Wednesday, February 25, 2015
பண மழை பொழிந்தது துபாயில் அல்ல, குவைத்தில்.
துபாய் சாலயில் ஏராளமான பணம் சிதறியது தொடர்பாக கல்ஃப்
நியூஸ் வெளியிட்ட செய்தியாவது.
கனமான காற்றால் தூக்கி எரியப்பட்டு பண மழை பொழிந்தது உண்மை ஆனால் அது துபாயில் அல்ல குவைத், அல் சூர் தெருவில் உள்ள ஃபேட்பர்கர் ரெஸ்டாரண்ட் அருகில்.
ரெஸ்டாரண்ட் மேலாளர் திரு. ஷஃப்க் ஹம்ஜா இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
கனமான காற்றால் தூக்கி எரியப்பட்டு பண மழை பொழிந்தது உண்மை ஆனால் அது துபாயில் அல்ல குவைத், அல் சூர் தெருவில் உள்ள ஃபேட்பர்கர் ரெஸ்டாரண்ட் அருகில்.
ரெஸ்டாரண்ட் மேலாளர் திரு. ஷஃப்க் ஹம்ஜா இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஏராளமான ஊடக செய்தியாளர்கள் இதை துபை என்று தவறுதாலக்
பிரசுரித்து விட்டதாக கல்ஃப் நியூஸ் தெரிவிக்கிறது.
துபாய் MARRIOT ல் Engineering Supervisor வேலை வாய்ப்பு
Engineering Supervisor
Marriott - Dubai
Marriott - Dubai
150008CP Job : Engineering and Facilities Maintenance Primary Location : ARE-United Arab Emirates-Dubai-The Ritz-Carlton, Dubai International Financial Centre Organization : Ritz-Carlton Position Type : Non-Management/Hourly Schedule : Full-time At more than 80 award-winning properties worldwide, The Ritz-Carlton Ladies and Gentlemen create experiences so exceptional that long after a guest stays with us, the experience stays with them. As the premier worldwide provider of luxury experiences, we set the standard for rare and special luxury service the world over. We invite you to explore The Ritz-Carlton. Job Summary Complete the life safety checklist, including the fire-pump run test and generator run test. Inspect fire sprinkler valves and alarm systems. Assist in development of disaster response protocols. Respond and attend to guest repair requests. Assist management in hiring, training, scheduling, evaluating, counseling, disciplining, and motivating and coaching employees. Follow all company and safety and security policies and procedures; report maintenance problems, safety hazards, accidents, or injuries; and complete safety training and certifications. Ensure uniform and personal appearance are clean and professional, and maintain confidentiality of proprietary information. Welcome and acknowledge all guests according to company standards, anticipate and address guests' service needs, and assist individuals with disabilities. Develop and maintain positive working relationships with others, support team to reach common goals, and listen and respond appropriately to the concerns of other employees. Ensure adherence to quality expectations and standards; and identify, recommend, develop, and implement new ways to increase organizational efficiency, productivity, quality, safety, and/or cost-savings. Speak with others using clear and professional language. Visually inspect tools, equipment, or machines. Reach overhead and below the knees, including bending, twisting, pulling, and stooping. Move, lift, carry, push, pull, and place objects weighing less than or equal to 10 pounds without assistance. Grasp, turn, and manipulate objects of varying size and weight. Stand, sit, or walk for an extended period of time. Move up and down stairs and/or service ramps. Perform other reasonable job duties as requested by Supervisors. The Ritz-Carlton does not discriminate on the basis of disability, veteran status or any other basis protected under federal, state or local laws To Apply: Click Here |
இராமநாதபுரத்தில் நகை கண்காட்சி
இராமநாதபுரத்தில் உலகதரம் வாய்ந்த நகை
கண்காட்சி வரும் பிப்ரவரி 27,28 மார்ச் 1,2 ம் தேதிகளில் தேதிகளில் மலபார் நகை கடையில் நடக்கிறது இங்கு
இந்தியாவில் அணைத்து மலபார் நகைக்கடைகளில் உள்ள நகைகள் வரவழைக்கபட்டு மக்கள்
கண்காட்சிக்கும் மற்றும் விற்பனையும் செய்யப்பட உள்ளது.
இது குறித்து இராமநாதபுரம் கிளை மலபார் நகைக்கடையின்
இயக்குனர் ஜனாப் சபீர் அஹமது அவர்களிடம் கேட்டபோது . தமிழ் நாட்டிலே ஏன்
இந்தியாவிலே முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எங்களது
நிறுவனங்களில் உள்ள அணைத்து கடைகளிலும் உள்ள உலக தரம் வாய்ந்த நகைகள்.
கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவழைத்து
வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் நடைபெறஉள்ளது.
இந்த கண்காட்சியில் ஆண்டிக் நகைகள் ,டைமன்ட் புதிய டிசைன்,டெம்பில் டிசைன் நகைகள் ,திருமண டிஸைன் ,வடநாடு திருமண டிஸைன்,மற்றும் இளம்பெண்களுக்கான பிரத்யோக நகைகள்,சிறுமிகளுக்கான புத்தம் புதிய டிசைன்கள் .
மற்றும் ஆண்களுக்கான வாட்ச் ராடோ ,டிசொட் ,கேசியோ . இவை அணைத்து நகைகளும் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவுள்ளது என்று கூறினார்.
