முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 3, 2015

துபாய் Cellular Trading International நிறுவனத்தில் Key Account/Sales Executive வேலை வாய்ப்பு!!

No comments :
Key Account/Sales Executive
Cellular Trading International FZE - Dubai Free Zone

Job Title - Key Account/Sales Executive
Job Location - Dubai
Job Industry - Trading in Mobiles and Electronics
Job Function - Sales and Marketing, Key Accounts
Preferred Nationalities - Any (knows how to speak malayalam and hindi - preferable)
Relevant Experience - 3-5 years
REQUIREMENTS:
1.MUST HAVE RELEVANT EXPERIENCED IN THE FIELD OF SELLING IN MOBILES AND ELECTRONICS IN UAE - FOR A MANAGERIAL POSITION
2. WILLING TO TRAVEL
3. HAS A PROVEN TRACK RECORD AND HAVE A PROFESSIONAL APPROACH
4. CAN SPEAK ARABIC AND HINDI (BILINGUAL)
5. HAS WIDE KNOWLEDGE IN DUBAI CUSTOMS IS ADVANTAGE
Required experience:
  • SALES AND MARKETING: 3 years
TO APPLY : CLICK HERE

கீழக்கரை, வண்ணாங்குண்டு உள்ளிட்ட இராமநாதபுர மாவட்ட ஊர்களில் “கலைஞர்-92” விழா கொண்டாட்டம்!! (படங்கள்)

No comments :


திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 92 வது பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் கொண்டாட்டம்.

கீழக்கரை:

கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாலளிகளுக்கு உணவு வழங்கியும்
92 கிலோ எடைகெண்ட கேக் வேட்டியும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.








திமுக நகர் செயலாளர் திரு.பஷீர், அவை தலைவர், திரு.மணிகண்டன், மாணவரணி தலைவர் திரு.முஹம்மது சுஅய்பு உள்ளிட்ட பல திமகவினர் உற்சாக கொண்டாட்டம்.


வண்ணாங்குண்டு:

வண்ணாங்குண்டு ஊராட்சியில், திமுக கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. திமுக ஒன்றிய கழக் பிரதிநி திரு. அஸ்கர் அலி உள்பட பல திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்.






செய்தி: திரு சுஅய்பு,கீழக்கரை

          திரு.அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இலவச "Wi-Fi"!!

No comments :

ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்ற பெருமையை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.) பெற்று உள்ளது. இங்கு தினமும் 4000 பஸ்கள் வந்து செல்கின்றன. சராசரியாக 2 லட்சம் பயணிகள் இதன் வழியாக பல்வேறு நகரங்களுக்கு கடந்து செல்கிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் 4 லட்சமாக உயருகிறது.


'
ஸ்மார்ட்' போன்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இக்கால கட்டத்தில் அனைவரது கைகளிலும் இண்டர் நெட் வசதி உள்ளது. பயணத்தின்போது தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய நவீன வசதிகள் தற்போது உள்ளன. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் வைபை வசதி அளிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகத்திற்குள் பயணிகள் வந்தவுடன் இணைய தளம் மூலம் எளிதாக தகவல் பெற இது உதவியாக இருக்கிறது.

இதே போல கோயம்பேடு பஸ் நிலையத்திலும் வைபை வசதி இன்னும் 2 வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் (சி.எம்.டி.ஏ.) எடுத்து வருகின்றனர். தனியார் நிறுவனம் மூலம் முதல் கட்டமாக இலவசமாக வைபை வசதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வசதியை அறிமுகம் செய்வதன் மூலம் இண்டர் நெட் பயன்படுத்தும் பயணிகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி பிற நகரங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு மின்சார ரெயில் சேவை, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மற்றும் விமான சேவையின் நேரங்கள் பற்றிய தகவல்கள் வைபை வசதியின் மூலம் தங்கு தடையின்றி கிடைக்கும். முதலில் இந்த வசதி இலவசமாகவும் பின்னர் பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினர்.

கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் 20 இடங்களில் வைபை வசதி செய்யப்படுகிறது. இதற்கான பரிசோதனையும் தற்போது நடந்து வருகின்றன. அடுத்த வாரத்திற்குள் பயணிகளுக்கு கிடைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடக்கின்றன. இவ்வசதி பஸ் நிலையத்தில் கிடைப்பது குறித்த விளம்பர பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.