முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 23, 2015

திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிராங்குடியில் அடக்கஸ்தல சுற்றுச்சுவர் கட்டிடம் திறப்பு விழா!!

No comments :
திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிராங்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.10.00 (பத்து லட்சம்) செலவில் முஸ்லிம் அடக்கஸ்தல சுற்றுச்சுவர் கட்டிடம் திறப்பு நிகழ்வு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிராங்குடியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.பத்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமையில் துவக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது அவ்வூரில் இந்த ஆண்டு தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்த மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணாக்கர்களை பாராட்டி நினைவுப்பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.



ஊர் பொதுமக்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துசென்று அரசின் கல்வி நிறுவனங்களுக்கான நிதிமூலம் கட்டித்தர வழிவகை செய்யப்படும் என்றார்கள்.

நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி இந்து மயானங்களுக்கும், கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களுக்கும், முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் போன்றவைகளுக்காக இந்த பகுதியில் பல்வேறு ஊர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த பகுதியான திருப்புல்லாணி ஒன்றியத்தில் மயான கட்டுமானப்பணிகளுக்காக மட்டும் ரெகுநாதபுரத்திற்கு நான்கு லட்சமும், மோர்குளத்திற்கு ஆறு லட்சமும், கும்பிடுமதுரைக்கு மூன்று லட்சமும், திருப்புல்லாணிக்கு ஐந்து லட்சமும், ஆழ்வார்தோட்டத்திற்கு இரண்டு லட்சமும், புதுக்கோவிலுக்கு ஒன்றரை லட்சமுமாக இப்பொழுது காஞ்சிராங்குடியையும் சேர்த்து மொத்தம் 31.5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் இந்த பகுதியில் கீழக்கரை நகராட்சியில் பள்ளிக்கூட கட்டிடங்களுக்காக சுமார் 15 லட்சமும் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்றத்தலைவர் சகோதரி.திருமதி.காளிமுத்து ஆதித்தன் அவர்களும், காஞ்சிராங்குடி முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, நிர்வாகிகள் யாசர் அரபாத், நூருல் அஃப்பான், மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிதியை ஒதுக்கித்தரக்கோரி பெரும் முயற்சி எடுத்த காஞ்சிராங்குடி ஊராட்சி மன்ற உறுப்பினரும் அமைப்பு நிர்வாகியுமான சகோ.இப்ராகிம் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.


செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

துபாய் Bin Ghurair Trading நிறுவனத்தில் HR and PRO வேலை வாய்ப்பு!!

No comments :
HR and PRO
Bin Ghurair Trading LLC - Dubai


Looking for a dynamic HR and PRO,who can perform both work effectively.
Immediately can join.
Salary: AED7,500.00 /month
Required experience:
  • HR,Admin,PRO: 4 years
TO APPLY: CLICK HERE


சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்படும் MUQEEM வருடா வருடம் புதிப்பிக்கப்பட வேண்டியதே!!

No comments :
நேற்றைய நம் செய்தியின் விரிவான விளக்கம்:

சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்படும் MUQEEM வருடா வருடம் புதிப்பிக்கப்பட வேண்டியதே!!

இக்காமா என்ற பெயர் தான் முகீம் -  "Resident identity card" என்று மாற்றப்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல, வருடாவரும் இதனை புதுப்பிக்க (Renew) தான் வேண்டும். புதிதாக வழங்கப்பட உள்ள அட்டையில் காலாவதி தேதி (Expiry Date) குறிப்பிடப்பட்டிருக்காது. ஆனால், நாம் புதுப்பிப்பதற்கேற்ப, அதற்கான கருவிகளில் வைத்து பார்க்கும்போது காலாவதி தேதி தெரிய வரும். மேலும், நாம் SMS, வெப்சைட் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.


இந்த புதிய அட்டையை மாற்றாமல், 5 வருடம் வரை வைத்திருக்கலாம். அவ்வளவு தான்... வருடாவருடம் புதுப்பிக்காவிட்டால், நாம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ அத்தனையும் சந்திக்க நேரிடும்... கஃபீலிடம் (அல்லது நிறுவனத்திடம்) சென்று ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க என்னென்ன வகையில் போராட வேண்டுமோ அவற்றையும் செய்யத்தான் வேண்டி வரும்...

புதுப்பித்தபிறகு, வங்கிகளில் மற்றும் மணி எக்ஸேஞ்சுகளில் சென்று புதிய காலாவதி தேதியை பதியத்தான் வேண்டும்...

ஒவ்வோர் வருடமும், ஜவசாத்தில் (சவூதி பாஸ்போர்ட் அலுவலகம்) புதிய அட்டை பிரிண்ட் செய்து பெற கூட்டம் அதிகமாவதால், அங்கு கூட்டத்தை குறைக்கவும், சவூதி முஆக்கபுகள் (Representatives) -இன் வேலையை குறைக்கவுமே இந்த ஏற்பாடு.


மேலும் விபரங்களுக்கு www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150619247786

ராமநாதபுரத்தில் நாளை (ஜூன் 24) தேசிய தடகளப் போட்டிக்கான மாணவ-மாணவியர் தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் தேசிய தடகளப் போட்டிக்கான மாணவ-மாணவியர் தேர்வு புதன்கிழமை(ஜூன் 24) நடைபெற உள்ளதாக மாவட்ட தடகளச்சங்கத் தலைவர் எம்.சாதிக்அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது: 13-ஆவது ஜூனியர் தேசிய தடகளப் போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 7 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க தடகளப் போட்டி வீரர்கள் தேர்வு புதன்கிழமை ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

(File Photo)

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவியர் பிறப்புச் சான்று நகலுடன் அன்று காலை 9.00 மணிக்குள் மைதானத்திற்கு வரவேண்டும்.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கான வீரர்கள் 08.09.2001-க்குப் பின் பிறந்தவர்களாகவும், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கு 08.09.1999-க்குப் பின் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.