாடி மையமாக இருந்தாலும் சரி அது சிறந்த தரத்திலே இருக்க வேண்டும்.
அதை மக்கள் சிறப்பாக பயன்படுத்தினால்தான்
அது பலன் அளிக்கும் அந்த வகையிலே இங்கு மிக நல்ல முறையில் பேருந்து நிழற்குடையும், அங்கன்வாடி மையமும் கட்டப்பட்டு இருக்கின்றது.
அதற்கு ஒத்துழைப்பு அளித்த களிமண்குண்டு
ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களுக்கும் இதை கட்டிக்கொடுத்த ஒப்பந்ததாரர்களுக்கும்
நன்றியை தெரிவித்து கொண்டார்கள்.
நம்முடைய ராமநாதபுரம் தொகுதி மிகப்பெரிய தொகுதி இந்த தொகுதியிலே மூன்று நகராட்சிகள் இருக்கிறது, ஒரு பேரூராட்சி இருக்கிறது, மண்டபம் ஒன்றியத்தினுடைய பெரும்பாலான பகுதிகள் ராமநாதபுரம் ஒன்றியத்தின் ஒருசில பகுதிகளை உள்ளடக்கியதுதான் நம்முடைய ராமநாதபுரம் தொகுதி.
அரசால் அளிக்கப்படக்கூடிய இரண்டுகோடி ரூபாய் அனைத்து மக்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலே இல்லை. ஆனால் எல்லா ஊர்களுக்கும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையிலே இந்தநிதி பயன்படுத்தப்படவேண்டும் என்பதிலே நான் கவனமாக இருந்திருக்கின்றேன்.
அரசாங்கத்தில் சாலை போடுவதற்கு வெவ்வேறு நிதிகள் இருக்கின்றது. ஆனால் இது போன்று நிழற்குடைகள் அமைப்பதற்கோ, அங்கன்வாடிகள் கட்டுவதற்கோ நிதி இல்லாத சூழலில் அது போன்ற பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளித்திருக்கின்றேன்.
அதேபோல நம்முடைய பகுதி திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகளில் அமையப்பெற்ற கல்வி கூடங்களுக்கும் எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தாராளமாக செலவு செய்திருக்கின்றேன்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் இங்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஊரான வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூபாய்.நான்கு லட்சமும்,
தினைக்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகளுக்காக ரூபாய்.இரண்டு லட்சமும், மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய்.ஆறு லட்சமும்,
பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
சுற்றுச்சுவர் கட்டுவதற்காக ரூபாய்.மூன்றரை லட்சமும், பெரியபட்டிணம் புதுக்குடியிருப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு
ரூபாய்.ஆறு லட்சத்து இருபத்துநான்காயிரமும்,
ரெகுநாதபுரத்தில் அரசு
மேல்நிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் அமைப்பதற்கு ரூபாய்.இரண்டு லட்சத்து
இருபத்தைந்து ஆயிரமும், அதுபோல் நெய்னாமரைக்கான் ஊராட்சி
துவக்கப்பள்ளியில் ரூபாய்.ஆறு லட்சம் செலவில் கழிப்பறை வசதிகளும்,
பெரியபட்டிணம் ஊராட்சி அரசு
மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் குழாய் இணைப்பு தருவதற்கு ரூபாய்.ஒரு லட்சமும், கோரைக்கூட்டம் துவக்கப்பள்ளியில் கழிப்பறை வசதிகளுக்காக ரூபாய்.ஒரு லட்சமும்,
தொடக்கப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம்
கட்டுவதற்காக ரூபாய்.ஒன்றரை லட்சமும், மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகர்
தொடக்கப்பள்ளிக்கு ரூபாய்.இரண்டு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம் செலவில்
சத்துணவுக்கூடம் கட்டிடத்திற்காகவும்
எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து
மொத்தம் ரூ.நாற்பத்தி ஐந்து லட்சத்து பனிரெண்டாயிரம் இந்த பகுதிகளுக்கு மட்டும்
வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோக இந்த ஊரில் வேறு குறைகள் ஏதேனும்
இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என
குறிப்பிட்டார்கள்.
இந்தஊர் மாணவர்கள் நல்ல சிறப்பான
கல்வியாளர்களாக உருவாக வேண்டும் அதற்காகத்தான் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை வழங்கக்கூடிய
இதுபோன்ற அங்கன்வாடி கட்டித்தரப்பட்டுள்ளது அதை இந்தஊர் மக்கள் நன்கு
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
உங்கள் அனைவருக்கும் உங்கள்
பாசத்திற்கும், நேசத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன் என்றுகூறி அவர்களின் உரையை நிறைவு செய்தார்கள்.
இந்த நிகழ்வுகளில் ஊராட்சிமன்ற தலைவர்
சகோ.திரு.பொ.கருப்பையா அவர்களும், மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட செயலாளர்
சகோ.B.அன்வர் அலி, அவர்களும் , மாவட்ட துணைசெயலாளர் சகோ.ரைஸ் இப்ராஹீம்
அவர்களும், ஆற்றாங்கரை கிளை செயலாளர் சகோ.நூருல்
அஃப்பான் மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து
கொண்டனர். முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகளிர் மன்ற பொறுப்பாளர் நன்றி
கூறினார்.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்