Wednesday, March 25, 2015
கீழக்கரையில் வாகன விபத்து. ஒருவர் படுகாயம்!!
கீழக்கரை அருகே முனிஸ்வரன் கோவில் சாலையின் வளைவில் கீழக்கரையிருந்து ராமநாதபுரம் சென்ற இருசக்கர வாகனமும் அதேபோலே ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி வந்த மற்றொரு பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாகனத்தில் வந்தவர்கள் காயமடைந்தனர் இதில் ஒருவரை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரும் பலத்த காயமடைந்ததால் ராமநாதபுரம் அரசுமருத்துவமனைக்கும் சேர்க்கப்பட்டனர்.
கீழக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த மூவரும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது .வடக்குதெருவை சேர்ந்த ஜலால் மற்றொருவர் கிழக்குதெரு அப்சர் , கிழக்குதெரு பட்டனி அப்பா பகுதியை சேர்ந்த மீராசாகிபு எனத் தெரிந்தது.மீராசாகிபு என்பவர் பலத்த காயமடைந்ததால் மதுரை கொண்டு சென்றுள்ளனர்.
செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்
கீழக்கரை நகராட்சி ஆணையாளரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை!!
கீழக்கரை நகராட்சி ஆணையாளரை இடம் மாற்றம்
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, கீழக்கரை
20ம் வார்டு கவுன்சிலர் திரு. ஹாஜா நஜீமுதீன் அவர்கள் தலைமை செயலகத்தில் அளித்த மனு உங்கள் பார்வைக்கு:
Fly Dubai விமான நிறுவனத்தில் Airport Baggage Coordinator வேலை வாய்ப்பு
Airport Baggage Coordinator
Fly Dubai - Dubai
Fly Dubai - Dubai
Airport Baggage Coordinator conducts intensive secondary tracing investigation in order to locate short shipped baggage in the shortest possible time and minimise customer inconvenience. Once located the BTA verifies the identity of baggage & passenger and arranges repatriation with the customer. KEY ACCOUNTABILITIES Key Activities 1. Retrieve all open AHL’s from day 6 from the world tracer system and conduct secondary tracing. 2. Ensure all left behind bags forwarded on the first available flight. 3. Request complete documents and baggage details from Passengers to conduct intensive tracing i.e. (Contents/copies of tags/ticket receipts/PIR copy). 4. Retrieve loading details from outstation. 5. Investigate all possible matches found. 6. Request all identified on hand matches & follow up till bag arrives. 7. Update daily database. 8. Check AHL/OHD quality and raise discrepancy for any inconsistency noticed in creation of the file. 9. Keep the Passenger informed to ensure proper handling. 10. Forward the file with complete documents for final settlement if baggage considered lost and not located for 21 days. 11. Monitor and ensure all records/databases are updated accurately. Qualifications: MINIMUM QUALIFICATIONS / EXPERIENCE/ KNOWLEDGE / SKILLS Experience • 3+ years’ experience in baggage tracing. • 3+ years customer services experience Knowledge / Skills • Excellent understanding of World Tracer System • Fluent in English ( Written & Spoken ) • Knowledge of Excel, Word and Power point CORE COMPETENCIES • Customer Focus • Team work • Effective Communication • Personal Accountability & Commitment to achieve • Resilience and Flexibility (Can do attitude) TO APPLY :CLICK HERE |
துபாய் ZS MEP நிறுவனத்தில் DOCUMENT CONTROLLER வேலை வாய்ப்பு
MEP Contracting Company requires the following personnelDocument Controller 2 Nos (Dubai & Abudhabi): The position demands the person to undertake overall in-charge of documentation and document control policies and procedures of Project. Generate any project-specific reports as required by the Project Manager. Prepare progress reports for Inspection Requests, Material Inspection Requests, Non Conformance Reports, Quality Observation Reports & Site Instructions and weekly and monthly basis for meetings.Updating the tracking log of drawing flow sheet as and when the approved drawings are received from the main contractor.Update the tracking log of the Technical Submittals. All records must be legible, dated, identifiable and traceable to the activities involved. They must be stored and maintained in such a way that they are readily retrievable and protected against damage, deterioration or loss.Records must also be kept in electronic format. Data integrity and security including back-up data, must be ensured.Provide feedback and assist the Project Manager in the preparation of weekly/monthly reports. . Candidates with prior experience as a Document Controller will be preferred.
