முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 13, 2015

துபாய் BLS INTERNATIONAL இந்திய பாஸ்போர்ட் செர்வீஸ் நிறுவனத்தில் Customer Service Executive வேலை வாய்ப்பு!!

No comments :
Sales/Customer Service Executive
BLS INTERNATIONAL - Dubai

Job Requirements:
1. Preferred candidates who have experience in sales field from Travel or any Government organizations.
2. Sales target & MARKETING
3. Customer Service skills
4. Communication & Interpersonal skills
5. Explaining about the service requirements
6. Call Center handling
7. Require experience in the field of Document Attestation in UAE.
Salary: AED3,000.00 /month

TO APPLY: CLICK HERE

கத்தாரி்ல் ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு தரும் இந்திய உணவகம்!!

No comments :

கத்தார் இன்டஸ்டிரியல் ஏரியாவில் ஓட்டல் நடத்திவரும் டெல்லியைச் சேர்ந்தவர். இவர் கடைக்கு வரும் சில ஏழைத் தொழிலாளர்கள் சாப்பாடு சாப்பிட பணம் இல்லாததால் ரொட்டி வாங்கி தண்ணிரில் நனைத்து சாப்பிடுவதைப் பார்த்து மனம் வருந்தி கடை வாசலில் எழுதி வைத்து விட்டார். பணம் இல்லையென்று வருத்தப்பட வேண்டாம்.


பசியெடுத்தால் தாராளமாக சாப்பிடவும் பணம் வேண்டாம் என்று எழுதி வைத்து விட்டார் “ஜைகா ரெஸ்டாரண்ட்” நிறுவனர் “ஷதாப் கான்.


தினம் இரண்டு அல்லது மூன்று ஆட்கள் வந்து சாப்பிடுகிறார்களாம்.
பெரும்பாலும், இந்தியா, நேபால், பங்களாதேஷ் கட்டுமான தொழிலாளர்களே இவருடைய இந்த சேவையை பயன்படுத்திக்கொள்கிறார்களாம்

இலவசமாக சாப்பிட வெட்கப்படுபவர்களுக்காக இனி முதல் வெளியில் ப்ரிட்ஜில வைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தேவையுள்ளவர்கள. எடுத்துக் கொண்டு போகத்தான் இந்த ஏற்பாடு.

வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

செய்தி: கல்ஃப் நியூஸ்


ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாநில விளையாட்டுப் போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஏப்.17,18,19 ஆகிய தேதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாநில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.






(கோப்பு படம்)



மாநில மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு விளையாட்டரங்க சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் மேலும் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளில் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியோர் என 4 வகைப்பட்டவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக விளையாட்டரங்கம் அருகில் உள்ள பள்ளங்களில் மண் நிரப்பப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் வசதியாக நடந்து வரவும் கூடுதல் வாகனங்கள் நிறுத்தவும் பட்டினம்காத்தான் ஊராட்சித் தலைவர் சித்ரா மருது தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகள் ஏறிச் செல்ல வசதியாக படிக்கட்டுகள் உள்ள இடங்களில் சாய்தளங்களும், செயற்கைப் புல் தரைகளும் அமைக்கப்படுகின்றன.

இதனை முன்னிட்டு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

விளையாட்டங்கம் எதிரில் உள்ள வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானம் ரூ.3.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.


அமைச்சர் ஆய்வின் போது முதுகுளத்தூர் நிலவள வங்கித் தலைவர் ஆர்.தர்மர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தி: தினமணி


தண்ணீர் கட்டணம் தொடர்பான கீழக்கரை நகராட்சி அறிவிப்பு!!

No comments :
கீழக்கரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் இணைப்புக்கான நிலுவை கட்டணத்தை செலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.



கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றில் வீட்டு குடிநீர் உபயோகத்துக்காக 768 இணைப்புகள் உள்ளன. பல மாதங்களாக நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் ரூ.8 லட்சம் வரை உள்ளது. ஆகவே ஒரு மாத காலத்துக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்தார்.

செய்தி: தினமணி