Monday, June 8, 2015
துபாய் Etisalat நிறுவனத்தில் Coordinator Local Voice & Data Services வேலை வாய்ப்பு!!
Coordinator Local Voice & Data Services
Etisalat - Dubai
Etisalat - Dubai
The roles is based out of Dubai and will work closely with Carrier & Wholesale Department, the candidate will be accountable to maintains/ ensures proper documentation, records and filling system. Analyzes incoming invoices for interconnection services, Voice, Data, CSI Links, site sharing, and Bitstream and inputs in INTEC system. Generates analysis/ reports/ traffic/ rate queries for checking. Processes incoming and outgoing invoices in the ERP AP & AR system and reconcile the incoming invoices with Etisalat Records. Duties & Responsibilities: - Maintains record of monthly invoices received from operators for the services and prepares query for missing invoices - Analyses the traffic, checks rates in incoming and outgoing from Interconnection - Agreement/ TRA price Determinations or agreements with the operators - Generate/ check reports from INTEC system and prepare other analysis /reports - Processes queries in the invoices for rates and short/missing traffic credits - Analyses incoming and outgoing invoices and input in ERP AP & AR system - Maintain records for all site sharing, CSI Links, Bitstream services and check the incoming invoices. - Promptly send the queries and dispute letter for the discrepancies between incoming invoices and Etisalat records. - Attends disputes received from the operator and coordinate with Engineering/ IT to resolve the same. - Prepares JV for accounting of the above services. - Attends to all queries for the assigned services and assists in the investigation of disputes Requirements - Junior Diploma - 2-3 years of experience in handling incoming accounts , input in the system and receivable accounting with large organization preferably Telecom - Good Accounting skills - Good Account reporting skills |
TO APPLY: CLICK HERE
வருமானத்தில் ஒரு பகுதியை ஊர்நலனுக்கு செலவிட்டு உலகுக்கு வழிகாட்டுகிறது புதுமடம் கடற்கரை கிராமம்
.
ஊர்நலனே முக்கியம் என்பதையும் அதற்கான
பொறுப்புகளையும் நாம் உணர்ந்தால் நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள
முடியும் என்பதற்கு வழி காட்டுகிறது புதுமடம் கடற்கரை கிராமம்.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப் புளி அருகே இருக்கிறது புதுமடம் கடற்கரை கிராமம். பெயருக்குத் தான் கிராமமே தவிர தன்னிறை வில் நகரங்களை சவாலுக்கு அழைக்கிறது. இந்த கிராமத் தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு களிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தொழில் செய்து பொருளீட்டுவதால் வளம் செழிக் கிறது.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப் புளி அருகே இருக்கிறது புதுமடம் கடற்கரை கிராமம். பெயருக்குத் தான் கிராமமே தவிர தன்னிறை வில் நகரங்களை சவாலுக்கு அழைக்கிறது. இந்த கிராமத் தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு களிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தொழில் செய்து பொருளீட்டுவதால் வளம் செழிக் கிறது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள் தங்களது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை கிராம பொதுநலனுக்காக செலவிடு வதும் புதுமடத்தின் முன்னேற்றத் துக்கு முக்கியக் காரணம்.
அதுகுறித்துப் பேசுகிறார் புதுமடத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜாபர் அலி. “எங்கள் ஊரில் 75 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தாலும் இங்கு எந்தவிதமான சாதி, மத வேற்றுமைக்கும் இடம் தரமாட்டோம். ஆண்டுதோறும் ரம்ஜான் பெருநாள் முடிந்ததும் ஊர்க்கூட்டம் போடுவோம். அப் போது, ஊருக்குச் செய்ய வேண் டிய நல்ல காரியங்கள் குறித்து விவாதிப்போம். அதில் எடுக்கப் படும் முடிவுகளை வைத்து பணி களை தொடங்கிவிடுவோம்.
ஊராட்சியிலிருந்து சரிவர குப்பை அள்ளப்படுவதில்லை என்பது குறையாக இருந்தது. அதை போக்குவதற்காக ‘பைத்துல் மால்’ (ஏழைகளுக்கு சேவை செய்தல்) என்ற அமைப்பை உருவாக்கினோம். அந்த அமைப் புக்காக 10 பேர் சேர்ந்து டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்கள்.
