Thursday, February 26, 2015
துபாய் முனிசிபாலிட்டி யில் Call Centre Executive பணி வாய்ப்பு
Handling Calls. Guiding Patients as per requirement. Desired Candidate Profile Handling Calls. Guiding Patients as per requirement. Handling Calls. Guiding Patients as per requirement. Desired Candidate Profile Handling Calls. Guiding Patients as per requirement. To apply: Click Here |
துபாய் விமான நிலையத்தில் Cashier வேலை வாய்ப்பு
Cashier
Dubai Airports - Dubai
Dubai Airports - Dubai
The purpose of the role is to ensure that all collections from the decentralised cash receipt points of Dubai Airports are received and safely lodged in bank in time, in accordance with the reinforced internal control system approved by CEO / H.H. The President. For full details about the role and the responsibilities, please click here . About You The job holder will be educated to at least Diploma level in a relevant field, or they will have an equivalent professional qualification Important Information for You Please note, this is a shift position. You will receive a monthly shift allowance. Dubai Airports offers a variety of benefits. They are based on the grade of the position and current HR Policy. Ask your recruiter for further details on the specific benefits for this position. As an overview, we provide a generous Annual Leave allowance, together with an Annual Ticket allowance for yourself (and in many grades also for your family). We're pleased to offer Education Assistance for many grades. Medical Insurance is provided for you and in most grades your family. For certain grades we provide transport to and from residential areas in Dubai & Sharjah. Launchpad, our state of the art learning and development center, offers a large variety of exciting opportunities to help you boost your career. Our Employee Relations team is proud to provide us a busy annual social calendar that includes activities related to cultural, sport, health and wellness. The team also works to provide us with discounts on the purchase of flight tickets, a stay in a hotel, meals out or some other social activity. Important: As Dubai Airports takes huge leaps forward you should be flexible, based on the operational requirements at the time, to work in either airport or across both airports. Please note, Dubai Airports employees are evaluated for all positions before external applicants are considered. Note: you will be required to attach the following: 1. Resume/CV 2. Passport-size photograph 3. Passport Copy To apply: Click here |
தொண்டியில் சிலிண்டர் வெடித்து முகம்மது ஹக் என்பவர் படுகாயம்
தொண்டியில் ஒரு கடையில்
சிலிண்டர் வெடித்ததில்,
ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தொண்டி கிழக்குத்
தெருவில் வல்கனைசிங் கடை வைத்திருப்பவர் முகம்மது ஹக்(25). இவர்,
செவ்வாய்க்கிழமை தனது கடையில் வேலைபார்த்துக்
கொண்டிருந்துள்ளார். அப்போது, கம்பிரஷருக்கு
பயன்படுத்தப்படும் சிலிண்டர் திடீரென வெடித்ததில், முகம்மது ஹக் பலத்த காயமடைந்தார். மேலும், கடை முற்றிலும்
சேதமடைந்தது.
தகவலறிந்த தொண்டி
போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, முகம்மது ஹக்கை
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி: முகநூல் வழி தொண்டி நண்பர்கள்
செய்தி: முகநூல் வழி தொண்டி நண்பர்கள்
மக்கள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இராமேஸ்வரத்தில் மரம் நடு விழா
ஜெயலலிதாவின்
பிறந்தநாளையொட்டி ராமேசுவரம் திருக்கோயிலில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சேதுமாதவர் கோயில் அருகே மரம் நடும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலை
வகித்தார்.
இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சுந்தரராஜன் வில்வ மரக்கன்றை
நட்டு வைத்தார்.
ராமேசுவரம் நகர்மன்றத்
தலைவர் அர்ச்சுனன்,
நகர்மன்ற உறுப்பினர்கள் நாகசாமி, மீனாட்சிசுந்தரம்,
கோயில் உதவிக்கோட்ட மேலாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ், கோயில் பேஷ்கார்கள்
அண்ணாதுரை,
ராதா, அண்ணா தொழிற்சங்கம்
மின்சாரப் பிரிவு கோட்டச் செயலர் முருகேசன், அதிமுக நகர் செயலர்
பெருமாள்,
அம்மா பேரவை செயலர் கஜேந்திரன் உள்பட அதிமுக கட்சியின்
நிர்வாகிகளும்,
தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
கீழக்கரையில், திருமணமான நான்கே நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
கீழக்கரையில், திருமணமான
நான்கே நாளில் புதன்கிழமை காலை புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கீழக்கரை அண்ணா நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் கலையரசி (21). இவருக்கும், சாயல்குடி அருகே உள்ள எஸ்.வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பழனி முத்துபாக்கியம் என்பவருக்கும், கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதிகள் இருவரும் மறுவீட்டுக்கு
எஸ்.வாகைகுளம் சென்றுவிட்டு, மறுபடியும் கீழக்கரை
திரும்பியுள்ளனர். புதன்கிழமை காலை, பழனிமுத்துபாக்கியம்
மீண்டும் வாகைகுளம் செல்லவேண்டும் எனக் கூறினாராம். அதன்படி, இருவரும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டுக்குள் சென்ற கலையரசி, திடீரென தனது உடலில்
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
படுகாயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரின் தாயார் விஜயலெட்சுமி, கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன்
வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான நான்கே நாளில் புதுப்பெண்
தற்கொலை செய்துகொண்டதால்,
ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம் பிரதீபன் விசாரணை
நடத்தி வருகிறார்.
செய்தி: தினமணி
செய்தி: தினமணி