Saturday, February 7, 2015
சவூதி வாழ் நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி – கீழை.ஜெஹாங்கிர் ஆரூஷி, தம்மாம் - சவூதி
சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை
தமிழ் சொந்தங்களே,
சமீப காலமாக நமதருமை சகோதரர்களில் சிலர்
விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.
தாயகமும் செல்ல முடியாமல் விமான நிலையத்தில்
ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவும் முடியாமல் விக்கித்து நின்ற அவர்களின்
பரிதாப நிலை கண்டு என்னால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.
இப்போது என் கதியும் அதே நிலைதான்.விசயத்திற்கு
வருகிறேன்,
நாம் நமது அத்தியாவசிய பயன்பாட்டிற்காக நமது
இகாமாவில் ( STC,ZAIN,MOBILY )போன்ற கம்பெனிகளில் சிம் கார்டு பெற்று அதை முறையாக
பயன்படுத்தி வருகிறோம்.
நம்மில் சிலர் ஒன்று அல்லது இரண்டு சிம்
கார்டுகள் வைத்திருப்பது இயல்பு.
இப்போது பிரச்சினை என்னவென்றால் நமக்கே
தெரியாமல் நம்முடைய இகாமாவில் வேறு யார்,யாரோ சிம் கார்டுகளும்,நெட்கார்டுகளும்
பெற்று பயன்படுத்திவருவதால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் பலியாகி
விடுகிறோம்.
இப்படி ஒருவர் இகாமாவில் வேறொருவர்
நெட்சிம்கார்டு வாங்கி தாறுமாறாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சவூதி ரியால்களுக்கு
பில் பாக்கி வைத்து விட்டதால்,
யாருடைய பெயரில் சிம்பெறப்பட்டதோ அவர்
ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றனர்.
அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்களில்
ஒருவர்தான் தமிழ் சகோதரர்.
நிலுவைத்தொகை முழுவதையும் திருப்பி செலுத்தாத
வரை இந்த நபர் சவூதியை விட்டு வெளியேற முடியாது.
இந்த தவறுகள் எப்படி நடக்கிறது என்பது புரியாத
புதிராகவே இருக்கிறது.
தற்போது எனது இகாமாவில் எனக்கே தெரியாமல் 9
சிம்கார்டுகளும்,5 நெட்சிம்கார்டுகளும் STC மூலம் பெறப்பட்டு யார் யாரோ பயன்
படுத்தி வருவதை கண்டு நொந்து போய் விட்டேன்.
உடனடியாக STC தலைமை அலுவலகம் சென்று புகார்
செய்து விட்டேன்.
அவர்களும் எனது புகாரை பதிவு செய்து விட்டு 24
மணி நேரத்தில் இல்லீகலாக செயல்படும் சிம்கார்டுகளின் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு
விடும் என சொல்லி 5 நாட்களாகி விட்டன.ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதை
போல் உணர்கிறேன்.
இது போல எத்தனையோ நபர்கள் பாதிக்கப்பட்டு
சிம்கார்டு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.
விஷயம் தெரிந்தவர்கள் சுதாரித்துக்
கொள்கின்றனர் விஷயம் தெரியாதவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டு பயன்பாட்டில்
உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
STC சிம்கார்டு வைத்திருப்பவர்கள் 902 என்ற
எண்ணிற்கு 9988 என்ற எண்களை டைப் செய்து மெசேஜ் செய்தால் உடனே நமது இகாமாவில்
எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்ற விபரம் வந்து விடும்.
STC சிம்கார்டு வைத்திருக்கும் சகோதரர்கள் உடனே
உங்களது இகாமாவின் நிலைபாட்டை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட
சிம்கார்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு
காணுங்கள் இது காலத்தின் மிக மிக அவசர அவசியமாகும்
துபாயில் முப்பெரும் விழா
துபாயில் இயங்கிவரும் ஏகத்துவ மெய்ஞானச்
சபையினரால் “லேண்ட்மார்க் ஹோட்டலில்” நடத்தப்பட்ட மீலாது விழா, புத்தக வெளியீட்டு
விழா நேற்றிரவு மஃரிபுக்குப் பின்னர்த் துவங்கி இரவு 10:30 மணியளவில் இனிதே
நிறைவேறியது.
