Sunday, March 8, 2015
மண்டபத்தில் மறுமலர்ச்சி தமுமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
மண்டபம் பேரூர் கிளைகழக மறுமலர்ச்சி தமுமுக
சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்,
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா
அவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முகாமை பார்வையிற்று வாழ்த்தினார்.
செய்தி; திரு முஜீப், கீழக்கரை
துபாய் எமிரேட்ஸ் விமானப்பிரிவில் Software Engineer பணி வாய்ப்பு
Software Engineer - TPF/ALCS - 1400084L
Job Purpose
Emirates Group IT - TPF/ALCS Software Engineering ProfessionalsWe are currently recruiting TPF/ALCS Software Engineers to join our IT team. These individuals will work closely with our business colleagues to provide the business technology solutions and systems required to support our daily global operations, as well as our future aspirations and long-term growth plans.
As the largest operation of its kind in the region, Emirates Group IT employs over 3,000 highly skilled IT professionals from over 160 countries. With innovation at the centre of our culture, and a forward thinking approach to product and solution delivery, we are continuously building upon our portfolio of Aviation IT solutions.
Qualifications & Experience
- Information Technology.Software : 3+ Years
- Degree or Honours (12+3 or equivalent) :
- Education in various programming languages, data modelling, database design, developing tools is vital. Training in a range of professional courses covering all elements of the development process.
- Through understanding of client server, web development, and/or N-Tier architecture, software environments with integrated development and related tools is important.
- Specific knowledge of various projects will be part of the TOR.
Job Category
: Information TechnologyPrimary Location
: United Arab Emirates-DubaiJob Posting
: 09-Dec-14, 6:30:18 PM
Closing Date (GMT+4)
: Ongoing
To apply : CLICK HERE
75% பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள்
சர்க்கஸ்ஸில் சிங்கம்: "யாராவது
வாருங்கள்...இங்கே கொரில்லா உள்ளே வந்து விட்டது..."
கொரில்லா: சத்தம் போட்டு பேசாதே...நீபோட்ட வேஷம் மாதிரிதான் நானும் போட்டு இருக்கேன். சத்தமா பேசினா 2 பேருக்கும் வேலை போயிடும்."
இந்த ஜோக் மாதிரிதான் எங்கும் வேலை இல்லாத்திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுகிறது. எதற்காக செயல்படுகிறது? வேலை கொடுப்பதற்காக என்று நினைத்தால்இல்லை என்றுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது. ஆட்சியாளர்கள் எல்லோரும் பணம் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள் ‘வேலை இல்லை’ எனும் வார்த்தை இந்திய இளைஞர்களை அச்சுறுத்தும் ஒரு வார்த்தையாக உருவெடுத்து உள்ளது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அம்மனிதன், பூமியில் வாழும் வரை அவனுக்கு உறுதியாய், ஊக்கமாய் இருப்பது இந்த வேலையே.
கொரில்லா: சத்தம் போட்டு பேசாதே...நீபோட்ட வேஷம் மாதிரிதான் நானும் போட்டு இருக்கேன். சத்தமா பேசினா 2 பேருக்கும் வேலை போயிடும்."
இந்த ஜோக் மாதிரிதான் எங்கும் வேலை இல்லாத்திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுகிறது. எதற்காக செயல்படுகிறது? வேலை கொடுப்பதற்காக என்று நினைத்தால்இல்லை என்றுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது. ஆட்சியாளர்கள் எல்லோரும் பணம் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள் ‘வேலை இல்லை’ எனும் வார்த்தை இந்திய இளைஞர்களை அச்சுறுத்தும் ஒரு வார்த்தையாக உருவெடுத்து உள்ளது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அம்மனிதன், பூமியில் வாழும் வரை அவனுக்கு உறுதியாய், ஊக்கமாய் இருப்பது இந்த வேலையே.
பல படித்த இளைஞர்கள்தான் படித்ததற்கும்,
செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல்
பணி செய்கின்றனர். இதில் பலர் ஆட்டோக்களை ஓட்டுபவர்களாகவும்,
தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும்,
சுய தொழில்புரிபவர்களாகவும்
பரிணமித்திருக்கிறார்கள். வேலைஇல்லாத் திண்டாட்டம் பல குற்றங்கள் உருவாக காரணமாக
அமைந்து விட்டது. பல செயின் பறிப்பு முதல் நவீன தொழில் நுட்ப திருட்டுவரை படித்த
இளைஞர்கள் ஈடுபட்டு கைது ஆவது இப்போது
நிறைய நடக்கிறது.
