Thursday, April 2, 2015
கொம்பன் - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, தம்பி ராமய்யா
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
எழுத்து - இயக்கம்: எம் முத்தையா
இந்தப் படம் வந்தால் தென் மாவட்ட மக்கள் வெட்டிக் கொண்டு ரத்த வெள்ளத்தில்
கிடப்பார்கள் என்று சிலர் கடந்த ஒரு வாரமாக கொம்பனுக்கு எதிராக கொடி பிடிக்க, அப்படி என்னதான்யா சொல்லியிருக்காங்க என்று படம் பார்க்கும் ஆர்வம் 'சினிமாவே பிடிக்காது' என்று சொல்பவர்களுக்கும் கூட
வந்திருக்கும். படத்தில் அப்படி எந்த வில்லங்கமும் இல்லை. ஒரு அழகான கிராமத்துக்
கதை. குறிப்பிட்ட சாதிக்குள் நடக்கிற சம்பவங்கள்தான் என்றாலும், சாதிப்பெயரைக் கூட எங்கும் குறிப்பிடவில்லை. ராமநாதபுரம் பரமக்குடி பக்கமுள்ள
மூன்று கிராமங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. ஊருக்கே செல்லப் பிள்ளை, முரட்டுப் பிள்ளையான கார்த்திதான் கொம்பன் என்கிற கொம்பையா பாண்டியன்.
பக்கத்து கிராமத்து திருவிழாவுக்குப் போகும்போது லட்சுமி மேனனைப் பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்குமான நெருக்கத்தைப் பார்த்து, திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அப்போது லட்சுமியின் பாசமிக்க தந்தை ராஜ்கிரண், தனக்கு வரப்போகும் மருமகனைப் பற்றி அவரது கிராமத்துக்கே போய் விசாரிக்க, அது தெரிந்து கோபம் கொள்கிறார் கார்த்தி. ஆனாலும் மணமகள் தன் காதலி லட்சுமி என்பதை அறிந்து, திருமணம் செய்து கொள்கிறார். தன் அப்பாவும் கூடவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு லட்சுமி திருமணம் செய்து கொள்ள, அதற்கு வேண்டா வெறுப்பாக சம்மதிக்கிறார் கார்த்தி. வீட்டுக்குள் மாமனாரை மரியாதையில்லாமல் பேசும் கார்த்தி, ஒரு சூழலில் கை நீட்டி அடித்துவிட, லட்சுமி கோபத்துடன் தந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியேறுகிறார். மாமனார் தன்மீது வைத்துள்ள பாசம் புரிந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் அழைத்துவருகிறார். அப்போதுதான் கார்த்தி மீதான பழைய பகை அவரது குடும்பத்தையே காவு வாங்கப் பார்க்கிறது. அதிலிருந்து குடும்பத்தை எப்படிக் காப்பாற்றினார் கார்த்தி என்பது மீதி.
தெக்கத்தி வாசமும் அதன் புழுதியும் முரட்டுப் பாசமும் தெறிக்கும் வன்முறையும் கலந்து கட்டி அடிக்கிறது படம் முழுக்க. இப்படி ஒரு கிராமத்துப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று சொல்லும் வகையில் காட்சிகள். கார்த்தி பெரிய கொம்பன் என்பதால், அனைவரும் அவரிடம் அடி வாங்கிக் கொண்டே இருப்பதும், இடைவேளைக்குப் பிறகு இப்படித்தான் காட்சிகள் வரப் போகின்றன என யூகிக்க முடிவதையும் தவிர்த்துப் பார்த்தால் கொம்பன் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை. கார்த்திக்கு இந்தப் படம் இன்னொரு பருத்தி வீரன் என்றுகூடச் சொல்லலாம். கொம்பையா பாண்டியனாகவே மாறியிருக்கிறார். சண்டை என்று வந்துவிட்டால் போதும், வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு எதிராளிகளைப் புரட்டி எடுக்கிறார். பார்க்க அச்சு அசல் சண்டை மாதிரிதான் தெரிகிறது. லட்சுமி மேனனுடன் காதல், மாமனார் ராஜ்கிரணுடன் மோதல் இரண்டையுமே ரசிக்கும்படி செய்திருக்கிறார். மனம் திருந்தி மாமனார் வீட்டுக்குப் போகும்போது மாமனார் வாங்கிக் கொடுத்த அந்த பஞ்சுமிட்டாய் சட்டையைப் போட்டுக் கொண்டு போவது அழகு. கார்த்தி இந்தப் படத்தின் மூலம் புதிய நவரச நாயகனாகியிருக்கிறார்.

வசனங்கள் படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூடச் சொல்லலாம். 'சாதி சனமெல்லாம் கோயிலுக்குப் போகுது.. நீயும் வாப்பா..' 'சனம் இருக்கிற இடத்துக்கு வரலாம், கூடவே சாதியும்ல வருது அங்க எதுக்கு நான் வரணும்!' "ஏலேய் ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்குப் போடா.. இல்லனா அதோ .. வெள்ளையும், சொள்ளையுமா பெருசா மீசை வச்சிட்டு வாராய்ங்க பாரு.. அவிங்களப்போல உருப்படாம போயிருவடா.." ‘பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதாம்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்' - தனி வசனப் புத்தகமாகவே போட வேண்டிய அளவுக்கு நறுக்குத் தெறிக்கும் வசனங்கள்.
விமர்சனம்: ஒன் இந்தியா
அபுதாபியில் நாளை 03-04-2015 அன்று எம்.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்களுக்கு பாராட்டு விழா!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினரும்,
காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்களுக்கு பாராட்டு விழா!
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு வரவேற்பு விழா!

நாள்:- 03-04-2015
வெள்ளி மாலை 5.30 மணி
இடம்:- EMIRATES NBD BUILDING (SHOBRA SHOE) Electra St .Abu Dhabi

சமுதாயத்தின் முன்னேற்றங்களுக்கு பல்வேறு தளங்களில் தொடர்நது குரல் கொடுத்து வரும் தாய்ச்சபையின் தேசிய செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் பணியை பாராட்டும் இவ்வினிய நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளரும்& பதிப்பக அறக்கட்டளை செயலாளருமான மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் இந்த இனிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்:
அப்துர்ரஹ்மான் ரப்பானி
அமீரக காயிதேமில்லத் பேரவை அபுதாபி.
அப்துர்ரஹ்மான் ரப்பானி
அமீரக காயிதேமில்லத் பேரவை அபுதாபி.
கீழக்கரையில் அரசின் விலையில்லா “மிக்ஸி”!!
கீழக்கரையில் அரசின் விலையில்லா “மிக்ஸி” விநியோகம் விரைவில் தொடங்கும் என்று நகராட்சி தலைவி திருமதி. ராபியத்துல் காதிரிய்யா அறிவித்துள்ளார்.படம்: கீழக்கரை டைம்ஸ்
துபாய் FLORA HOTEL நிறுவனத்தில் HR Assistant வேலை வாய்ப்பு!!
HR Assistant
Flora Hospitality - Dubai
Flora Hospitality - Dubai
We are looking for a HR Assistant with an experience in a similar role Requirements: The ideal candidate should have:
TO APPLY: CLICK HERE
|