Monday, February 16, 2015
துபாய்-ல் IT Support Engineer வேலை வாய்ப்பு
IT Support Engineer
Dubai
Dubai
Type: Full Time Expiry Date: 29 Jan 2015Description: Job Summary The IT Support Engineer is responsible to provide high-quality technical support to the learners, staff, and faculty members within the university. Main Roles and Responsibilities:
Required Qualifications & Skills: Education & Academic Qualifications: Professional Experience: Knowledge, Skills & Abilities:
விண்ணப்பிக்க: இங்கே க்ளிக் செய்யவும்
|
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வெற்றி
ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசத்தை
முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதி. 2011 சட்டசபைத்
தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1,05,328 வாக்குகள்
பெற்றார். தற்போதையே இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 ஆகும். இது
ஜெயலலிதா வாங்கியதை விட 46,233
வாக்குகள் அதிகமாகும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம்
தொகுதியில், 41,488 வாக்குகள்
வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆனந்த்தை வீழ்த்தியிருந்தார். இந்தத் தேர்தலில்
வளர்மதி, ஆனந்த்தை 96,515 வாக்குகள்
வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
எனவே இரண்டு வகையிலும்
ஜெயலலிதாவை முந்தி சாதனை படைத்துள்ளார் வளர்மதி. சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு அதிகமாக
சிறைதண்டனை வழங்கப்பட்ட காரணத்தினால், தேர்தல் விதிகளின்படி தன்னுடைய பதவியை இழந்தார்
ஜெயலலிதா. இதனையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதற்கான இடைத்தேர்தல் கடந்த 13 ஆம் தேதியன்று நடைபெற்று, வாக்குகள் இன்று
எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1,51561 வாக்குகள் பெற்று அதிமுக
வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றுள்ளார்.
2016 பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
2016 சட்டசபைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணி அமைப்போம் என்று பாமக அறி்வித்துள்ளது. மேலும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராகவும் அது அறிவித்துள்ளது. இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அது இடம் பெறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் பாமகவின் அறிவிப்பால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பெரும் விரிசல் உண்டாகும் என்றும் தெரிகிறது. சேலத்தில் நேற்று பாமக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாலையில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெற்ற பா.ம.க. தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பா.ம.க. கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பா.ம.க. தீர்மானித்து இருக்கிறது. தமிழகத்தை இரு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து மீட்டு, வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதில் அக்கறை கொண்ட கட்சிகள் அனைத்தும் பா.ம.க. தலைமையிலான இந்த மாற்று அணியில் இணைந்து பணியாற்ற வரும்படி இந்த பொதுக்குழு கூட்டம் அழைப்பு விடுக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2016-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பா.ம.க. கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணியை முன்நிறுத்துவது என்பதை இந்த மாநாட்டின் மூலம் அறிவிக்கிறோம். இந்த மாநாட்டு தீர்மானங்கள் குறித்து பின்னர் விரிவாக பேசுகிறேன் என்றார். இதையடுத்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி சிறப்புத் தீர்மானத்தை வாசித்தார். அதில், தமிழ்நாட்டை திட்டமிட்டு சீரழிக்கும் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பா.ம.க. கட்சி தலைமையில் மாற்று அணி அமைத்து, அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.
பெட்ரோல் , டீஸல் விலை உயர்வு
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை சரியாக ஒரு மாதம் கழித்து நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்புக்கு இணங்க இந்த விலை உயர்வினை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ளூர் வரி விதிப்புகளுக்கு ஏற்ப பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசா அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 58.88ல் இருந்து ரூபாய் 59.85 ஆகியுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 67 பைசா அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 48.91ல் இருந்து ரூபாய் 49.58 ஆகியுள்ளது கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும் . கடைசியாக கடந்த ஜனவரி 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.42ம், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.25ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில் விலை குறைப்பு அமல் படுத்தப்பட்ட ஒரு மாத காலகட்டத்திற்குள் மீண்டும் விலை உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து இந்திய எண்ணெய் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த முறையை விட சற்றே சரிந்துள்ளது. இவ்விரு விளைவுகளின் காரணமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையை உயர்த்த வேண்டியதாயிற்று. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் விலை நிலவரமும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவற்றில் ஏற்படக்கூடிய போக்கை வைத்து, எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரையில் நடந்த இலவச மருத்துவ முகாம் (படங்கள்)
கீழக்கரையில் நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.பொது மக்கள் ஏராளமானோர் பங்கு கொண்டு பயன்பெற்றனர்
மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முகாமிற்கு தலைமை வகித்தனர்.மாநில செயலாளர் ரஸ்தா செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.
செய்தி: திரு ஜமீல் முஹம்மது