2011ல், 3.5 சதவீதமாக இருந்த, வேலைவாய்ப்பின்மை, 2012ல், 3.6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டில், அதாவது, 2013ல், 3.7 சதவீதமாக இருந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமானோர், நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அவ்வாறே, நகர்ப்புறங்களில், திறமையில்லாத, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரிப்பதால், நகர்ப்புறங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது.
2011ல், 3.5 சதவீதமாக இருந்த, வேலைவாய்ப்பின்மை, 2012ல், 3.6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டில், அதாவது, 2013ல், 3.7 சதவீதமாக இருந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமானோர், நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அவ்வாறே, நகர்ப்புறங்களில், திறமையில்லாத, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரிப்பதால், நகர்ப்புறங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது.
NASSCOM (National Association of Software and Services Companies) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி இந்தியாவில் 75 % பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள். ஒவ்வொரு வருடமும் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது ஆண்டுக்கு 5 % என்று வருடா வருடம் உயர்கிறது, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15,00,000க்கும் அதிகம்.
இதற்க்கு தீர்வாக பல புதிய தொழில்கள் தொடங்கப்படவேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு பெருகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்காத படிப்பை படிக்க சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் மாணவர்களும் பிடித்த துறையை கண்டு, அதை படிக்கவேண்டும். இதனால் பாடத்திட்டத்தையும் தாண்டி நம் திறன் வளரும்.
'படிப்பு என்பது
பிடிப்பாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்க கூடாது. திணிப்பு இல்லாத
படிப்பின் மூலமே புதிய கண்டுபிடிப்புகளும் வேலை வாய்ப்பும் பெருகும்.
நன்றி: விகடன்
எனக்குள் ஒருவன் - தமிழ்
திரையரங்கில்
வேலை பார்ப்பவர் விக்னேஷ் (சித்தார்த்). துரை டாக்கீஸ் திரையரங்கை நடத்தும்
துரையண்ணனின் (ஆடுகளம் நரேன்) அன்புக்குப் பாத்திரமான விக்னேஷ் தூக்கமின்மை யால்
அவதிப்படுகிறார்.
இந்நிலையில் அவருக்கு லூசியா என்னும் மாத்திரை கிடைக்கிறது.
உறக்கத்துடன் விருப்ப மான கனவையும் தரும் அதிசய மாத்திரை அது. கனவில் பிரபலமான
நடிகர் விக்னேஷாக வலம் வருகிறார். தியேட்டரில் வேலை பார்க்கும் விக்னேஷுக்குக்
காதல் வருகிறது. அந்தக் காதலில் பிரச்சினை வரும்போது அதே காதல் கனவில்
கைகூடுகிறது.
இப்படிப் பல
விதங்களில் ஒன்றுபோல வும் சில நுட்பமான வித்தியாசங்களுடனும் பயணிக்கும் இந்தக்
கனவு நனவுப் பயணங்கள் ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இந்த மாய
விளையாட்டை திரைக்கதையாக்கி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரைப் பற்றி
யோசிக்கவைக் கிறார் இயக்குநர் பிரசாத் ராமர்.
கனவு நனவென
சம்பவங்கள் மாறி மாறி நிகழும் படம் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டுள்ளது ‘எனக்குள் ஒருவன்’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தின் மறு ஆக்கம் என்ற போதும் தமிழ்ப் படமாகவே உள்ளது.
நனவுலகில் நடிகர் விக்கி மருத்துவமனை யில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக் கிறார்.
அது தொடர்பான விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கியை அவருடைய காதலியே
கொலை செய்ய முயல்கிறார். எது கனவு? யார் நிஜம்? ஏன் இந்தக் கொலை முயற்சி? காதலி யின் பிரச்சினை என்ன? நாயகனின் உண்மையான பிரச்சினை என்ன?
இறந்து போவது யார்?
இப்படிக் குழப்பமான பல விஷயங்கள் எந்தக்
குழப்பமுமின்றி அழகான திரைக்கதையாக்கப்பட்டுள்ளன.
