முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 7, 2015

கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா!!

No comments :
கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் S.M. யூசுப் சாஹிப் தலைமையில் நடைபெற்றது.


நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபு கல்லூரி முதல்வர் மவ்லவி முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஸனது வழங்கி பேருரையாற்றினார். 






கீழக்கரை டவுன் காஜி மவ்லவி பாஜில் காஜி A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் சித்தீகி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப். ஹசன் அலி , கல்லூரி முதல்வர் மவ்லவி முஹம்மது இல்யாஸ் உஸ்மானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

முன்னதாக பட்டம் பெறும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி டவுன் காஜி துஆவுடன் தொடங்கியது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் S.M. யூசுப் சாஹிப் சீருடை வழங்கினார்.

செய்தி: கீழக்கரை டவுன் காஜி அலுவலகம்

அமீரகம் Dar Al Handasah நிறுவனத்தில் Project Manager வேலை வாய்ப்பு!!

No comments :

Project Manager

Dar Al Handasah

Ruwais, UAE

Posted 11 days ago
Ref: GP714-11





The Role

Reporting to the Senior Project Manager of the client, the successful candidate will be overseeing all on-going and incoming projects, leading various construction teams, ensuring all projects are carried out according to contract schedule and terms.

Requirements

- Engineering degree, master's degree is desirable
- At least 15 years of extensive experience in different types of large scale construction projects either as client representative or as the project management consultant
- Strong and deep knowledge in FIDIC terms
- Must be PMP certified

About the Company

Dar Al-Handasah (Shair and Partners) has been a pioneering force in the planning, design and implementation of development projects in the Middle East, Africa and Asia since its beginnings in 1956. Today we are a global consultancy with 43 offices throughout 29 countries, known for our problem identification, tailor made-designs, quality, on-time deliverables and multi-disciplinary expertise.
TO APPLY: CLICK HERE


மருத்துவ பரிசோசதனை கட்டணம் உயர்வு!! வெளிநாடு செல்பவர்கள் அதிர்ச்சி!!

No comments :
இந்தியாவிலிருந்து தமிழகம், கேரளாவிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள், கூலி தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அதிகளவு டிரைவர், கட்டுமான தொழில், வீட்டு வேலைகள், கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு கூலி வேலைக்காக செல்கின்றனர்.வேலைக்கு செல்லும் இளைஞர்கள் விசா, மருத்துவ பரிசோதனை என அதிகப்பட்சம் ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்வர்.


ஆனால் தற்போது மருத்துவ சோதனைக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.24 ஆயிரமாகவும், விசா ஸ்டாம்பிங் கட்டணம் ரூ.6,000லிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தியதிலிருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்த மையங்களிலிருந்து தொலைதூரத்தில் வசிக்கும் அனைத்து வேலைக்கு செல்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் டிராவல்ஸ் நிறுவன ஏஜென்ட்கள் கூறுகையில், ‘மருத்துவ பரிசோதனை, ஸ்டாம்பிங் கட்டணம் உயர்வால் கூடுதலாக ரூ.50 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கிராமப்புற கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசா வாங்கி கொண்டு செல்வதா, வேண்டாமா என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் யோசித்து கொண்டுள்ளனர். இக்கட்டணம் குறைந்து மீண்டும் பழையவாறு கட்டணங்கள் மாறிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்என்றனர்


செய்தி: விகளத்தூர்.காம்

கடத்தப்பட்ட கீழக்கரை தனியார் பள்ளி மாணவி மீட்பு, கடத்திய வாலிபர் கைது!!

No comments :
கீழக்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது ஒரு ஆட்டோ வேகமாக வந்தது.அதில் வந்த ‘மர்ம’ ஆசாமி மாணவியை திடீரென ஆட்டோவுக்குள் இழுத்து போட்டு கடத்தி சென்றனர். 
இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்
இதன் பலனாக உத்தரகோச மங்கை அருகே அந்த ஆட்டோ மடக்கி பிடிக்கப்பட்டது. அதில் இருந்த மாணவியும் மீட்கப்பட்டார்.அவரை கடத்தியதாக சின்னமாயாகுளம் கிராமம் பாரதிநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன் தாஸ் (வயது23) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அதிரடியாக செயல்பட்டு மாணவியை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

செய்தி: மாலைமலர்

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள்!!

No comments :
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இரண்டு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும், பயணிகள் பயணச்சீட்டு பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

ராமேசுவரத்திலிருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், தற்போது அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை ரயிவே நிர்வாகம் நிறுவி வருகிறது.

அதனடிப்படையில், மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் இரு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், ரயில் பயணிகளிடையே இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் வழக்கம் போல் வரிசையில் காத்திருந்து பயணச் சீட்டை பெற்றுச் செல்கின்றனர். எனவே, புதிதாக நிறுவப்பட்ட இயந்திரங்கள் கேட்பாரற்ற நிலையிலேயே உள்ளன.

இதுகுறித்து ராமநாதபுரம் ரயில் நிலைய வர்த்தகப் பிரிவு மேற்பார்வையாளர் எஸ். ஜேக்கப் கூறியதாவது: இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெற விரும்புவோர், ரூ.50 மட்டும் செலுத்தி ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

 அந்த கார்டில் உள்ள நம்பரை பயன்படுத்தி, ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை செல்போன் ரீசார்ஜ் போல டாப்-அப் செய்து கொள்ளலாம். ரீசார்ஜ் செய்து கொள்ளும் தொகைக்கேற்ப போனஸýம் உண்டு.

ரீசார்ஜ் செய்து கொண்ட தொகை ஓராண்டு வரை செல்லத்தக்கது. ஓராண்டுக்குள் எந்த ரயிலிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யலாம். 150 கி.மீட்டருக்கும் குறைவான தொலைவு செல்லும் ரயில் பயணிகளுக்கு 5 சதவிகித போனஸ் வழங்கப்படுவதால், ரயில் பயணக் கட்டணம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அது தேவையில்லையென்றால், எந்த ரயில் நிலையத்திலும் திருப்பிக் கொடுத்து டெபாசிட் தொகை ரூ.50 மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்காக ரீசார்ஜ் செய்துகொண்ட தொகை உள்பட அனைத்தையும் திரும்பக் பெற்றுக் கொள்ளமுடியும். தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் மூலமாக பயணச்சீட்டு பெறும்போது, வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற வேண்டிய அவசியம் இருக்காது. உடனே டிக்கெட்டை பெற முடியும். சில்லறைத் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும். 

ராமேசுவரம், ராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தலா 2 இயந்திரங்களும், மானாமதுரையில் ஒரு இயந்திரம் உள்பட 27 ரயில் நிலையங்களில் 50 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.