Sunday, April 5, 2015
ஓமன் Karthik Enterprises நிறுவனத்தில் HVAC Technician வேலை வாய்ப்பு!!
HVAC Technician – Karthik Enterprises
Candidate must have Trade Certificate/ITI with
7 years’ experience in the operation, repair, troubleshooting, overhauling and
maintenance of all types of chillers, chilled water systems, fan coil units,
air handling units, compressors, refrigerators, cold rooms, freezers, ice
makers, split/window/package A/C units etc. He shall be able to read and
interpret AC circuit and wiring diagrams.
TO APPLY: CLICK HERE
நண்பேன்டா - தமிழ் திரை விமர்சனம்
ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் இயக்குநர்
ராஜேஷிடம் உதவி இயக் குநராக இருந்த ஜெகதீஷ், தன்னுடைய குரு இயக்கிய
படங்களை ஆங்காங்கே வெட்டி, தட்டி, புதிய பூச்சுடன் கொடுத் திருக்கும்
முதல் படம்தான் ‘நண்பேன்டா’.
தஞ்சாவூரில் வெட்டியாக ஊர் சுற்றும் சத்யா (உதயநிதி).
திருச்சியில் ‘இரண்டரை ஸ்டார்’ ஹோட்டலில் வேலை பார்க்கும் தனது
நண்பன் சிவக்கொழுந்துவைப் (சந்தானம்) பார்க்க வருகிறார். வந்த இடத்தில் ரம்யாவை
(நயன்தாரா) பார்த்தவுடனேயே பற்றிக்கொள் கிறது காதல். நயன்தாராவை மடக்கு வதற்காகத்
திருச்சியிலேயே டேரா போடு கிறார் உதயநிதி.
உதயநிதி, சந்தானத்துடன் சண்டை
போட்டுப் பிரிந்த கருணாகரன், போலீஸ் அதிகாரியாகத்
திருச்சிக்கு வந்து இருவரை யும் பழிவாங்கத் துடிக்கிறார்.
நயன்தாரா உதயநிதியிடம் தன் காதலைச் சொல்வதற்கு முன்பு, கடந்த காலப் பிரச்சினை ஒன்றைச் சொல்லி
மனம் வருந்துகிறார். உதயநிதி அதைக் காமெடி ஆக்கிவிட, நயன்தாரா கோபத்துடன் விலகிச் செல்கிறார்.
தாதாவான ராஜேந்திரனுக்கும், வங்கியில் பணியாற்றும் நயன்தாராவுக்கும் வங்கிக் கடன்
விஷயத்தில் விரோதம் ஏற்படுகிறது. அவர் நயன்தாராவைக் கொல்லத் திட்டம் போடுகிறார்.
ஆனால் அவரே கொலை யாகிறார்.
உதயநிதி, சந்தானத்தின் மேல் கொலைப்
பழி விழுகிறது.
நண்பர்கள் தப்பித்தார்களா? பிரிந்தவர்கள் கூடினார்களா? இதுதான் மீதிக் கதை.
படம் முழுவதையும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் ஆகியோரே
ஆக்கிரமித்திருக் கிறார்கள். நயன்தாராவைக் கவருவதற்காக உதயநிதி மெனக்கெடுகிறார்.
அவை நயன் தாராவை மட்டுமல்ல; ரசிகர்களையும் கவரத்
தவறுகின்றன.
நயன்தாரா திருச்சிக்கு வந்ததற்குப் பெரிய பின்னணி இருப்பது
போலக் காட்டுவது, சரக்கு வாங்கித் தரும்படி
உதயநிதியிடம் நயன்தாரா கேட்பது, வில்லனை ஸ்கார்பியோ
அடைமொழியுடன் கூப்பிடுவது எனக் காட்சி களில் ‘தீவிரம்’ கூட்டுகிறார் இயக்குநர்.
கடைசி யில் அவற்றைக் காமெடியாக்கிச் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். விளைவு? ஜஸ்ட் பாஸ்.
படத்தில் பல திருப்பங்கள். எல்லாமே ஒன்றாகத் தோற்றம் காட்டி
வேறொன்றாக மாறும் கண்ணாமூச்சிதான். இதைப் படம் முழுவதும் காட்டியிருப்பது
இயக்குநரின் சாமர்த்தியம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்தக் கண்ணாமூச்சி அலுப்பூட்டுகிறது.
