முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 7, 2015

துபாய் ANC Contracting L.L.C நிறுவனத்தில் Secretary வேலை வாய்ப்பு!!

No comments :
Department Secretary
ANC Contracting L.L.C - Dubai



Urgently Required - Department Secretary
Indian Females with 1-2 Years of work experience with Bachelor Degree
Work Flow
  • Ensure proper and systematic organization of department work flow
  • Answering of phone calls
  • Maintain regular checks and updation of records
  • Scan and send documents to team as required
  • Support the team with invoicing – preparing Performa invoices
  • Complete back office support
  • Getting Signature
Salary: AED3,000.00 /month

TO APPLY: CLICK HERE

ராமநாதபுர மாணவி சுருதி 1,172 மதிப்பெண்களுடன் மாவட்டத்தில் முதலிடம்!!

No comments :

ராமநாதபுர மாவட்டம் நேஷனல் மெட்ரிக் பள்ளியில் படித்த பாடகி சுருதி 1,172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்











ராமேஸ்வரம் விவேகானந்த மெட்ரிக் பள்ளி மகேஸ்வரி 1,170 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், ராமநாதபுரம் செய்யது மெட்ரிக் பள்ளி பிரகதீஸ்வரன் 1,168 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் மூன்றாது இடத்தை பிடித்துள்ளார்.



சுருதியின் தந்தை பால நாராயணன். இவர் சுகாதாரத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவரது தயார் பானு. சுருதி முதல் முதலாக ஒத்த வீடு என்ற படத்தில் பாடியுள்ளார். தொடர்ந்து அகத்தினை, , மதுரை மாவட்டம், ஏனம், தேசிய செய்திகள் உட்பட 10 படங்களில் பாடியுள்ளார். 

எதிர்காலத்தில் வங்கி அதிகாரியாக வரவேண்டும் என ஆசையுள்ளதாக சுருதி கூறியுள்ளார்.

செய்தி: நக்கீரன்

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

No comments :
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அனைத்து நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகளும் புதன்கிழமை நகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை கடைகள் வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வந்த புகார்களின் பேரில் நகராட்சி ஆணையர் எஸ்.முகம்மதுசிராஜ் உத்தரவில் நகரமைப்பு ஆய்வாளர் சரோஜா, சுகாதார அலுவலர் சந்திரன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


 நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் அனைத்து நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

செய்தி: தினமணி

குவைத்- திருச்சி நேரடி விமான சேவைக்கு கோரிக்கை!!

No comments :
வளைகுடா நாடுகளிலிருந்து தற்சமயம் துபாய்- திருச்சி வான் வழித்தடத்தில் மட்டுமே நேரடி விமான சேவை இயங்கி வருகிறது.


இது போன்று குவைத்- திருச்சி நேரடி விமான சேவை வேண்டி “குவைத் தமிழ் இஸ்லாமிக் சென்ட்ர்” சார்பில் இந்திய தூதரகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 

இதே போல் சவூதி, கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா வாழ் தமிழ் மக்கள் முயற்சி எடுக்க வேண்டுகோளும் கோரப்படுகிறது.


செய்தி: பரங்கிப்பேட்டை கலீல் பாகவி,

+2 தேர்வில் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி சாதனை!!

No comments :
கீழக்கரை +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம், கடந்த +2 தேர்வில் கீழக்கரையில் உள்ள மாணவ மாணவிகள் 1000-த்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர், இதில் இஸ்லாமிய பள்ளி மாணவி மௌபிகா 1150  மதிப்பெண்கள் எடுத்து கீழக்கரை நகர் அளவில் முதலிடம் பிடித்தார், இந்த மாணவிகணிதத்தில் 200/200 மதிப்பெண் எடுத்துள்ளார்.





TOPPERS LIST:

S.A. Seyed Moufika - 1150/1200
M. Fowzul Ashra - 1148/1200
S. Fathima Samiha - 1142/1200
S. Haleema - 1142/1200


முகவை முரசு சார்பில் வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்