முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 23, 2015

54 தமிழக மீனவர்கள் விடுதலை.

No comments :

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ள நிலையில் 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வருகின்ற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தமிழக மீனவர்கள் 54 பேர் திடீர் விடுதலை: விடுவிக்கப்படாவிட்டால் நாளைய பேச்சு நிறுத்தம்- தமிழக அரசு!

இதையடுத்து 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அவர்களை வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நாளை சென்னையில் நடைபெறும் நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது எப்படி சரியாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார். 

இதனிடையே தமிழக-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 54 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.

COURTESY: ONE INDIA

கத்தாரில் மார்ச் 27ம் தேதி ISF நடத்தும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

No comments :
கத்தாரில் மார்ச் 27ம் தேதி ISF நடத்தும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

துபாய் Khaleej times பத்திரிக்கையில் Cashier வேலை வாய்ப்பு

No comments :


Industry:Banking
Career:Unspecified
Job Location:Dubai
Salary:Unspecified
Experience:2 - 5 Years
Job Type:Full Time
Gender:Any
Email Address:gomaamanaf@gmail.com
Street:Dubai
City:Dubai
Listed :March 19, 2015 9:11 am
Expires :25 days, 20 hours

Description

Profile:
Graduation / MBA (Preferred)
At least 1 to 3 years of work experience
Prior T24 implementation or usage experience, merged with reasonable experience in their core areas of cash / CSR
Key Skills:
Knowledge of cash operations
Planning and Organising
Attention to detail and accuracy
Ability to work under pressure

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா - எம்.பி. அ.அன்வர்ராஜா பங்கேற்பு

No comments :
ஏழை மாணர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி தங்களது கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என சனிக்கிழமை எம்.பி. அ.அன்வர்ராஜா பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு அ.அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:
கல்வியின் தரம் உயர்ந்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நமது மாநிலம் உள்ளது. வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் அரசின் திட்டங்களால் தங்களது கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு பல நலத் திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது என பேசினார்.
IMG-20150321-WA0006
விழாவில் பள்ளிவாசல் ஜமாத்தலைவர் ஏ.காதர்மைதீன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ரஹ்மானிய ஐ.டி.ஐ நிறுவனர் அப்துல்காதர், கல்விக்குழுத் தலைவர் ஏ.ஷாஜகான் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளித் தாளாளர் எம்.எஸ்.சௌக்கத்அலி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம், துணைத்தலைவர் பாசில் அமீன், ஒன்றியக்குழு தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, ஒன்றிய இளைஞரணிச் செயலர் தூரி.எம்.மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் செய்திருந்தார்.

செய்தி: தினமணி
படம்: திரு ஹிதாயத்