Attractive salary will be provided to the right candidates.
Please rush in your CV’s & expected salaries to hr.zsmep@gmail.com
Requirements Experience with ACONEX is a must.
காஞ்சிரங்குடி வாலிபருக்கு நவீன முறையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை!! இராமநாதபுர அரசு மறுத்துவர்கள் சாதனை!!
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்
விபத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞருக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள இடுப்பு மூட்டு மாற்று அறுவைச்
சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி
கிராமத்தை சேர்ந்த மௌலானா மகன் சியாபுதீன்(19). இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில்,
வலது இடுப்பு பகுதியில் பாதிப்பு
ஏற்பட்டு வலியுடன் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால்,
அவரது வலது கால் மூன்றரை அங்குலம் உயரம்
குறைவாகவும் இருந்தது. அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி
வந்தார். ஏழ்மை நிலையில்லான இவரது குடும்பச் சூழ்நிலையில்,
உரிய மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல்
இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில்,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்
மூலம் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக,
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். இவருக்கு மருத்துவக் குழுவினர் மூலம் நீண்ட நாள் உழைக்கக் கூடிய
செராமிக் வகையான பந்து மற்றும் கிண்ணம் சிமெண்ட் இல்லாத முறையில் அறுவைச்சிகிசிசை
மூலம் இடுப்பு மூட்டு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வகையான சிகிச்சைக்கு தனியார்
மருத்துவமனைகளில் ரூ.4லட்சம் வரை செலவாகும். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ரூ.1.20லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டு,
சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை
செய்து முடிக்கப்பட்டது. சியாபுதீன் தற்போது நன்கு குணமடைந்து நடக்கும் நிலையில்
உள்ளார். அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை நிலைய மருத்துவர்
சகாயஸ்டீபன்ராஜ், எலும்பு முறிவு
மருத்துவர் பெரோஸ்கான் ஆகியோரை ஆட்சியரும்,இளைஞரின் குடும்பத்தினரும்,உறவினர்களும் பாராட்டியுள்ளனர்.
இது போன்ற பல்வேறு சிகிச்சைகளும் தனியார்
மருத்துவமனைகளுக்கு இணையாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருவதாகவும்,பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,
என மருத்துவத்துறை இணை இயக்குநர் ரவி
செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடவுள் பாதி மிருகம் பாதி - தமிழ் திரை விமர்சனம்
மர்மக் கதைக்கு
ஏற்ற விதத்தில் இருளில் தொடங்குகிறது படம். முகத்தில் அச்சம் அப்பியிருக்க,
இரவுக் காவலர் நடந்து செல்வதை கேமரா
பின்தொடரும்போதே பெரும் அசம்பாவிதத்துக்கு மனம் தயாராகிவிடுகிறது.
எதிர்பார்த்தபடியே காவலர் கொன்று இழுத்துச் செல்லப்படுகிறார். கொல்லும் நபரின்
முகத்தைக் காட்ட கேமரா விரும்பவில்லை.
அடுத்த
காட்சியில் படபடப்புடன் வீட்டில் இருந்து ஓடிவந்து காரில் ஏறுகிறாள் நேகா (ஸ்வேதா
விஜய்). காரில் காத்திருக்கும் அவளது காதலன் (அபிஷேக்) காரை கிளப்புகிறான்.
வெளியூருக்குச் சென்று திருமணம் செய்துகொள்வது அவர்கள் திட்டம்.
வழியில் ஒரு
கார் ரிப்பேராகி நிற்கிறது. அங்கு நிற்கும் ஒருவர் (ராஜ்) இவர்களது காரில் லிப்ட்
கேட்டு ஏறிக்கொள்கிறார். அவர் இயல்பான நபர் அல்ல என்பது சிறிது நேரம்
கழித்துத்தான் காதலர்களுக்குத் தெரிகிறது. அபிஷேக்கை கத்தியால் குத்தவரும் ராஜின்
கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காதலர்கள் தப்பிக்கிறார்கள்.