முக்கியமான
எல்லாக் கதாபாத்திரங் களும் இரு வேடங்களில் வருகின்றன. படமும் வண்ணத்திலும்
கறுப்பு வெள்ளையிலும் மாறி மாறி காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இரு வேறு உலகம்
என்றபோதிலும் இரண்டையும் அழகாக அடுக்கியுள்ளனர். இரு இணை கோடுகளாகப் பயணிக்கும்
திரைக்கதை யில் எந்தக் கோடு நிஜம் எது கனவு என் னும் கேள்வி எழுப்பப்படுவது புதிய
சிந்தனை. இரு கதைகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் தொடக்கத்தில்
ஆர்வமூட்டினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பூட்டுகின்றன. ஆனால் வித்தியாசத்தின்
மெல்லிய திரை இரு கதைகளினூடே படர ஆரம்பிக்கும்போது திரைக்கதை மீண்டும்
உயிர்பெறுகிறது.
இணை கோடாகச்
செல்லும் இரு கதைகளுக்கு நடுவில் புலனாய்வு என்னும் இன்னொரு இழையையும் பின்னி
யிருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் புத்திசாலித்தனத்தை விடவும் தற்செயல்
திருப்பங்கள் புலனாய்வை முன்னெடுத்துச் செல்வது புலனாய்வை மந்தமாக்குகிறது.
இரு கதைகளும்
ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆக வேண்டும் என் பதும் அதுவரையில் பார்வையாளர்களின்
குழப்பம் அல்லது எதிர்பார்ப்பு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதும் இதுபோன்ற
படங்களில் கட்டாயம். அதை இயக்குநர் ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஆனால்
புலனாய் வுக் கட்டத்தில் பங்கு பெறும் நாயகனின் காதலி சித்தரிக்கப்பட்டுள்ள விதம்
அந்தக் குழப்பத்தைத் தக்கவைப் பதற்காகச் செய்யப்பட்டுள்ள செயற்கை யான திணிப்பாகவே
உள்ளது.
கனவில்
மூழ்குவதற்கான காரணம் ஒரு செய்தியாக நம்மைக் கவர்கிறது. ஆனால் அது திரை அனுபவமாக
உருப் பெறவில்லை. இதற்கான சவாலை இயக்குநர் எதிர்கொள்ளவே இல்லை.
சாதாரண மனிதன்
என்றால் அவன் முகத்தில் கரியைப் பூச வேண்டுமா? சாதாரணமானவர்களும் படிக்காதவர் களும் அப்பாவிகளும்
கறுப்பாகத்தான் இருக்க வேண்டுமா?
சித்தார்த் இரு
வேடங்களிலும் தன்னால் இயன்ற அளவு மாறுபாடான நடிப் பைத் தந்துள்ளார். இரு வேறு
ஆளுமை களைச் சித்தரிப்பதில் தேறிவிடுகிறார். ஆனால் படம் அவரைச் சுற்றியே நகரும்
நிலையில் அவரது பாத்திரங்கள் மேலும் அழுத்தமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி
இல்லாதது அலுப்பையே தருகிறது.
அறிமுக நடிகை
தீபா சன்னிதியும் இரு கதைகளிலும் நன்கு வித்தியாசம் காட்டியுள்ளார். நரேன்,
ஜான் விஜய்,
அஜய் ரத்னம்,
யோக் ஜப்பி ஆகியோர் படத்துக்கு வலிமை
சேர்க்கிறார்கள்.
சந்தோஷ்
நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இசை படத்தை
உயிர்ப்பான ஒன்றாக மாற்றவில்லை. கோபி அமர்நாத் தின் ஒளிப்பதிவு படத்தின்
சிறப்பம்சங் களில் ஒன்று. பாதிப் படம் கறுப்பு வெள் ளையில் நகர்ந்தாலும் எந்தக்
காட்சியி லும் பழைய நெடி அடிக்கவே இல்லை.
தியேட்டர்கள்
நவீன மால்களாகும் காலத்தில் சினிமாவையே நேசிக்கும் துரையண்ணன் போன்ற ஒருவர்
யதார்த் தத்துக்குப் பலியாக மறுத்து உயிரை விடுகிறார். எல்லோரும் கனவு காண்கிறோம்.
வேறு ஆளாக மாற வேண்டும் என்னும் விருப்பமும் இருக்கிறது. இப்படிச் சமகாலச்
சிக்கலைப் பேசும் படம், கனவு நிஜமாகிறது என்ற கற்பனையைத் தரும் படம்,
மிகவும் உயிரோட்டமான ஒன்றாக இருந்திருக்க
வேண்டும். ஆனால் படம் அப்படி அமையவில்லை.
என்றாலும்
வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இப்படத்தை வரவேற்கலாம்.