துப்புரவு பணியாளர்கள் இரண்டு பேரை தலா ரூ.5 ஆயிரம் சம்பளத்துக்கு நாங்களே நியமித்தோம். ரூ.8 ஆயிரம் சம்பளத்தில் டிராக்டருக்கு டிரைவர் போட்டு ’பைத்துல்மால்’ அமைப்பே குப்பைகளை அள்ள ஆரம்பித்தது. இதற்காகும் மாதாந்திரச் செலவு முப்பதாயிரத்தை வெளிநாடுகளில் உள்ள எங்கள் ஊர் செல்வந்தர்கள் சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
புதுமடத்தைச் சேர்ந்த யாருக் காவது விபத்து ஏற்பட்டாலோ, அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலோ அதுகுறித்த விவரத்தை எங்கள் ஊர் இளைஞர் கள் உடனடியாக முகநூலில் போட்டுவிடுவார்கள். அடுத்த ரெண் டொரு நாட்களுக்குள் சிகிச்சைக் குத் தேவையான பணம் எங்கள் ஊர்க்காரர்களிடமிருந்து வந்து விடும். இந்த வழியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு மருத்துவ உதவிக்காவது நிதி திரட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த ஆண்டு பொன்விழா. இப்போது அது மேல்நிலைப் பள்ளியாக இருக்கிறது. பொன் விழாவையொட்டி, அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ரூ.25 லட்சத்தில் கலையரங் கம் கட்டிக் கொடுத்தார்கள். பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பிள்ளைகளுக்கு பொது நிதியிலி ருந்து ரொக்கப் பரிசும் கொடுக்கிறோம்.
பெண்களுக்கென தனியாக உயர்நிலைப்பள்ளி தேவைப்படுகிறது. அதற்காக, இலங்கையில் தொழில்செய்யும் முகமது உனேஸ் என்பவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக விட்டுக் கொடுத்தார். புதிய பள்ளிக்காக ஊர் தரப்பில் செலுத்த வேண்டிய பங்களிப்பையும் செலுத்திவிட்டுக் காத்திருக்கிறோம்.
ஏழைப் பெண்களின் திருமணத் துக்கும் எங்களால் முடிந்த உதவி களை செய்கிறோம். அந்தப் பெண் களை யாரும் தாழ்மையாக பேசிவிடக் கூடாது என்பதற்காக யாருக்கு இந்த உதவியை செய்கிறோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவதில்லை.
வரும் ஆண்டிலிருந்து, அவசர உதவிக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறோம். இதற்காக பொதுநிதி ஒன்றை திரட்டி அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் ’பைத்துல்மால்’ அமைப்பிடம் கொடுக்க இருக்கிறோம்’’என்று சொன்னார் ஜாபர் அலி.
தகவல்:
செய்யது அபுபக்கா் வாழூா்
ராமநாதபுரம் அருகே பைக்குகள் மீது கார் மோதியதி விபத்து, ஒருவர் பலி!!
ராமநாதபுரம்
அருகே பேராவூர் பகுதியில் இரு பைக்குகள் மீது கார் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை
ஒருவர் உயிரிழந்தார். முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக
மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்
அருகே புல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் சதீஷ்குமார் (30)மற்றும் பணி ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர்
முனியசாமி (58) ஆகிய இருவரும்
ராமநாதபுரத்திலிருந்து அவர்களது சொந்த ஊரான புல்லங்குடிக்கு தனித் தனி பைக்குகளில்
சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில்
பேராவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தொண்டியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி
வந்த கார் இரு பைக்குகளின் மீதும் மோதியதாம்.
பலத்த
காயம் அடைந்த இருவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர்.காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.பணி
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான முனியசாமி கவலைக்கிடமான நிலையில் மேல்சிகிச்சைக்காக
மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக கேணிக்கரை
போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
செய்தி:
தினமணி