ஆனால் வேறொரு
கார் மூலம் இவர்களைப் பின்தொடர்ந்து வந்து மீண்டும் இவர்களது காரில்
ஏறிக்கொள்கிறார் ராஜ்.
நெடுஞ்சாலையில்
ராஜ் விட்டுச் சென்ற காரில் இருக்கும் பிணத்தை போலீஸார் கண்டுபிடிக்கின்றனர்.
பிணத்தின் அடையாளங் களை வைத்துப் புலனாய்வைத் தொடங்கு கின்றனர். கொலையாளி,
மனநல மருத் துவமனையில் இருந்து தப்பியவன்
என்பது தெரிய வர, அவன் ஏறிக்கொண்ட
கார் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. கார் சென்ற வழியில் விரை கிறார் போலீஸ்
அதிகாரி சேது.
பல
அபாயங்களுக்கு மத்தியில் நடக்கும் இந்த தேடுதல் வேட்டையின் முடிவு என்ன என்பதை
விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக் கிறார்கள்.
படத்தைத்
தயாரித்து இயக்கி முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கும் ராஜ்,
காட்சியால் கதை சொல்வதில் பெருமளவு
வெற்றிபெற்றிருக்கிறார். அடிப்படைக் கதை, மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியின் பின்னணி ஆகியவற்றில்
புதிதாக எதுவும் இல்லை. ஆனாலும், அனாவசியக் காட்சி கள் இல்லாமல் கச்சிதமாகத் திரைக்கதை அமைத்
திருக்கிறார். சில நீளமான காட்சிகள் அலுப்பூட்டு கின்றன. அடுத்தடுத்த திருப்பங்கள்
சுவாரஸ்யமாக இருந்தாலும், முடிவு எளிதாக யூகிக்கக்கூடியதாக இருப்பதால் முழுமையாக
ஒன்றமுடியவில்லை. சண்டைக் காட்சிகள் படமாக்கம் அருமை. குறிப்பாக காவல் நிலையச்
சண்டை. குற்றவாளியின் பின்னணியைச் சொல்லும் குறுங்கதையில் புதிதாக எதையாவது
யோசித்திருக்கலாம்.
ராஜ் அதிகம்
பேசாமல் உடல்மொழி மூலமாகவே கலக்கியிருக்கிறார். அபிஷேக்கும் ஸ்வேதாவும் எதிர்பாராத
ஆபத்தில் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தையை நன்கு வெளிப்படுத்துகின்றனர். ஸ்வேதாவின்
கண்கள் நன்றாகப் பேசுகின்றன. மைனாவில் காவல் துறை அதிகாரியாக வரும் சேது அமைதியாக
வந்துபோகிறார். சிறிய வேடத்தில் வரும் பூஜா பளிச்சென்று மனதில் நிற்கிறார்.
ராகுல்ராஜின்
பின்னணி இசை நன்றாக உள் ளது. காட்சியின் உணர்வை வெளிப்படுத்தும் கிஷோர் மணியின்
ஒளிப்பதிவு படத் தின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
‘கடவுள் பாதி
மிருகம் பாதி’ என்ற தலைப்பின்
இரண்டாவது பாதியை மட்டுமே காட்டுகிறது படம். சைக்கோ குற்றவாளி பாத்திரத்தின் மென்மையான
பகுதியையும் காட்டியிருந்தால் தலைப்புக்கு நியாயம் செய்வதுடன் படத்தின் பரிமாணமும்
கூடியிருக்கும்.
வேலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ரகுமானுக்கு டாக்டர் பட்டம்.
இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னணி தலைவரும். முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான
அப்துல் ரகுமான் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக அமெரிக்க
தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது.
இந்நிகழ்ச்சி மார்ச் 29 அன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகிய்ள்ளது.
செய்தி: புளியங்குடி அமீன்