Thursday, May 28, 2015
துபாய் Hyatt குழுமத்தில் Sales Coordinator வேலை வாய்ப்பு!!
Sales Coordinator
Hyatt - Dubai
DUB001889 Description You will be responsible to provide an excellent and consistent level of service to your customers. The Sales Coordinator is responsible to assist operationally and administratively in the achievement of department’s pre-determined sales and revenue targets for both Hyatt Places in Dubai. Qualifications Ideally with a relevant degree or diploma in Hospitality or Tourism management. Minimum 2 years work experience hotel operations. Good customer service, communications and interpersonal skills are a must. Primary Location : AE-DU-Dubai Organization : Hyatt Place Dubai/Al Rigga Job Level : Entry Level Manager | Full-time Job : Sales TO APPLY: CLICK HERE |
மதுவுக்கு எதிரான மாணவர்ப்போராட்டம் – சகோதரி நந்தினி அறிக்கை!!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கால்
பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைவரது ஒத்துழைப்பையும்
வேண்டுகிறோம்.
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடியால் அப்பாவை பறிகொடுத்த மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். மேலும் குடியால் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளால் படிப்பு பாதிக்கப்பட்டு உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை பெரும்பாலான மாணவர்கள் சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாது பள்ளி மாணவர்கள் கூட குடிபோதைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு நேரடியாகவும்
மறைமுகமாகவும் தொடர்பு வைத்துள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு டாஸ்மாக்கை
ஒழித்துக்கட்டும் அளவுக்கு தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றல் இல்லை.
மொத்தத்தில் அடுத்த தலைமுறையைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மாணவர்
சக்தி முழு ஆற்றலோடு போராட்டக்களத்தில் இறங்கினால் மட்டுமே டாஸ்மாக் கடைகளை
ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும். எனவே டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களை
ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
01.06.2015 முதல் இப்பணியை தீவிரப்படுத்த உள்ளோம்.
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் சாதி,மதம்,கட்சி போன்ற குறுகிய எல்லைகளைக் கடந்து
இம்முயற்சியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்-
இப்படிக்கு,ஆ.நந்தினி,சட்டக்கல்லூரி மாணவி மதுரை-9750724220
துபாய்-ல் வீட்டில் அத்துமீறி நுழைந்து மெத்தையில் தூங்கிய போதை வாலிபர் கைது. கிடைத்த வாய்ப்பில் “செல்ஃபி” எடுத்துக்கொண்ட பெண்!!
தனது வீட்டில்
திருட வந்த மர்ம நபர் படுக்கையறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க போலீஸுக்கு
தகவல் கொடுத்துவிட்டு கிடைத்த இடைவேளையில் ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார்
வெளிநாட்டுப் பெண் ஒருவர்.துபாயில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம்
குறித்து காலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
"துனிசியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்
துபாயில் பணி புரிந்து வருகிறார். புர்துபாய் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டுக்குள்
சென்ற அவர் தனது படுக்கையறையில் போதையில் ஒரு நபர் உறங்கிக்கொண்டிருப்பதைக்
கண்டிருக்கிறார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அந்த
அதிர்ச்சியிலும் அவர் சற்று இளைப்பாறுதலை தேடியுள்ளார். நல்ல உறக்கத்தில் இருந்த
அந்த அந்நியனுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
மேலும்,
அந்த செல்ஃபிக்கு அவர் அளித்த
விளக்கத்தில், "வீட்டுக்குள்
நுழைந்ததும் என் படுக்கையறையில் குடிகாரர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப்
பார்த்து அதிர்ந்தேன். அவர் என் வீட்டில் திருட முயற்சித்துள்ளார். ஆனால் அது
நடைபெறவில்லை" என குறிப்பிட்டுள்ளார். இந்த செல்ஃபி இப்போது இணையத்தை
கலக்கிக் கொண்டிருக்கிறது.