உதயநிதியின் நடிப்பைவிட நடனத்தில் முன்னேற்றம் அதிகம்.
சந்தானத்தின் முத்திரை பஞ்ச் இதில் இல்லை. சில இடங்களில் மட் டுமே சிரிக்க
வைக்கிறார். ஹோட்டலுக்கு வரும் பெண்கள் எப்படிப்பட்ட வர்கள் எனக் கண்டு பிடிக்கச்
செய்யும் பரிசோதனை தொடங்கி அவரது பல முயற்சிகள் பிசுபிசுக்கின்றன.
நயன்தாராவின் நடிப் பிலும் தோற்றத்திலும் மெருகு
ஏறியிருக்கிறது. அவர் பெயரை வைத்தே ஒரு பாடல் உருவாக்கப் பட்டிருப்பது அவரது
நட்சத்திர அந்தஸ்தைக் காட்டுகிறது.
பேருக்கு வில்லன் களாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், நரசிம்மனும் வந்து செல்கிறார் கள்.
படத்தில் அவர் களுக்கு எந்த வேலையும் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து நடிகை ஷெரீன்
திரையில் முகம் காட்டி யிருக்கிறார். சற்றே வில் லத்தனமான காமெடியில்
கவனிக்கவைக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன.
ஆனால் மெட்டுக்கள் பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன.
பின்னணி இசை பரவாயில்லை.
பாலசுப்பிரமணியெம் ஒளிப் பதிவில் பாடல் காட்சிகள் கண்களுக்குக் குளுமையான
விருந்து.
படம் முழுவதும் சீரியஸ் முகம் காட்டி, காமெடித் திருப்பம் தர முயலும்
இயக்குநர் ஜெகதீஷ், சில இடங்களில்
வெற்றிபெறுகிறார். பல இடங்களில் அலுப்பூட்டுகிறார். காமெடிக்கான பின்னணியை
வலுவாக்க இன்னும் மெனக்கெட்டிருந்தால் ‘நண்பேன்டா’ என்று ரசிகர்களும் ஒட்டி
இருப்பார்கள்.
விமர்சனம்: தி ஹிந்து
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!
நிலம் கையகப்படுத்துதல்
தொடர்பாக மத்திய அரசால் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்ட அவசரச் சட்டத்துக்கு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வந்து
நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணி அரசு அதில் சில திருத்தங்கள் செய்து, தொழில் வளர்ச்சி, சாலை மேம்பாடு, துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள்
அமைத்தல் போன்றவற்றுக்காக நிலம் கையகப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை
ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு பிறப்பித்தது. இந்த அவசர சட்டம்
விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அது தொடர்பான மசோதாவை 6 மாதங்களுக்குள் நாடாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்படி, ‘நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தலில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை (திருத்தம்) மசோதா’ என்ற பெயரிலான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற முயன்றது.
நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு இந்த மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு 9 திருத்தங்களுடன் நிறைவேறியது. மேல்–சபையில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகம் இருப்பதால், எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் நலனுக்கு எதிரான இந்த மசோதாவை ஆதரிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டன. அத்துடன் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வந்தால் ஆதரிக்க தயார் என்றும் கூறின. இதனால், மேல்–சபையில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். இதனால், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அந்த புதிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடந்த 31 ஆம் தேதி ஜனாதிபதிக்கு மத்திய அமைச்சரவை சிபாரிசு செய்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் நாளை காலாவதியாக இருக்கும் நிலையில், மறு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருக்கிறார். இதன்மூலம் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு பிரச்னை தொடர்பான அவசர சட்டத்தை இரு முறைதான் பிறப்பிக்க முடியும். எனவே, நிலம் கையகப்படுத்தும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை இன்னும் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியாக வேண்டும். அப்படி மத்திய அரசால் நிறைவேற்ற முடியாமல் போனால் மூன்றாவது முறையாக அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியாது.

செய்தி: விகடன்
நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்றால் என்ன? முகவை முரசின் முந்தய பதிவுகளை காண இங்கு க்ளிக் செய்யுங்கள்