மற்றும் ஆண்களுக்கான வாட்ச் ராடோ ,டிசொட் ,கேசியோ . இவை அணைத்து நகைகளும் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவுள்ளது என்று கூறினார்.
செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்
தேவிபட்டினம் பள்ளி ஆண்டு விழா
தேவிபட்டினம் சாலையில் வெண்குளம்
கிராமத்தில் உள்ள ஷிபான் நூர் குளோபல் அகாதெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா
மற்றும் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு,
பள்ளியின் தாளாளர் டாக்டர் ஐ. மன்சூர்
தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி டாக்டர் நூருல்ஹவ்வா முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முதல்வர் விக்டர் ஞானராஜ்
வரவேற்றார்.
இதில், யோகா, கராத்தே ஆகிய கலைகளில் சாகசங்களை செய்து காட்டிய மாணவ,
மாணவியர்க்கு வேளாண்மைத் துறை துணை
இயக்குநர் இசட். கமாலுதீனும், பிரமிட் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு
தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்ஹூசேனும் பரிசுகளை வழங்கினர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,
மாணவியர்க்கு வழக்குரைஞர் சுல்த்தான்
அப்துல்காதர் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
விழாவில், பள்ளியின் தனி அலுவலர் சீனிவாசன்,
நல்லாசிரியர் லியாகத் அலி,
ஐ.எஸ்.ஓ. ஆலோசகர் சாகுல்ஹமீது,
தமிழ்ச் சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம்
மற்றும் ரிபாய்கனி, இர்ஷாத் உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
1,023 நபர்களுக்கு பணிநியமன ஆணை - மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்-ல்
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
வேலைவாய்ப்பு முகாமில், 1,023 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
முன்னதாக, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத்
துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சிக்கு,
மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை
வகித்தார். மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்காட்சியை திறந்துவைத்தார்.
அதையடுத்து, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது இ-சேவை மையத்தை
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள
சமுதாயக்கூடத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின்
மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும்
புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில்,
தேர்வு செய்யப்பட்ட 1,023
நபர்களுக்கு நேரடி பணிநியமன ஆணைகளை
அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியது: அரசு பொது இ-சேவை மையங்கள்,
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும்
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இம்மையங்களில் வருமானச்
சான்றிதழ், ஜாதிச்
சான்றிதழ், இருப்பிடச்
சான்றிதழ், குடும்பத்தில்
முதல் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்கள் உள்ளிட்டவை
உடனடியாக வழங்கப்படுகின்றன.
வருங்காலத்தில் இம்மையங்கள் மூலம் அரசு துறைகளின் பல்வேறு
சேவைகளை இணையம் மூலமாகவே பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ,
மாவட்ட வன அலுவலர் குருசாமி,
திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை)
குருநாதன், மாவட்ட
ஊராட்சித் தலைவர் சிவதேவ்குமார், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ,
கூட்டுறவு வங்கித் தலைவர் முருகானந்தம்,
ஆவின் பால்வளத் தலைவர் சண்முகம்,
வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா,
மகளிர் திட்ட அலுவலர் சரோஜாதேவி,
வட்டாட்சியர் கார்த்திகாயினி,
புதுவாழ்வுத் திட்ட அலுவலர் அசோக்குமார்
மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி: தினமணி
இது சம்பந்தமாக நம் தளத்தில் முன்னர் வெளியிடப்பட்ட செய்தி: http://www.muhavaimurasu.in/2015/02/blog-post_1.html
நாடாளமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதா தாக்கல், அப்படி என்றால் என்ன?
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம்
தொடர்பான மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்கட்சியினர் கடும்
அமளிக்கு மத்தியில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவை அறிமுகம் செய்ய
எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்,
ஆம் ஆத்மிகட்சி, திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் மசோதாவை அறிமுகம் செய்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரேந்திர சிங், "லோக்சபா உறுப்பினர்களின் எதிர்ப்பை கவனித்தில் கொள்கிறேன். மசோதா மீது விவாதம் நடக்கும் போது விரிவாக ஆலோசிக்கலாம்" என்றார். நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்த விவகாரத்தை ராஜ்யசபாவில் இன்று கையிலெடுத்த எதிர்கட்சிகள், அந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா என்றால் என்ன?
உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் திட்டங்களில் பல நிலம்
கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் நின்று போய்விடுகின்றன. இதை தவிர்க்க 117 ஆண்டுகளுக்கு முந்தைய நில கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறது
மத்திய அரசு. இந்த மசோதாவுக்கு நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம்
கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்-2012' என்ள பெயரிடப்படுள்ளது. நிலம் கையகப்படுத்தல்
சட்டம்-1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?
இந்த மசோதா நிறைவேறினால் தனியார் நிலத்தை, அரசு கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதியில் நிலத்தின் மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்பகுதியில் 2 மடங்கும் இழப்பீடு கிடைக்கும். 66% பேர் ஒப்புதல் இருந்தால்தான் நிலத்தை
எடுக்க முடியும் நிலம் தருவோரில் 66% பேரின் ஒப்புதல் இருந்தால்தான் அவற்றை
கையகப்படுத்த முடியும்.
விளைநிலைத்துக்கு தடை
இம்மசோதா நிறைவேறினால் நீர்ப்பாசனம் மிக்க பயிர் சாகுபடி
செய்யும் நிலம் மற்றும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்காது.