சம்பவம்
தொடர்பாக துபாய் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,
"அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளது போல்
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மர்ம நபர் திருடன் அல்ல. அவர் அந்த குடியிருப்பில்
வேலை பார்க்கும் தனது நண்பனை பார்க்க வந்துள்ளார். வந்த இடத்தில் இருவரும் மது
அருந்தி இருக்கின்றனர். பின்னர் துனிசிய பெண் பிளாட்டுக்குள் நுழைந்த அவர் அங்கேயே
தூங்கிவிட்டார். அவரை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
- கலீஜ் டைம்ஸ்
ராமேசுவரம் -சென்னை ரெயிலில் பெண்கள் பெட்டியில் முதல் முறையாக சி.சி.டி.வி. காமிரா!!
கொள்ளை மற்றும் ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கும் வகையில் சென்னை–ராமேசுவரம் ரெயிலில் பெண்கள் பெட்டியில் முதல் முறையாக சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.
ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி, கார்டு பயணம் செய்யும் கடைசி பெட்டியின் முன்னதாக பெண்கள் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பெண்கள் பெட்டிக்குள் நுழைந்து பலாத்காரம், நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
கேரளாவில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்த ஒரு பெண், பலாத்காரம் செய்யப்பட்டு ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிக்கு கேரள நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. அத்துடன் ரெயிலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரையும் வழங்கி இருந்தது.
இந்த நிலையில் தேசிய பெண்கள் கமிஷன் விடுத்த வேண்டுகோளின்படி இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் பெண்கள் பெட்டியில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள ரெயில்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.
தென்னக ரெயில்வேயில் முதல் முறையாக சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் பெட்டியில் சி.சி.டிவி. காமிரா பொருத்தப்பட்டது.
இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு போலீசார் கூறியதாவது:–
பெண்கள் பெட்டியின் 2 நுழைவு வாயில்களிலும் 2 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகள், கார்டு பெட்டியில் உள்ள கம்பியில்லா ஆண்டனா மூலம் சென்னை ரெயில்வே கட்டுப்பாட்டு மையத்தில் சேமிக்கப்படும்.
பெண்கள் பெட்டியின் நுழைவுவாயிலில் இக்காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பெட்டிக்குள் நுழையும் வரை காமிரா முழுமையாக பதிவு செய்கிறது. இதனால் ரெயில்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவில் கண்டறிந்து கைது செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
செய்தி: தினசரி நாளிதழ்
தமிழகத்தில் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே பாடப்புத்தகம்!!
தமிழகத்தில் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1–ந்தேதி திறக்கப்படுகிறது.
பள்ளி திறக்கும் முதல் நாளே பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம்
வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 40 ஆயிரம்
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 10 ஆயிரம்
அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும் நிதி உதவி
பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக ஆண்டு தோறும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.
1 முதல் 9 வகுப்புவரை படிக்கும் 45 லட்சம் மாணவ– மாணவிகளுக்கு
இந்த வருடம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 52 லட்சம்
பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்க தயாராக உள்ளன. 1 முதல் 8–ம்
வகுப்பு வரை உள்ள 30 லட்சம் மாணவ– மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அரசு வழங்கும்
பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள்
மாணவர்கள் கையில் கிடைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை
செய்துள்ளது. அனைத்து மாவட்டத்திற்கும் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் அனுப்பப்பட்டு அதனை தலைமை
ஆசிரியர்கள் குடோனில் இருந்து பள்ளிக்கு எடுத்து சென்று விட்டனர். ஒரு சில
பள்ளிகளில் நாளைக்குள் எடுத்து சென்று விடுவார்கள்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா மற்றும்
இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்று வருகின்றன.
திங்கட்கிழமை பள்ளிகள் திறந்தவுடன் மாணவ–மாணவிகளுக்கு
இவை அனைத்தும் வழங்கப்படும்.
செய்தி: பள்ளி கல்வி துறை