விழாவின் தலைவராக, கலீஃபா A P சஹாப்தீன் (தலைவர் ஏகத்துவ மெய்ஞானச்
சபை, துபை)அவர்கள் மிகச் சிறப்பாக உரைகளும், தொகுப்புரைகளும் வழங்கிச் சிந்திக்கத்
தூண்டும் ஞான விளக்கமளித்தார்கள்.
சிறப்புப் பேச்சாளராக, காயல்பட்டினம் ஹழ்ரத்
ஹுஸைன் மக்கி ஆலிம் அவர்கள் ஓர் உருக்கமான பேருரை நிகழ்த்தினார்கள்.
“பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை” என்னும் தலைப்பில் அதிரை ஷர்புத்தீன் அவர்கள்
தொகுத்த நூலை வெளியிட்டு அதன் சில பகுதிகளை ஆய்வுரை செய்து சொற்பொழிவாற்றினார்கள்.
சகோதரர், கே எம் ஏ
ஷாஹுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் செய்யது அலி
மௌலானா , முஹம்மது அலி (பிலாலி) ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நபி(ஸல்)புகழ்ப் பாடல்
(உருது மொழியில்) சகோதரர் முஹம்மத் ரஸா (காதிரி (பீஜப்பூர்),
மற்றும் தமிழ் மொழியில் சகோதரர்கள் மதுக்கூர் முஹம்மத் தாவூத் மற்றும் ஹாஜா
முஹிய்யத்தீன் ஆகியோர் பாடினார்கள்.
நபிகளார் (ஸல்)
அவர்களைப் பற்றிக் கவிதையை அதிரை,” கவியன்பன்” கலாம் அவர்கள் இந்த விழாவில்
வாசித்தளித்தார்கள்.
அதிரை அப்துற்றஹ்மான்
அவர்கள் சிறப்பான முறையில் “வீடியோ” பதிவுகள் எடுத்தார்கள்; உலகம் முழுவதும் உள்ள
ஆஷிகீன்கள் காணும் வண்ணம் இணையத் தளத்தில் நேரலையும் பதிவு செய்யப்பட்டது.
அதிரை ஷர்புத்தீன்
அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
செய்தி; திரு. கலாம்,
அபுதாபி
பிப்ரவரி 8ம் தேதி இராமநாதபுரத்திலும், பிப்ரவரி 18ம் தேதி கீழக்கரையிலும் இலவசகண் சிகிச்சை முகாம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் அரசு தலைமை மருத்து வமனை, மதுரை மீனாட்சி மிஷன், ராமேசுவரம் சங்கர நேத்திராலயா, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத் துவ மனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகி யவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளது.இதன்படி நாளை (8–ந்தேதி) ராமநாதபுரம் நக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 9–ந்தேதி சத்தி ரக்குடி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திலும், 10–ந் தேதி வழுதூர் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளி, பாம் பன் சின்னப்பாலம் பஞ்சா யத்து யூனியன் பள்ளி ஆகிய வற்றிலும், 13–ந்தேதி பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 17–ந் தேதி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 18–ந்தேதி கீழக்கரை பஞ்சா யத்து யூனியன் பள்ளியிலும் இலவச கண் சிகிச்சை முகாம் கள் நடைபெற உள்ளது.
