Monday, February 9, 2015
அபுதாபியில் site/service engineer வேலை
Job Description
Site/Service Engineer - SYS - 001LG2
Provides highly visible customer support through the performance of on-site installation, as well as overseeing any necessary diagnoses, troubleshooting, service, and repair of complex equipment and systems. Checks out and approves operational quality of system equipment. Instructs customers in the operation and maintenance of the system. Serves as company liaison with customer on administrative and technical matters for assigned projects. Interprets customers� needs and clarifies if the responsibility for problem resolution falls to sales personnel, customer support reps, or engineers. This job may include any aspect of field support, and is not limited to system hardware and software, PCs, and networking/wireless networking.
KNOWLEDGE |
துபாய் - ல் மாபெரும் பொங்கல் விழா
துபாய்: தினத்தந்தி மற்றும் ரேடியோ சலாம் 106.5 எப்.எம். இணைந்து துபாயில் நடத்திய பொங்கல் விழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. துபாய் & அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள மர்மம் பால்பண்ணையில் மதியம் 12 மணி முதல் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்த விழாவினையட்டி கோலப் போட்டி, உரி அடித்தல் பொங்கல் சமைத்தல் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிகழ்ச்சிகளை ரேடியோ சலாம் 106.5 எம்.எம். குழுவின் ரேவா, நிவி, அன்னி, உத்ரா, அருண்குமார் உள்ளிட்ட குழுவினர் தொகுத்து வழங்கினர்.
பிரபல பின்னணி பாடகர் நிகில் மேத்யூ பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பாடல் ஆசிரியை ரேணுகா சர்மாவின் மாணவ, மாணவியர்களது கலை நிகழ்ச்சிகள் விப்ஜியார் ஈவெண்ட்ஸ் மூலம் நடைபெற்றன. பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நன்றி: ஒன் இந்தியா.
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 24ஆவது விளையாட்டு விழா
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப்
பள்ளியின் 24ஆவது விளையாட்டு
விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளியின் தலைவர் கே.ஆர்.
பார்த்தசாரதி தலைமை வகித்தார். பள்ளி செயலர் ஏ. ராமதாஸ்,
அரிமா சங்கத் தலைவர் வி. ஜெகநாதன்,
மூத்த வழக்குரைஞர் ஜி. கோபால்,
ஏ.வி. குமாரசாமி,
பேராசிரியர்கள் எம். மனோகரன்,
எம். மணிமாறன்,
தொழில் அதிபர் கே.வி.எஸ். பாண்டியன்,
இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் பரிமளா டி. அந்தோணி
வரவேற்றார்.பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வி. பழனியாண்டி விளையாட்டுப் போட்டியினை
துவக்கி வைத்துப் பேசினார்.
விளையாட்டு ஆண்டறிக்கையினை உடற்கல்வி
ஆசிரியர் சரவணக்குமார் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் தனித்திறன்
போட்டிகள் நடைபெற்றன.
நன்றி: தினமணி
தேவிபட்டினம் சிபிஎஸ்இ பள்ளியில் கலை போட்டிகள்
தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல்
சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு கலை போட்டிகள்
நடத்தப்பட்டு பரிசுகள்
வழங்கப்பட்டன. தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் கலை விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கலரிங், நடனம், பாட்டு, ஓவியப் போட்டிகளும், பெற்றோர்களுக்கு ரங்கோலி (கோலம் வரைதல்) போட்டியும் நடைபெற்றது. கலர் செய்தலில் 24 குழந்தைகள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவலதா, முதல்வர் செந்தில் முருகன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினர்.
வழங்கப்பட்டன. தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் கலை விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கலரிங், நடனம், பாட்டு, ஓவியப் போட்டிகளும், பெற்றோர்களுக்கு ரங்கோலி (கோலம் வரைதல்) போட்டியும் நடைபெற்றது. கலர் செய்தலில் 24 குழந்தைகள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவலதா, முதல்வர் செந்தில் முருகன், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினர்.
ராமநாதபுரம் வருகிறார் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம்
ராமநாதபுரம்:செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியின்
பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி 13ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்
ராமநாதபுரம் வருகிறார்.
இது குறித்து பள்ளியின் தாளாளர் பாபு
அப்துல்லா, செயலர்
சின்னதுரை அப்துல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியின் 50ஆம்
ஆண்டு பொன்விழா பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல்கலாம் கலந்து கொள்கிறார். விழாவில் இப்பள்ளியில் படித்து தற்போது
மருத்துவர்களாக பணியாற்றுபவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்