இதேபோல 19–ந்தேதி ஆர். எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 22–ந்தேதி கமுதி கவுரவா உயர்நிலைப்பள்ளியிலும், 23–ந்தேதி தேவிபட்டினம் கல்யாண மண்டபத்திலும், 24–ந்தேதி பெருங்குளம் பஞ் சாயத்து யூனியன் பள்ளி, பர மக்குடி ஆயிர வைசிய நலச் சங்கம், பி.கொடிக்குளம் கல் யாண மண்டபம், முதுகு ளத் தூர் அரசு தாலுகா மருத்து வமனை ஆகியவற்றிலும், 25–ந்தேதி வாலிநோக்கம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி யிலும், 28–ந்தேதி கமுதி கவு ரவா உயர்நிலைப்பள்ளியிலும் இலவச கண் சிகிச்சை முகாம் கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண் சம்பந்தப்பட்ட பிரச்சி னைகளுக்கு உரிய பரிசோ தனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடையலாம்.
தேவிபட்டினத்தில் தீ விபத்து
தேவிபட்டினம் காந்திநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாக்கியராஜ்(வயது 38). இவ ரது குடிசை வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமி தீ வைத்து விட்டதாக கூறப் படுகிறது.இதில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாச மானது. மேலும் வீட்டில் இருந்த ரூ.5,000 ரொக்கம், 2 பவுன் தங்க தோடு, வெள்ளி கொலுசு, சைக்கிள், மோட்டார் சைக் கிள் மற்றும் ஆவணங்கள் தீக் கிரையானது. இதன் மதிப்பு சுமார் ரூ.25,000 என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோபு வழக்கு பதிந்து விசா ரித்து வருகிறார்.
ராமநாதபுரத்தில் சப்–இன்ஸ்பெக் டர் தேர்வுக்கான இலவச பயிற்சி
போலீஸ்
சப்–இன்ஸ்பெக் டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடை பெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த 21–ந்தேதி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடை பெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் எழுத்துத்தேர்வுக் கான பயிற்சிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், உடல் தகுதித் தேர்வுக்கான பயிற்சிகள் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற்று வரு கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் ஆகியோர் பார்வை யிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த 21–ந்தேதி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடை பெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் எழுத்துத்தேர்வுக் கான பயிற்சிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், உடல் தகுதித் தேர்வுக்கான பயிற்சிகள் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற்று வரு கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் ஆகியோர் பார்வை யிட்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உடல் மற்றும்
கல்வித்தகுதியுடைய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய பாஸ்போர்ட்
அளவு புகைப்படத்துடன் கூட்டரங்கில் உள்ள பயிற்சி ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் சென்று
பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களை 8608682791 மற் றும் 9443882812 என்ற
எண் ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நந்தகுமார்
தெரிவித்தார்.
"வாட்ஸ்அப்பில் புகார் செய்யலாம்' காவல்துறையினர் துண்டு பிரசுரம்
வாட்ஸ் ஆப் மூலம் புகார் செய்யும் வசதி
குறித்த விவரங்கள் துண்டுபிரசுரங்களாக பொதுமக்களிடம் வியாழக்கிழமை மாவட்ட
காவல்துறை சார்பில் தேவகோட்டையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள், சந்தேகத்துக்கிடமான
நபர்கள் நடமாட்டம் குறித்து உடனுக்குடன் மாவட்ட கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு
செல்வதற்கு வசதியாக வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் அஸ்வின் முகந்த் கோட்னீஸ் தொடங்கிவைத்தார். 9498101670 என்ற
எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம்.
இந்த திட்டம் குறித்து தேவகோட்டை துணைக்கண்காணிப்பளர் கருப்பசாமி
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, தேவிகா, சார்பு ஆய்வாளர்கள்
சக்திவேல், சகாதேவன், கண்ணப்பன், புவனேஸ்வரி, போக்குவரத்து சார்பு ஆய்வாளர்
வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு
பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், வாகனங்களில் ஐஎன்டி என
பொருத்தப்பட்ட உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தக்கூடாது என்றும்
விளக்கப்பட்டது.
செய்தி; தினகரன்